Monday 30 November 2015

NENJE EZHU - AR RAHMAN LIVE CONCERT

Seven soul - Walk concert of music by storm A .R rakuman

Many countries in the world by fans of the show who swim Joy Dr. AR. Walk of Rahman concert, coming after a long hiatus on January 16th in Chennai, Coimbatore on January 23 massive Noice and Grains Entertainment Company is announcing that it is to walk.
"This announcement came just seconds social websites this announcement caused the expectation, the show's over expectancy kuttukiratuintat moment our firm support, and encouragement give Rahman sir AK R Events organization thanked 'said that' Noice and Grain 'Company's CEO.

NENJE EZHU - AR RAHMAN LIVE CONCERT

The most ecstatic moment comes, seeing the grand response in social network yesterday we thank our audience for the support, Entertainment has no boundaries.A man who has crossed all the boundaries to entertain peoplecomes again to his motherland. Yes! We Noise and Grains Entertainment are proud to announce that Oscar winner Dr.ARRahman will be performing live in two cities. The concert will be a pure Tamil concert that will take place in Chennai on January 16th and Coimbatore on January 23rd. We thank Ar.Rahman sir and AKR Events Inc for encouraging and supporting us.

Nadigarsangam news 30.11.15




30/11/15, 4:09:43 PM: Jai Fc: As a continuation few more stars joins the list today; Actor Prabhu along with  Vikram Prbahu has donated 5 lakhs ; Actor Sathyaraj along with Sibiraj has donated 2.25 Lakhs & Actor Siva Karthikeyan has donated 5 Lakhs for Tamil Nadu Chief Ministers relief fund through Nadigar Sangam & handed over it to Nadigar Sangam  President Naaser today. Vice President Ponvannan ; EC members Nandha ; Prem Kumar & Hema Chandhiran was also there in this occasion.

rajinimurugan movie Actor Sivakarthikeyan's Director ponram's Interview

ரஜினி முருகன் நடிகர் சிவகார்த்திகேயன்  பிரத்யேக நேர்காணல் !!!
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் பாடல்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் "ரஜினி முருகன்" திரைப்படத்தில் இடம் பெற்ற "என்னம்மா இப்படி பண்றீங்களே மா" பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. இந்த பாடல்கள்  திரைப்படத்திற்கு கூடுதல் பலமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும்  திரையரங்கிற்கு அழைத்து வருவதற்க்கு ஒரு தூண்டு கோலாகவும் அமைந்துள்ளது. நான் ஒரு கானொளியில் கண்டேன் ஒரு "சேக்" அவரது பாணியில் இந்த பாடலை பாடி ரசித்துக் கொண்டு இருந்தார் அதைப்பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த பாடல் படத்திற்க்கு அடையாளமாகவும் மாறியுள்ளது அதற்காக இசையமைப்பாளர் டி.இமானுக்கு என் நன்றிகளை இங்கு பதிவு செய்து கொள்கிறேன். இந்த திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எந்த வேலையாக இருந்தாலும் சரி அதை செய்து முடித்து பெரியாளாக வேண்டும் என்பதை குறிக்கோளாக எடுத்து கிராமத்தில் வாழும் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்வியலை சுவாரசியமாகவும் நகைச்சுவை உணர்வுகளுடன்  காட்சியமைத்து இருக்கிறோம். என்னுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் மற்றும் இயக்குநர் சமுத்திரகனி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவரும் என்பதில் எந்த விதமாக சந்தேகமும் இல்லை. "ரஜினி முருகன்" திரைப்படத்தின் பெயர், அனைத்து தரப்பு மக்களை சென்றடைவதற்குகான முக்கியமான  காரணமாகும். இந்த பெயரை வைக்க வேண்டும் என்று சொல்லும் போது மனதில் சிறிய அச்சம் ஏற்ப்பட்டது.  ஏன்னென்றால் சிறு வயதில் இருந்தே ரஜினி சாரின் வெறித்தனமான ரசிகன் அதே நேரத்தில் அவருடைய பெயரை அவரது அனுமதியுடன் எனது படத்திற்க்கு வைப்பது என்பது பெருமைக்குரியது. நான் பல சுவரொட்டிகளில் பார்த்திருக்கிறேன் ரஜினி சார் ரசிகர்கள் அவர்களது பெயருக்கு முன்னால் ரஜினி சார் பெயரை சேர்ப்பது வழக்கம். அதனால் எதுவும் பிரச்சனை வருமோ என்ற அச்சம் இருந்தது ஆனால் தற்போது அவர்களின் பெரும் அதரவுடம் படம் வெளிவரப்போகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன் ரஜினி சாருக்கு பிடிக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளில் நானும் ஒருத்தன் என்பதால் தான் எனக்கு குழந்தை ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இந்த திரைப்படம் எல்லா தரப்பு மக்களையும் கவரும் விதமாக இருக்கும் எடுத்துக்காட்டாக வயதானவர்கள் விரும்பும் விதமாக குடும்பத்தின் வாழவில்லை நகைச்சுவையுடனும், இளைஞர்களுக்கு ரசிக்கும் விதமாக காதல் காட்சிகளும், குழந்தைகள் விரும்பும் விதமாக பாடல்கள் மற்றும் நகைச்சுவைகளை சேர்த்து ஒரு கதம்பமாக கொடுத்துள்ளோம். படத்தின் சிறப்பு தாத்தா கதாபாத்திரத்தில் வரும் ராஜ்கிரண் அவரை சுற்றி நடக்கும் குடும்ப  அழகியலை நகைச்சுவை உணர்வுடன் பதிவு செய்துள்ளோம். இந்த திரைப்படத்தில் புகைபிடிப்பது போன்ற எந்த காட்சிகளும், இடம் பெறவில்லை. இயக்குநர் பொன்ராம் கதையை விவரிக்கும் தருணத்தில் என்னிடம் கூறியது இந்த திரைப்படம் குடும்பத்துடன் வந்து பார்த்து ரசிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்றார் அத்துடன் குழந்தைகள் ரசிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த திரைப்படத்தில் நான் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கவில்லை அதுமட்டுமின்றி இதற்கு முன் நான் நடித்த எந்த திரைப்படத்திலும் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் தேவைப்படவில்லை அதனால் தவிர்த்திருக்கிறேன் அத்துடன் அதுபோன்ற எண்ணமும் எனக்கு கிடையாது. இதைத்தாண்டி மக்களின் நிலைப்பாடும் தற்போது தெளிவாக உள்ளது மக்கள் திரைப்படத்தை பார்த்து ரசித்து விட்டு பின்னர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விடுகின்றனர். நகைச்சுவை கலந்து ஒரு திரைப்படம் கொடுக்க நினைக்கும் போது நாம் இது போன்ற கருத்துகளை ஆராயமுடியாது. என்னை ரசிப்பவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களாக  இருப்பதால் அவர்களை மதித்து அவர்கள் ரசிக்கும் விதமாக தான் காட்சியமைத்து இருக்கிறோம். இந்த திரைப்படம் மதுரையின் மண் வாசனை மாறாமலும் அதே நேரத்தில் மதுரையை சுற்றியுள்ள கிராமத்தின் கொண்டாட்டமனான் தருணத்தை நகைச்சுவையாக தந்துள்ளோம். படத்தை பார்த்து மக்கள் தான் எப்படி இருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும். ஆனால் நாங்கள் நினைத்ததை  சிறப்பாக கொடுப்பதற்கு ஏற்ப என்னுடன் சூரி, ராஜ்கிரண், இயக்குநர் சமுத்திரகனி, ஒளிப்பதிவாளர் பாலசுப்புரமணியம்  மற்றும் படக்குழுவினர் சிறப்பாக அமைந்தனர். அதனால் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்த்து ரசிப்பார்கள் என்பதில் எனக்கு எந்த வித மாற்று கருத்தும் இல்லை. என குழந்தைக்கு ரஜினி , விஜய், அஜித் இவர்களை பார்த்தால் பெயர் சொல்லும் அளவிற்க்கு தெரியும் தொலைக்காட்சிகளில் பார்த்தால் அவர்களது பெயர் சொல்லி மாமா என்று கூப்பிடுவாள். அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதற்க்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் மா கா பா ஆனந்த நண்பர் என்பதால் தொடர்ந்து அலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவோம். புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்கள் கிடையாது. அலைபேசியில் வாட்ஸ் ஆப், பேஸ்புக் மற்றும் டுவிட்டரை கவனிக்கவே நேரம் போதுமானதாக உள்ளது. என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் தான் இப்போது வரைக்கு என் நெருங்கிய நண்பர்கள் அவர்களுடன் தான் நான் இருக்கிறேன். அவர்களில் ஒரு நண்பர் அருண்ராஜா பாடலாசிரியாரகவும் மற்றும் சிலபடங்களில் நடித்தும் இருக்கிறார். இன்னும் இரண்டு நண்பர்கள் தயாரிப்பு துறையில் வேலை செய்கின்றனர். எனக்கு வாய்ப்பளித்த அனைவரையும் நான் நன்றியுடன் நினைக்கிறேன். என்னை ஒரு கதாநாயகனாக வைத்து இயக்கிய இயக்குனர்களுக்கு தான் நான் பெரிய நன்றி தெரிவிக்க வேண்டும். நான் நினைத்து கூட பார்த்தது கிடையாது கதாநாயகனாக திரையில் வருவேன் என்று. இயக்குநர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை தான்  அதற்கு காரணம்.இயக்குநர் பாண்டிராஜ் தொலைக்காட்சியில் இருந்து நேரடியாக என்னை கதாநாயகனாக நடிக்க வைத்தார். இயக்குநர் துரை செந்தில்குமார்  "எதிர் நீச்சல்" படத்தில் கடைசி இருவது நிமிடம் என்னை வசனம் பேசாமலே நடிக்க வைத்தார். இயக்குநர்  எழில் என்னை வைத்து முழுநீள நகைச்சுவை படத்தை எடுத்தார். இயக்குநர் பொன்ராம் சத்தியராஜ் போன்ற பெரிய நடிகருக்கு இணையாக நடிக்க  வைத்திருந்தார் இவை அனைத்தும் அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை மட்டும் தான். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை பதிவு செய்து கொள்கிறேன் இவர்கள் தான் என் குரு. நான் முதலில் நடனம் தொலைக்காட்சிகலில் கற்றுக் கொண்டது தான் பிறகு பல முயற்சிகளுக்கு பின் தற்போது முன்பை விட நன்றாக ஆடுகிறேன் என்கின்றனர் அதனால் சிறிய நம்பிக்கை வந்துள்ளது. இதே போல் கடினமாக உழைத்தால் பிற்காலத்தில் ஒரு நல்ல நடனமாடும் நாயகனாக வருவேன் என்று நினைக்கிறேன். என்னுடைய காதலி மற்றும் தோழி அனைவருமே என மனைவி மட்டும் தான். காரைக்குடியில் பிரியா மெஸ் கடையில் சாப்பிட்டதில் இருந்து டையட் என்பதை மறந்துவிட்டேன் அந்த அளவுக்கு நன்றாக உணவு இருந்தது. பள்ளியில் ஒரே ஒரு முறை மேடை ஏறி பேச்சுப் போட்டியில் கலந்து இருக்கிறேன் அதற்கு பிறகு கல்லூரி காலங்களில் மட்டும் தான் மேடை ஏறியுள்ளேன். நான் பேட்டி எடுத்த நடிகர்களில் எனக்கு பிடித்தவர் விக்ரம். அவர்ளுடன் ஒருமுறை பேட்டி எடுக்கும் போது அவர் கூறினார் ஒருனாள் நீ கதாநாயகனாக வருவாய் அப்படி நடிக்கும் போது நான் அதில் வில்லனாக நடிப்பேன் என்றார். அப்படி ஒரு கதை கிடைத்தால் கண்டிப்பாக விகரம் சாரைப் பார்த்து வில்லனாக நடிக்க கேட்பேன். ரஜினி முருகன் திரைப்படத்தை குடும்பத்துடன் வந்து திரையரங்கில் பார்த்து ரசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ரஜினி முருகன் இயக்குநர் பொன்ராம் பிரத்யேக நேர்காணல் !!!

தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு வணக்கம்,

"வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்" வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் வெளிவரயிருக்கும் படம் "ரஜினி முருகன் "  இந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும்  கவரும் நகைச்சுவை  திரைப்படமாக இருக்கும். என்னுடையா "வருத்தப்படாத வாலிபர் சங்கம்"  திரைப்படத்தில் வேலைக்கு செல்லாமல் இருப்பதை கொள்கையாக எடுத்து கிராமத்தில் வாழும் இளைஞர்களின் வாழ்வியலை நகைச்சுவையாக  கொடுத்திருந்தேன். ஆனால் "ரஜினி முருகன்" திரைப்படத்தில் எந்த விதமான சங்கமும் இடம் பெறாமல் சற்று புதுமையாக வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கொள்கையுடன் வாழும்  இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் வாழ்வியலை காட்சியமைத்து இருக்கிறேன். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன், ராஜ்கிரண் மற்றும் இயக்குநர் சமுத்திரகனி  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் டீ கடை வைத்தாவது பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கும் பேரன் சிவகார்த்திகேயன், அவருக்கு தாத்தாவாக ராஜ்கிரண் இருவருக்கும் இடையில் நடக்கும் வாழ்வியலை சுவாரசியத்துடன்  நகைச்சுவையாக கொடுத்திருக்கிறோம். திரைப்படத்தின் பெயர்  "ரஜினி முருகன் "  எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பையும், விளம்பரத்தையும் ஏற்படுத்தியது. மதுரை மீனாட்சி திரையரங்கில் படபிடிப்பு நடத்தினேன் படத்தில் ரஜினி சார் படம் வெளிவருவது போல் காட்சியமைப்பு நாங்கள் எந்த வித அறிவிப்பும் கொடுக்கவில்லை ஆனால் அந்த பகுதியில் உள்ள ரஜினி ரசிகர்கள் தாங்களாகவே முன்வந்து ரஜினி திரைப்படம் வெளிவந்தால் எந்த மாதிரியான சூழல் அமையுமோ அதை ஏற்படுத்தி தந்தனர் அதுமட்டும் இன்றி ரஜினி சார் பெயர் வைத்திருக்கிறீர்கள் படம் வெற்றியடையும் என வாழ்த்தி சென்றனர் அந்த தருணம் படப்பிடிப்பில்  மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. படத்தின் கதை எல்லா குடும்பத்திலும் பிரச்சனைகள் வரும் அவ்வாறு வரும் பிரச்சனைகளுக்கான காரணம் சின்னதாகவும் இருக்கும் அல்லது  பெரிதாகவும் இருக்கும் அவ்வாறு சிவகார்த்திகேயனின் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை அழகாகவும், எளிமையாகவும், நகைச்சுவை உணர்வுடன் கலந்து கொடுத்திருக்கிறோம். இந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணமாகவும் குடும்பத்துடன் வந்து ரசிக்கும் விதமாகவும் கண்டிப்பாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என்றார் இயக்குநர் பொன்ராம் .

உறுமின் Prediction Game ஐ ஆர்யா வெளியிட்டார்





தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் உறுமீன் D.டில்லிபாபு தயாரிப்பில் உருவாகியுள்ளதுபாபி சிம்ஹாரேஷ்மிமேனன்கலையரசன் நடித்திருக்கும் உறுமின் prediction  game  ஆர்யா வெளியிட்டார்உடன் உறுமின் படகுழுவினர்  ,இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி ., கதா நாயகன் பாபி சிம்ஹாஇசை அமைப்பாளர் அச்சுநாயகி ரேஸ்மி மேனன்ஆகியோர் கலந்துக் கொண்டனர்இந்த கேமில் உங்கள் பிறந்த தேதியை கொடுத்தால் உங்களது பூர்வ ஜென்மத்தில்என்னவாக இருந்தீர்கள் அடுத்த ஜென்மத்தில் என்னவாக இருப்பீர்கள் என கணிக்கும்.
இதை தங்கள் இனையத்தளங்களில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The Yellow Festival Short Film Making Stills










Nadigar Sangam Leader's Met Actor Suriya




தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகளிடம் நிதி திரட்டி வருகின்றனர். இதில் முதலாவதாக நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி ஒன்றிணைந்து நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் சார்பில் ரூபாய் 25 லட்சம் காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் ஒப்படைத்தார் நடிகர் சூர்யா மேலும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் 10 லட்சம் ரூபாய் காசோலையை நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் வழங்கினார். துணைத் தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஸ்ரீமன், மனோபாலா, லலிதாமாரி, உதயா மற்றும் பிரேம் ஆகியோர் உடன் இருந்தனர்


சூரத்தேங்காய்' படங்களின் ஆடியோ வெளியீடு மற்றும் அறிமுகவிழா நேற்று நடைபெற்றது


வெள்ள நிவாரணத்துக்கு தமிழ் நடிகர்கள் என்ன கொடுத்தார்கள்?ஜாக்குவார் தங்கம் ஆவேச கேள்வி
வெள்ள நிவாரணத்துக்கு தமிழ் நடிகர்கள் என்ன கொடுத்தார்கள் என்று  கில்டு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ஜாக்குவார் தங்கம் ஒரு பட விழாவில் ஆவேசமாகக் கேட்டார்.

இதுபற்றிய விவரம் வருமாறு: மாருதி பிலிம்ஸ் இண்டர் நேஷனல் சார்பில் என் .முத்துக்குமார் தயாரிப்பில் 'தென்னிந்தியன்', 'சூரத்தேங்காய்' படங்களின் ஆடியோ வெளியீடு மற்றும் அறிமுகவிழா நேற்று நடைபெற்றது.

விழாவில் பாடல்களை வெளியிட்டு கில்டு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும் போது-
 " இன்றைய சூழலில் ஒரே நேரத்தில் 2 படங்கள் தயாரித்துள்ள தயாரிப்பாளர் முத்துக்குமாரைப் பாராட்டுகிறேன்.'கோலி சோடா' சின்னபடம்தான்.அது 40 கோடி லாபம் சம்பாதித்தது சிறு படங்கள் வர வேண்டும் . சில படங்களில் நடித்துள்ள 'சூரத்தேங்காய்' நாயகன் அரவிந்த் நன்றாகத்தான் இருக்கிறார் .அவர் தமிழனாக இருப்பதால் மேலே வர முடியவில்லை. இது தான் நம் நாட்டு நிலைமை.

இங்கே இதைப் பேசக்கூடாது என்றிருந்தேன் ஆனால் பேசவேண்டியிருக்கிறது. ஆந்திராவில் புயல்,வெள்ளம் வந்த போது எந்தெந்த நடிகர்கள் எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்கிற பட்டியலைப் பார்த்தேன் .இங்கே கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள்.நம் தமிழ்நாட்டில் நடிகர்கள் யார் எவ்வளவு கொடுத்தார்கள்? ஒன்றுமே இல்லை. இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

தமிழ்நாட்டில் எல்லாம் இழந்து சொந்த நாட்டிலேயே தமிழ்மக்கள் அகதிகளாக இருக்கிறார்கள் . நான் எம்.ஜி.ஆர். வீட்டிலேயே மூன்று ஆண்டுகள் இருந்திருக்கிறேன். அவர் அள்ளி அள்ளி கொடுத்தார். அவருக்குள்ள மனம் ஏன் இப்போது இவர்களுக்கு இல்லை?. தயவு செய்து கொடுத்து உதவுங்கள் நீங்களும் உயர்வீர்கள்.
எங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் சிறுபடங்கள் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறோம். எப் எம் எஸ் என்கிற வகையில் 120 நாடுகளுக்குப் நம் படங்கள் போகின்றன ஆனால் 10 லட்சம் கொடுத்து நம்மை ஏமாற்றிவிடுகிறார்கள்.  இது மாற நடவடிக்கை எடுப்போம். " என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.

தயாரிப்பாளர் மாருதி பிலிம்ஸ் இண்டர் நேஷனல் முத்துக்குமார் பேசும்போது " இந்த விழாவே எங்களுக்கு வெற்றிவிழா தான். நான் இன்ஜினியரிங் பட்டதாரி இவருக்கு ஏன் படம் தயாரிக்கும் வேண்டாத வேலை என்று கேட்டார்கள் சின்ன வயதில் குழந்தை நடனம் ஆடும்போது அம்மா கை தட்டுவாள். கலை எல்லாருக்கும் மனசுக்குள் இருக்கும் .சினிமாவுக்குவரத் தனித்தகுதி தேவையா? உலக உருண்டை தெரியாதவர்களுக்கும் ஏவிஎம் உருண்டை தெரியும். அப்படிப்பட்டது சினிமா ஆர்வம் .நான் 1983ல் 'இவர்கள் வருங்காலத்தூண்கள்' போன்ற சில படங்களில் நடித்தேன் வெளிநாடு போனேன் தற்காப்புக் கலை கற்றேன். 5 வகை நடனம் கற்றேன். தேசிய அளவில் விருதுகூட  பெற்றேன் 12 ஆண்டுகள் 3 படங்களுக்கு இணை தயாரிப்புப்பணி , ஐந்து படங்களில் தயாரிப்பில் என பங்கு பெற்றுள்ளேன். இளையராஜா சாரை வைத்துக் கூட படம் தயாரிக்கிறேன். இப்படி எனக்கு சினிமா அனுபவம் உள்ளது. பணம் இருந்தால் மட்டும் படம் தயாரிக்க முடியாது. சினிமா அனுபவமும் தேவை.இந்த 'சூரத்தேங்காய்' நேரடித் தமிழ்ப்படம்.. 'தென்னந்தியன் ' மலையாளத்தில் வெற்றிபெற்ற படம். இரண்டையும் தயாரித்துள்ளேன். வெற்றிபெற ஆதரவு தாருங்கள் " என்றார்.

'சூரத்தேங்காய்' பட இயக்குநர் சஞ்ஜிவ் ஸ்ரீநிவாஸ் பேசும் போது " நான் 200 படங்களில் பிரபு தேவா, லாரன்ஸ், சிவசங்கர் போன்ற மாஸ்டர்களிடம் நடன உதவி இயக்குநராக பணியாற்றியவன் .சுமார் 50 படங்களில் நடன  இயக்குநராக பணியாற்றியவன்.சூரத்தேங்காய்' படத்தில் 45 புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். 
 தயாரிப்பாளர் தொழில்நட்பக் கலைஞர்கள் ஒத்துழைப்பு இருந்ததால் விரைவில் படத்தை முடித்தேன். அனைவருக்கும் நன்றி ''என்றார். 
விழாவில்  நாயகன் குருஅரவிந்த், நாயகி சமந்தி, ,நடிகர்கள் 
பவர் ஸ்டார்., வேல்முருகன்,,செல்வதுரை ஒளிப்பதிவாளர் ஹரர்முக், பாடலாசிரியர் நலன் கிள்ளி, ஆகியோரும் பேசினார்கள்.

Thursday 26 November 2015

Bajirao Mastani to be dubbed in Tamil & Telugu

Eros International and Bhansali Productions’ magnum opus Bajirao Mastani to also release in Tamil & Telugu
Eros International and Sanjay Leela Bhansali’s forthcoming magnum opus Bajirao Mastani, slated to release on December 18 worldwide, will also release in Tamil and Telugu languages. The period drama will be dubbed in these languages to reach out to a wider audience base in the south markets.   
Well-known lyricist Madhan Karky who has penned songs and dialogues for Tamil hits like Baahubali and Enthiran and popular Telugu lyricist Ramajogayya Sastry known for working on latest hits Srimanthudu and Baahubali will be working on the Tamil and Telugu dubs respectively.  
Talking about the film’s language versions, director Sanjay Leela Bhansali said, “Bajirao Mastani has been a story I have been yearning to tell and I am glad that cine goers in the south regions will get to watch the film in their own language. This is a dream I have lived with for several years and I’m looking forward to audiences across markets living my dream with me”. 
Commenting on this development, Nandu Ahuja, Senior Vice President, India Theatrical, Eros International Media Ltd. said, “Following the success of films in this genre in the south markets, we felt encouraged to dub Bajirao Mastani in Tamil and Telugu. A film of this epic scale and exceptional story telling demanded that we penetrate as wide as possible”. 
As the trailer of the magnum opus recently created a splash on the social media front, the creative maverick reiterates yet again why Bajirao Mastani is India's first truly global film.  
Known to create nothing short of masterpieces, Sanjay Leela Bhansali who is also the recipient of a Padma Shri award, has never failed to deliver films rich in content and high on entertainment, a visual spectacle captured on celluloid.
Starring Ranveer Singh, Deepika Padukone and Priyanka Chopra among others, Bajirao Mastani has been a longstanding dream of the filmmaker which is finally being realized, transporting audiences to a land of love, war and signature opulence. 
Eros International & Sanjay Leela Bhansali’s Bajirao Mastani is scheduled to release 18th December, 2015 worldwide.

Uppu Karuvadu


Director Radha Mohan's Uppu Karuvaadu is  hitting screens on this Friday (November 27). Trade pundits says it  has a decent graph of expectations. The film has many factors that invite the audience to the screens. For the family audience a humour based , decent comic entertainer is the prescription of the day considering the day to day tension that eats the majorpart of the life. And what better than a Radha Mohan film. The increasing list of screens stands testimonial to this factor. The cast of   Karunakaran and Nandhitha have got a track record of various hits , and karunakaran is considered as lucky mascot Uppu Karuvadu too. The cast list consisting of M S Baskar, Mayil Samy , Sham, Kumaresan, and Doubt Senthil assures a rib tickling comedy. 'Uppu karuvadu' is totally a different film from my earlier films in terms of serious content but in the aspect of entertainment it is second to none. The audience will have their penny's worth ' declared Director Radha Mohan.

உப்புக் கருவாடு


நாளை 27 ஆம் தேதி உலகெங்கும் வெளி வர இருக்கும் 'உப்புக் கருவாடு' ரசிகர்கள் இடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறது. இயக்குனர் ராதா  மோகனின் படங்கள் என்றாலே குடும்பத்தோடு படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். குடும்பத்தோடு  வந்துக் கண்டுக் களிக்க  ஒரு நகைசுவைக் கலந்த ஆபாசம் இல்லாத , வன்முறை இல்லாத படமாக உப்பு கருவாடு இருக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது. அதிகரித்து வரும் திரை அரங்குகளின் எண்ணிக்கை இதை உறுதிபடுத்துகிறது. இந்த படத்தில் பிரதான வேடத்தில் நடித்து இருக்கும் கருணாகரன், நந்திதா ஆகிய இருவருமே பெரும் பாலும் வெற்றி படங்களில் நடித்தவர்கள் தான். படம் வெற்றி பெற இதுவும் ஒருக் காரணமாக இருக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது.எம் எஸ் பாஸ்கர்,மயில் சாமி,ஷாம்,குமரேசன், டவுட் செந்தில், என்றுக் குவிந்து இருக்கும் நகைசுவை நட்சத்திர பட்டாளம் படத்தின் வெற்றியை உறுதிபடுத்துகிறது. 'உப்பு கருவாடு' நிச்சயமாக  எனது முந்தைய படங்களில் இருந்து நிச்சயம் வித்தியாசமாக தான் இருக்கும். முழுக்க முழுக்க நகைசுவை கலந்த ஜனரஞ்சகமான படம் இயக்குவது எனக்கு வித்தியாசமான அனுபவம்' என்றுக் கூறினார் இயக்குனர் ராதா  மோகன். 


கள்ளன் படப்பிடிப்பு தொடங்கியது





‘கள்ளன்’ படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியது.

இயக்குனர் கரு.பழனியப்பன் நடிக்கும் ‘கள்ளன்’ படப்பிடிப்பு, கேரள மாநிலம் கொச்சினில் தொடங்கியது. தயாரிப்பாளர் வி.மதியழகன் கேமராவை முடுக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

இயக்குனர் அமீரின் உதவியாளர் சந்திரா இயக்கும் இப்படத்தில் புது டில்லியைச் சேர்ந்த தமிழ்ப்பெண் நிகிதா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

கரு.பழனியப்பன்,நிகிதா,நமோ நாராயணன், சௌந்தர்ராஜா ஆகியோர் நடிக்கும் ‘கள்ளன்’ படத்தை  எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பாக வி.மதியழகன் மற்றும் ஆர்.ரம்யா இருவரும் தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொச்சினைத் தொடர்ந்து தேனி, போடிமெட்டு பகுதிகளில் நாற்பத்து ஐந்து நாட்கள் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.

பசங்க 2 இயக்குநர் பாண்டிராஜ் பிரத்யேக நேர்காணல்!!!










பசங்க 1 படத்தில் நான், என் நண்பர்கள்  என்னுடைய ஆசிரியர்கள் நாங்கள் ரசித்த உலகை படமாக ரசிகர்களுக்கு அளித்திருந்தேன். ஆனால் பசங்க 2 முற்றிலும் மாறுபட்ட ஒன்று, பசங்க 1 ல் நடித்த எந்த கதாபாத்திரங்களும் இதில் இடம் பெறவில்லை முதலில் சொல்லியது போல் பசங்க 2 முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பசங்க 2 படத்தில் எடுத்துக் கொண்ட மையக் கதை என்னவென்று பார்த்தால் நம்ம குழந்தைகள், இங்கு நகரத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் நம் குழந்தைகளை பற்றியது. இந்த நகரத்து குழந்தைகளின் உலகத்தையும் அவர்கள்  பயிலும் கல்வி முறையைப் பற்றியும் அதில் எந்த மாதிரியான கல்வி முறை சிறந்தது என்றும் காட்டியுள்ளோம். இந்த படத்திற்கான கதை "வம்சம்" திரைப்படம் முடிந்த பொழுதே கிடைத்து விட்டது. ஆனால் இந்த மாதிரியான கதையை  உடனே எடுத்து மக்களுக்கு சொல்ல முடியாது அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு இருக்க வேண்டும். அதே சமயத்தில் படத்தில் சொல்லிய கருத்துகளின்  நம்பகத்தன்மை குறையாமல் இருக்க வேண்டும் அதனால் சுமார் இரண்டு வருடம் ஆய்வு நடத்த வேண்டியது அவசியமாக இருந்தது. அந்த சமயங்களில் சும்மாவும் இருக்க முடியாது என்பதால் மற்றொரு பக்கம் "கேடி பில்லா கில்லாடி ரங்கா" படத்தையும் இயக்கினேன். படத்திற்கு ஆய்வு என்பது சின்ன சின்ன விஷயங்கள் மட்டுமே யாரும் இது அறிவியல் ரீதியாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். "அட்டன்சிவ் டைபர் ஹைபர் டிஆக்டிவ்" என்பது இன்றைய காலகட்டத்தில் வளரும் குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைளைப் பற்றிய ஆய்வுகள் அதிகமாக கதைக்கு தேவைப்பட்டது. இப்படி பட்ட குழந்தைகள் நோயினால் பாதிக்கப் பட்ட குழந்தைகள் கிடையாது இவர்கள் "சூப்பர் கிட்ஸ்" அதித புத்திசாலிகள்  என்றும் சொல்லலாம்  ஏன் என்றால் சாதாரணமாக மனிதனின் "ஐகியு " 110 என்றால் அந்த குழந்தைகளுக்கு "ஐகியு " 120, 130 இருக்கும். அவர்களை நாம் சாதாரணமாக பார்த்தால் எப்போதும் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு துறுத்துறு வென்று இருப்பார்கள். அவர்களைப் பற்றிய படம் என்பதால் ஆய்வில் ஏதாவது இதுபோன்ற படம் வந்திருக்கிறதா என்று பார்த்தோம் அப்படி எதுவும் இதுவரை வரவில்லை. மாதிரிப் படங்கள் இல்லாத காரணத்தால் அதே போல் இருக்கும் குழந்தைகளை  சந்தித்து அவர்களை பற்றிய விவரங்களை ஆய்வில் சேகரித்தோம் அதற்காக இரண்டு உதவி இயக்குனர்களை பிரத்யேகமாக வைத்து அதிகமாக மருத்துவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் குழந்தைகளை பார்த்து அவர்களுடன் கலந்துரையாடி விவரங்களை சேகரித்தோம். அதன் பின்னே படத்தை எடுக்க ஆரம்பித்தோம். குழந்தைகள் மிகவும் ஜாலியாக வந்து லூட்டி அடித்து ரசிகர்களை ரசனையில் ஆழ்த்துவார்கள் ஆனால் இந்த படத்தில் எந்த விதமான காதல் காட்சிகளும் இடம் பெறாது. இதில் சூர்யாவும் ஒரு குழந்தைகள்  மருத்துவராக வந்து குழந்தைகளை பற்றியும் குழந்தைகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் நாம் அவர்களை எவ்வாறு பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு விரிவாக எடுத்துரைப்பார் அதுவும் அறிவுரை சொல்வது போல் இல்லாமல் ரசிக்கும் படியாக தான் இருக்கும். எடுத்துக்காட்டாக குழந்தைகள் சேட்டைகள் செய்யும் அதை நாம் நம் சிறுவயதில் நம் அப்பா, அம்மாவிடம் செய்த தருணங்களை நினைவுபடுத்தும் விதமாக எடுத்துக் கொள்ள வேண்டும் அதை விட்டுவிட்டு நாம் ஏன் கோபப்பட வேண்டும் என்பதை எடுத்துரைப்பது தான் சூர்யாவின் கதாபாத்திரம் அதை தவிர்த்து இந்த படத்தில் சூர்யாவிற்காக எந்த மாற்றமும் கதையில் இல்லை இது முழுக்க முழுக்க பசங்களுக்கான திரைப்படம் சூர்யா,அமலாபால் போன்றவர்கள் சில முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள் அவ்வளவு தான். ஆனால் இதுபோன்ற கதைகளில் சூர்யா போன்ற நாயகர்கள் நடிப்பது மிகப்பெரிய ஒன்று ஏனென்றால் அவருடைய  ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்பது அதிகமாக இருக்கும் அவர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். இந்த முறை தெலுங்கு இசை வெளியிட்டு விழாவிற்க்கு போனபோது சூர்யாவிற்கு தமிழுக்கு இணையாக தெலுங்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் அவரது பெயரை மேடையில் உச்சரிக்கும் போதே அவ்வளவு கர ஓசைகள், ஆரவாரங்கள் என்று அரங்கமே அதிர்ந்தது. நான் பயணத்தில் சூர்யாவிடம் கூறினேன் சீக்கிரமாக நேரடி தெலுங்கில் நடித்து உங்களுடைய ரசிகர்குக்கு விருந்தளிக்க  வேண்டும் என்றேன் அப்படிப்பட்ட நடிகர் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்திருப்பது பெருமைக்குரியது. இந்த படத்தை எனது தயாரிப்பு நிறுவனத்தில் முதலில் துவங்கினாலும் நாம் சொல்வது ஒரு நல்ல கருத்து, நல்ல படம் இதை பணத்துக்காக இல்லாமல் ஒரு நல்ல விழிப்புணர்வுக்காக  இருக்க வேண்டும்  என்பதால் இதை சூர்யாவின் வாயிலாக கொண்டு செல்லும் போது இன்னும் அதிக மக்களை சென்றடையும் என்ற நல்ல எண்ணத்தில் தான் நானும் சூர்யாவும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றினோம். இந்த படத்தை பார்த்து விட்டு வெளியே செல்லும் ஒவ்வொருவரும் இரண்டு மணி நேரம் நல்ல ஒரு கருத்தை கொடுத்துள்ளனர் நாமும் நம் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் ஏற்படும். குழந்தையை எப்படி வளர்ப்பது மற்றும் குழந்தை இல்லாதவர்கள் எப்படி குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிந்து கொள்வார்கள் அதுமட்டுமின்றி இந்த படத்தை மற்றவர்களையும் பார்க்குமாறு சொல்வார்கள் அதுதான் எங்களின் வெற்றியாக அமையும். சூர்யாவிற்க்கு ஒரு ஜோடி கதைக்கு தேவைப்பட்ட நேரத்தில் சூர்யா ஜோதிகா என்று முடிவு செய்தோம் அவர்களும் சரி என்று சொன்னார்கள் பின்பு ஜோதிகா அவர்கள் 36 வயதினிலே படத்தில் நடித்துக் கொண்டு இருந்ததால் இதில்  நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் சூர்யாவுக்கு ஜோடி யார் என்று யோசிக்கையில் அமலாபால் இருந்தால் சரியாக இருக்கும் என்பதால் இயக்குநர் விஜயிடம் பேசினேன் அவர் திருமணத்திற்க்கு பிறகு நடிக்க மாட்டேன் என்றார் இருந்தாலும் குழந்தைகள் படம் என்பதால் கேட்டு பார்க்கிறேன் என்று அம்லாபாலிடம் பேசியதும் குழந்தைகள் படம் என்பதால் பின்னர் நடிக்க ஒப்புக்கொண்டார். அதே போல் பிந்துமாதவி அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் இவர்கள் அனைவரும் இணைவதற்கு காரணம் ஒன்று தான் குழந்தைகளுக்கான படம் என்ற ஒன்றுதான். குழந்தைகளுக்கான படம் என்பதில் தீவிரமாக இருக்க காரணம் எனக்கும் இரண்டு குழந்தைகள்  இருக்கிறது. ஒருவன் பிளே ஸ்கூல் போகிறான் இன்னொருவன் யு கே ஜி படிக்கிறான். இருவரும் அளவுக்கு அதிகமாக சேட்டைகள் செய்வார்கள் அவர்களுக்கு வேலையே எங்களது வீட்டு சுவரில் பேனா, பென்சில் வைத்து கிறுக்குவது தான் நாங்கள் அவர்களுக்கு கிறுக்க பென்சில் போன்றவற்றை வாங்கி கொடுப்பதுதான் வேலையே என் வீட்டிற்க்கு வந்தாள் புரியும் அதுதான் என் வீட்டிற்க்கு அழகு . சில சமயங்களில் அவர்கள் வெளியூர் சென்றிருந்தால் அந்த ஓவியங்கள் எங்களிடம் பேசுகின்றன அதுதான் ஆனந்தம். குழந்தைகளிடம் வீட்டிலும் சரி பள்ளியிலும் சரி  எதையும்  தினிப்பது கிடையாது அவனுக்கு பிடித்து இருந்தால் மட்டிமே பள்ளிக்கு அனுப்புகிறேன் என்ன தரம் வாங்கினாலும் அவனை பாராட்டுகிறேன்  அதை அவன் ரசிக்கிறான் இப்பவே அவனுக்கு இசையில் அதிக ஆர்வம் உள்ளது. எனது படத்தின் பாடல்களை அவனுக்கு போட்டுகாட்டுவேன் அவன் ஆடினால் பாட்டு கிட்டு இல்லை என்றால் பாட்டை மாத்து என்று சொல்லிவிடுவான் அவனுக்கு பசங்க 2 வில் உள்ள சோட்டா பீமா பாடல் மிகவும் பிடிக்கும் வீட்டிற்கு போனால் அந்த பாடலைத்தான் போட்டு ஆடுவான். என் அப்பா எனக்கு இந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்தது கிடையாது நான் சுமாராக படித்ததால் என்னை அடி பின்னி எடுத்துவிடுவார் எப்போதும் என்னை என்னுடன் படித்த ஆசிரியர் மகனுடன் ஒப்பிட்டு பேசுவார். அவர் பள்ளிக்கு போகாத காரணத்தால்  அவருடைய ஆசைகளை என்னிடம் திணித்து நிறைவேற்ற ஆசைப்பட்டார் ஆனால் நான் என் அப்பா போல் கிடையாது. என் அப்பாவிடம் நான் சினிமாவுக்கு போகிறேன் என்றேன் அவர் ஜாதகம் பார்த்து விட்டு உனக்கு இரும்பு கடைதான் சரியாக வரும் நீயும் அண்ணனை போல் கடை வைத்துவிடு என்றார். அப்பாவை எதிர்த்து சினிமாவிற்கு வந்தேன். ஒவ்வொருமுறையும் புதிய படம் இயக்கும்  போதும் முதல் படம் இயக்குவது போல் தான் இருக்கிறது இன்னும் நான் உழைத்துக் கொண்டு இருக்கிறேன் அதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது அதற்க்கு மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. எனக்கு பசங்க 2 படத்தின் ஊதியம் குறைவு தான் விஷால் படத்தை விட ஆனால் என்னைப் பெறுத்தவரை எத்தனை படம் இயக்கினாலும்  குழந்தைகளுக்காக எப்போதும் ஒரு படம் இயக்க  வேண்டும் என்பதே என் ஆசையும் மகிழ்ச்சியும். சமீபத்தில் காக்கா முட்டை பார்க்கும் போது அதுபோல் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்குள் தோன்றியது. எப்போதும் என் இயக்கத்தில் நல்ல படங்களும் வித்தியாசமான படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.பசங்க 2 குடும்பத்துடனும்,  குழந்தைகளுடனும் வந்து ரசிக்கும் படியாக இருக்கும் என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை.