Saturday 28 May 2016

Simbhu and Nayanthara traveled in a perfect Love track” says Director Pandiraj


The man who had taken the Tamil cinema to next level in terms of  un seen intensified scripting Director Pandiraj has his own unique style of film making in all the movies.  His phenomenal  success in Pasanga 2 and Kathakali branded him as one of the most desirable commercial creators in Tamil film industry. The hard hitting director is now all set to give a 
 soft romantic feel good entertainer  with  the Simbhu-Nayanthara starrer ‘Idhu Namma Aalu’ which will hit the screens on May 27.

Pandiraj who had earned a label as children and village based director, wanted to break that usual identity and hence he stepped into a pure love based film. "Love is as critical for your mind and body as oxygen. It's not negotiable. The more connected you are, the healthier you will be both physically and emotionally. The less connected you are, the more you are at risk. That’s the power of love. Idhu Namma Aalu will not be a usual love story, rather it would speak on the love life of a I T couple.  Their life is very intriguing and demands lot of attention” says Pandiraj confidently.

Talking about the star cast he says, “There was no need to teach the art and  chemistry of love to both  Simbhu and Nayanthara; they had traveled in a perfect love track in INA. Starting from their smile, silly fights, small chats, their entire love chemistry acted as a backbone for the film. So far, Simbhu and Santhanam’s combination had received huge positive acclaims and from this movie Simbhu and Soori’s duo pack would be highly appreciated by the audience. Santhanam also has made his special appearance in the movie for three scenes and I am very sure that at least 100 times the viewers would laugh out loud. Love after marriage is much bigger and sweeter than pre marriage love. Here we are to cater to the audience with some, Clean and happy feel good entertainer .According to me, the most important goal is to receive audience's applause and I am quiet confident that Idhu Namma Aalu would receive the same”.concluded Director Pandiraj with confidence.

"சிம்பு - நயன்தாராவின் காதல் காட்சிகள் யாவும் நடிப்பு போலவே இல்லை" - சொல்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்

பொதுவாக ஹீரோயிசம், அதிரடி, செண்டிமெண்ட் என இருந்த தமிழ் சினிமாவை, 'பசங்க' திரைப்படம் மூலம் வேறொரு கோணத்திற்கு எடுத்து சென்றவர் இயக்குனர் பாண்டிராஜ் . தனது ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதையம்சங்களை  கொண்டு வெற்றி கண்ட   இயக்குனரான  இவரத்துப் படங்களுக்கு  ரசிகர்கள் மத்தியிலும் , வணிக ரீதியாகவும்  பெரும் வரவேற்ப்பு எப்போதும் உண்டு.  சிம்பு - நயன்தாரா நடிப்பில் மே 27 ஆம் தேதி வெளிவரும் 'இது நம்ம ஆளு' திரைப்படம் இவரது மகுடத்துக்கு  மணி சேர்க்கும் படமாக இருக்கும் என்று திரை வணிகம் கட்டியம் கூறுகிறது.

"மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் காதலை சந்தித்திருப்பார்கள். விடலை பருவத்திலோ, பணிபுரியும் இடத்திலோ, நடுத்தர வயதிலோ, ஏதாவது ஒரு கட்டத்தில் சட்டென்று உரசி போயிருக்கும். சட்டென்று பூக்கும் பூவைப்போல, மின்னலைப்போல எந்த நொடியில் காதல் தோன்றும் என்பதை சொல்ல முடியாது. அந்த காதலை மைய கருத்தாக கொண்டு நான் செதுக்கியுள்ள திரைப்படம் தான் இது நம்ம ஆளு. ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் தம்பதியர்களின் காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எனக்குள் வெகு நாட்களாக இருந்து வந்தது. எனது அந்த தேடலின் முயற்சி தான் இந்த  50 சதவீத காமெடி மற்றும் 50 சதவீத காதல் திரைப்படம். படத்தில் நாயகன் - நாயகியாக நடித்த சிம்பு - நயன்தாராவிற்கு நான் காதல் காட்சிகளை சொல்லி தர வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்கள் இருவரின் சிரிப்பு, காதல் பார்வை, செல்ல கோபம் என அனைத்தும் படத்தின் லவ் கெமிஸ்டிரிக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. மொத்தத்தில் சிம்பு - நயன்தாராவின் காதல் காட்சிகள் யாவும் நடிப்பு போலவே இல்லை; பத்து வருடத்திற்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த படம், எது மாதிரியும் இல்லாம, புது மாதிரியும் இல்லாம, ஒரு மாதிரியா இருக்கும்" என்று  கூறினார்  இயக்குனர் பாண்டிராஜ்.

படத்தின் காமெடி கூட்டணி பற்றி அவர் கூறுகையில், "இதுவரை சிம்பு - சந்தானம் கூட்டணியில்  உருவான காமெடி காட்சிகள் அனைத்தும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து, அவர்களிடம் பெரும் வரவேற்பை  பெற்றவை. அதே போல் இந்த படத்தில் சிம்புவுடன் புதிதாக இணையும் பரோட்டா சூரியின் காமெடியும், ரசிகர்களின் கைத்தட்டல்களுக்கு காரணமாக அமையும். சிறப்பு தோற்றமாக சந்தானம் வரும்  மூன்று சீன்களிலும் சிரிப்பு கரைப்புரண்டு ஓடும்.  மொத்தத்தில், குறைந்தது 100 தடவையாது ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு, தற்போது இது நம்ம ஆளு திரைப்படம் மூலம் நிஜமாகப்போகிறது" என்கிறார் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ். 

Amitabh Bachchan’s Scooter in TE3N is worth Rs 1 Crore!!

On 10th June, the Power of Three will be unleashed as the formidable trio of exemplary actors in the shape of Amitabh Bachchan, Nawazuddin Siddiqui, with Vidya Balan in a pivotal guest appearance will be seen together in Ribhu Dasgupta's emotional thriller TE3N

People have been taken aback with the unusual images and visuals of the megastar Amitabh Bachchan zipping away on an antique blue scooter, but what they don’t know how special it is, not only in the movie but to the actual owner itself!

The scooters vendor and owner Sujit Narayan Sur who gave the scooter to the production for the shoot, has been inundated with offers to sell the scooter ‘driven by Amitabh Bachchan’ but he has refused despite an Rs 1 crore offer! He has modified and customized it for Mr Bachchan in TE3N.

Sujit also known as Bhaida, said, "This second-hand scooter is about 20 years old. I bought it 13 years back and still use it. The unit came with a sketch of what they needed and my scooter's colour matched their requirements. I was thrilled. I will not be able to lend out the scooter ever again. I want to keep it at my Tollygunge home with a life-size photo of Bachchan. And also, the scooter that he rides is not less than a crore in worth. So, there's no question of selling it.”

Well, now that is true passion for cinema memorabilia and for Mr Bachchan!

"சிம்புவின் நடிப்பு திறனை கண்டு நான் வியந்து போகிறேன்" என்கிறார் ஆண்ட்ரியா





இறைவனின் மிக அழகிய படைப்புகளில் ஒன்று பெண் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனால் கோடியில் ஒரு பெண்மணிக்கு தான் அழகுடன் சேர்ந்து, குயில் போன்ற  குரல் வளமும் இருக்கும். அதை உணர்த்தும் வண்ணமாக திகழ்பவர் நடிகை ஆண்ட்ரியா. குறுகிய காலத்தில் பல வெற்றி கனிகளை சுவைத்த இவர், மே 27 ஆம் தேதி வெளியாகும் சிலம்பரசனின்  இது நம்ம ஆளு திரைப்படம் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடிப்பார் என்று பெரும் அளவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. டி ராஜேந்தர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க, ஸ்ரீ தேனாண்டால் பிலிம்ஸ் விநியோகம் செய்துள்ளது. சிலம்பரசனின் சகோதரர் குறளரசன் இசையமைத்திற்கும் இந்த படத்தின் பாடல்கள் யாவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிம்புவுடன் இணைந்து நடித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை  தந்திருக்கிறது என்றும், இது நம்ம ஆளு  திரைப்படம் தனக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கிறது  என்றும் கூறுகிறார் நடிகை ஆண்ட்ரியா. "படப்பிடிப்பு  என்று வந்துவிட்டால் அடுத்த நொடியே சிம்பு  ஒரு நடிப்பு அசுரன் ஆகி  விடுவார்.அவருடைய திறமை அபரிதமானது. . ஒவ்வொரு காட்சியிலும் சிம்புவின் நடிப்பு திறனை கண்டு நான் வியந்து போகிறேன். எதார்த்தமான வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவை நிஜமாக்கி இருக்கிறது  இது நம்ம ஆளு திரைப்படம். பொதுவாகவே வலுவிழந்த கதைகளில்  முன்னணி கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம், எனக்கு கொஞ்சமும் கிடையாது. சிறிய வேடமாக இருந்தாலும் வலிமையான கதையம்சத்தில் நடிப்பதை தான் நான் பெரிதும் விரும்புகிறேன். அந்த வகையில்  இது நம்ம ஆளு  திரைப்படம் எனக்கு பக்கபலமாக அமையும் என்று நம்புகிறேன்" என்கிறார் 

மொத்தத்தில்  இது நம்ம ஆளு  திரைப்படம் ஆண்ட்ரியாவின் நடிப்பு திறன், அழகு,  என  அவருள் குவிந்துக் கிடக்கும் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணமாக  இருக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்

As soon as the Camera rolls, Simbu starts his Magic” says Andrea





Researchers found women judged to have pretty faces also have beautiful voices. And that is non-other than Andrea Jermiah who is all set to grab the success by her upcoming movie Idhu Namma Aalu. The film is a breezy romantic entertainer with STR, Nayanthara and Andrea in the lead  directed by Pandiraj and has music by STR's brother Kuralarasan. T Rajendhar has produced the film and Sri Thenandal Films has acquired the theatrical distribution.

In INA the pretty actress Andrea plays a cute girl next door and she holds her co-star Simbu in high esteem. “Whatever people say about Simbu, as soon as the camera rolls, he is an absolute magic. He gets most of his shots done in a single take, he has amazing screen presence and he is aware of every single thing happening on set.I insist on my self to choose films that are content oriented  and then scheme out  the basic sketch of my character.  I wouldn’t want a wonderful role in an insignificant film, but I’m happy to do a small role in a wonderful film. In that case, working in INA was really fun for me because I've never played the girl next door in any of my previous films” says the charming Andrea. 

On the whole, Andrea in Idhu Namma Aalu is highly expected to give a complete combo of Innocence, sensuality, charm, beauty, and a sense of humour.

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர்!





வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர். நாம் இரசித்துக் குடிக்கும் காபி, அக்னிக் கனல் போல நம் நாவையே எரித்தால் எப்படி இருக்கும். அப்படி விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் நடக்கும் நெருப்பான போராட்டம்தான் வித்தையடி நானுனக்கு

தன் வழி தனி வழி அதுதான் ஒரே வழி. இதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் போகக்கூடிய நேரெதிர் துருவங்கள் (Noir characters).  அவர்களின் காதலும், மோதலும் தான் வித்தையடி நானுனக்கு.  

ஒரே காட்சியில் ஒரே சூழ்நிலைக்கு அதில் உள்ள கதாபாத்திரங்கள் விதம்விதமான மனோபாவங்களை வெளிப்படுத்துவார்கள் . அந்த உணர்வுக்குவியல்களை  தனது (Stroop effect) இசையால்  திகிலும் தீஞ்சுவையும் கலந்து நமக்குள் ஊடுருவுகிறார் இசையமைப்பாளர் விவேக் நாராயண்.
 
அமெரிக்காவில் வசிக்கும் சௌரா சையத் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஆழ்மனத் துடிப்பை எகிற வைத்து, திரையை சூடாக்கும் அனலடிக்கும் காட்சிகளுடன் ராம்நாதன் கே.பி எழுதி இயக்கியுள்ளார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் வித்தையடி நானுக்கு திரைப்படம் எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனங்களின் பெருமை மிகு கூட்டுத் தயாரிப்பு.

----------------------------------------------------------------------------------------------------------------------------

இரு கதாப்பாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் சைக்கோ த்ரில்லர் 'வித்தையடி நானுனக்கு'!...

ராமநாதன் KB இயக்கத்தில், எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ்  தயாரிக்கும் புதிய படம் 'வித்தையடி நானுனக்கு'.

இது ஒரு சைக்கோ த்ரில்லர் படமாகும். 

சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ என்ற படம் நினைவிருக்கிறதா.. அந்தப் படத்தில் இடம்பெற்ற 'வசந்த சேனா வசந்த சேனா...' பாடல் மிகப் பிரபலம். அந்தப் படத்துக்கு டிஎஸ் முரளிதரன் என்ற பெயரில் இசையமைத்தவர்தான் இப்போது 'ராமநாதன் KB' என பெயர் மாற்றிக் கொண்டு இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

அதுமட்டுமல்ல, படத்தின் இரு கதாப்பாத்திரங்களில் ஒருவர்  இவர்தான். இவருக்கு ஜோடியாக சவுரா சையத் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

விவேக் நாராயண் இசையமைக்கிறார். ராஜேஷ் கடம்கோட் ஒளிப்பதிவு செய்கிறார்.
எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் பேனரில் லோகநாதன் D - ஐஎஸ்ஆர் செல்வகுமார்  தயாரிக்கின்றனர்.
படத்தில் ஒரேயொரு பாடல்தான். அதுவும் மகாகவி பாரதியின் 'பாயும் ஒளி நீ எனக்கு 'எனத் தொடங்கும் அற்புதமான பாடல். இதற்கு மேற்கத்திய பாணியில் மெட்டமைத்துள்ளாராம் விவேக் நாராயண்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கொடைக்கானலில்  படமாக்கப்பட்டுள்ளது






மீரா ஜாக்கிரதை' தேசிய விருது நடிகர் பாபிசிம்ஹா பிரதான வில்லனாக வந்து மிரட்டுகிறார்.

மீரா ஜாக்கிரதை' தேசிய விருது நடிகர் பாபிசிம்ஹா பிரதான வில்லனாக வந்து மிரட்டுகிறார்.

 மனித சக்திக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யசக்தி பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுக்க நிலவி வருகின்றன. அது பற்றி கேள்விகளும் ஆராய்ச்சிகளும் உலகெங்கும் தொடர்கின்றன.
ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் நள்ளிரவில்  அமானுஷ்ய சக்தி நடமாடுகிறது. அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து படமெடுக்க இளைஞர்குழு ஒன்று புறப்படுகிறது. அவர்களுக்கு நேரும் அனுபவங்களை இதயத்தின் லப்படப் ஓசை எகிறும் அளவுக்குச் சொல்கிற படம்தான் 'மீராஜாக்கிரதை'
இப்படத்தை ஆர்.ஜி.கேசவன் இயக்கியுள்ளார். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ள இவர், சினிமா ஆர்வத்தால் உந்தப்பட்டு யாரிடமும் பணிபுரியாமலேயே இயக்குநர் ஆகியுள்ளார். இப்படத்தை ஒயிட் ஸ்கிரீன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.அந்தோனி எட்வர்டு தயாரித்துள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலையில் பாண்டிச்சேரி- மரக்காணம் சாலையில் ஓர் இடத்தில் மாய உருவம் ஒன்று தோன்றுகிறது  பலரும் அதைக் கண்டுள்ளனர்.  தொடர்ந்து  மர்மமான  சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன என்று  இதைப்பற்றி ஏராளமான பத்திரிகைச் செய்திகள் வந்துள்ளன. தொலைக் காட்சிகளிலும் வந்துள்ளன.
இதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் கதாசிரியர் மகேஷ்வரன். இவர் இயக்குநர் வசந்தபாலனிடம் உதவியாளராகப் பணி புரிந்தவர்.
மீரா என்கிற பேயே எல்லாரையும் மிரட்டுகிறது. அந்த மீராவாக 'அழகி' மோனிகா நடித்துள்ளார். 'சிலந்தி' என்கிற  படத்தின் மூலம்  ஹாரர் வெற்றிப்பட ராசியும் இவருக்குண்டு.
தேசிய விருது நடிகர் பாபிசிம்ஹா பிரதான வில்லனாக வந்து மிரட்டுகிறார். அவரது அனாயாச நடிப்பு அனைவரையும் கவரும்.
பாண்டிச்சேரி, நாமக்கல், கிழக்கு கடற்கரை சாலை, ஓ எம்.ஆர் சாலை, கேளம்பாக்கம், திருக்கோவிலூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
காதல், பழிவாங்கல் ,நகைச்சுவை எல்லாம் கலந்த திகில் படமாக  இப்படம் உருவாகியுள்ளது.
படத்துக்கு ஒளிப்பதிவு வீரமணி. இவர் ரத்னவேலுவின் மாணவர்.
இசை, ராஜ், படத்தொகுப்பு - சஜித் குமரன். "முழுக்க இரவில் நடக்கும் கதை என்பதால் பரபரப்புக்கு பஞ்ச மிருக்காது.கிராபிக்ஸ் கலக்கலும் உண்டு.  " என்று உத்திரவாதம் தருகிறார். இயக்குநர்.

ஹீரோவாகவும் வில்லனாகவும் ஹரிகுமார் நடிக்கும் “ காதல் அகதீ






ராமய்யா சினி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஓசூர். எம். ராமய்யா தயாரிக்கும் படத்திற்கு “ காதல் அகதீ  என்று பெயரிட்டுள்ளனர்.                                                                        இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடிக்கிறார். தூத்துக்குடி,மதுரைசம்பவம்போடிநாயக்கனூர் கணேசன்திருத்தும் போன்ற படங்களில் நடித்த ஹரிகுமார் இந்த படத்தில் வேறு விதமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
கதாநாயகியாக ஆயிஷா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக மமதா ராவத் நடிக்கிறார். மற்றும் பாண்டியராஜன்தேவதர்ஷினி, சிங்கமுத்து,லொள்ளுசபா மனோகர்பிளாக்பாண்டிமைசூர் மஞ்சுளாதிருச்சி பாபு, ஷாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு        -        ஷியாம்ராஜ்  
விவேகா பாடல்களுக்கு பர்ஹான்ரோஷன் இசையமைக்கிறார்.
கலை   -  பத்மநாபன்  /   ஸ்டன்ட்    -  மிரட்டல் செல்வா                                                               
நடனம்   -  ராதிகா /   தயாரிப்பு மேற்பார்வை -  கார்த்திக் ரெட்டி                                                            
தயாரிப்பு   -  M. ராமய்யா                                                                                                                             
எழுதி இயக்குபவர் -  ஷாமி திருமலை                                                                                             
படம் பற்றி இயக்கம் ஷாமி திருமலையிடம் கேட்டோம்...
இந்த படம் சில நாட்களுக்கு முன் சில திரையரங்குகளில் வெளியிடப் பட்டது. வெளியிடப் பட்ட அந்த நேரத்தில் சரியான திரையரங்குகள் அமையததாலும், கால சூழ்நிலை சரியாக அமையாததால் திரையிடப் பட்ட தியேட்டர்களில் இருந்து திரும்பப் பெற்றனர்.
தற்பொழுது சுமார் 100 க்கும் மேற்பட்ட நல்ல திரையரங்குகளில் மறு வெளியீடு செய்கிறோம்.
ஹரிகுமார் இந்த படத்தில் சத்யா என்ற மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஒரே கதாப்பாத்திரம் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிப்பது குறிப்பிடத் தக்கது. ஹரிகுமாரின் வித்தியாசமான வில்லன் வேடத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என இயக்குனர் ஷாமிதிருமலை தெரிவித்தார்.


"Muthina Kathirika" Movie News






இயக்குநர் சுந்தர்.சி யிடம் பல படங்களில், இணை இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர் வெங்கட் ராகவன். இவர் தற்போது சுந்தர்.சி நாயகனாக நடிக்க 'முத்தின கத்தரிக்கா'என்ற பெயரில் ஒரு படத்தினை இயக்கிவருகிறார். அதனைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். 
இயக்குநர் வெங்கட் ராகவன்;
நான் சுந்தர்.சி சாருடன் பல படங்களில் இணை இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளேன். அவர் நடித்தபடங்களின் காட்சிகளையும் நான் இயக்கியிருக்கிறேன். நான் இயக்குனராக மாறிய பின்,எனக்கு இது முதல் படம்,முதல் ஹீரோ, முதல் காட்சி என்கிற ஒரு உணர்வே இல்லை.  எல்லாரும் ஒரு குடும்பமாக இணைந்து புதியதாக ஒரு படம் செய்கிறோம் என்கிற உணர்வு தான் என்னிடமிருக்கிறது. சுந்தர்.சி சார் என்னிடம்,விரைவாக ஒரு படத்தினை இயக்குமாறு அறிவுறுத்திக் கொண்டே இருப்பார். படம் இயக்கலாம் என்ற முடிவெடுத்தபின் அவரையே நாயகனாக நடிக்குமாறு கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார்.  
அவருடைய அவ்னி மூவிஸ் மூலமாக இந்தப் படத்தினை அவர் தான் தயாரிக்கவும் செய்கிறார்.
 
தற்போது பேய்க்கதைகள், போலீஸ் கதைகள், காதல் கதைகள் என எல்லா ஜானர்-லும் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
வெளிவராத ஒரு ஜானர்-ல் படம் இயக்கலாம் என யோசித்தபோது அரசியல் களத்தினை தேர்வு செய்தோம். மலையாளத்தில் வெளிவந்து’ சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற "வெள்ளிமூங்கா" படத்தினை நானும்,சுந்தர்.சி சாரும் பார்த்தோம். இருவருக்கும் பிடித்திருந்தது. இதையே தமிழில் ரீமேக் செய்யலாம் என்று இருவரும் முடிவு செய்தோம். 
மலையாளப் படத்தினை முழுமையாக அப்படியே ரீமேக் செய்யாமல் அந்தப்படத்திலிருந்து ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு
தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப பல மாறுதல்கள் செய்து,அனைவருக்கும் பிடிக்கும் ஒரு படமாக  எடுத்திருக்கிறோம். அதாவது அந்தப்படத்திலிருந்து ஒரு கோடு மட்டும் எடுத்துக் கொண்டு நாங்கள் ஒரு ரோடு போட்டிருக்கிறோம். மலையாளப் படத்தின் இயக்குநர் இந்தப்படத்தினைப் பார்த்தால் இப்படி கூட எடுக்கலாமா?என்று யோசிக்கும் அளவிற்கு 'முத்தின கத்திரிக்கா' படத்தினை  எடுத்துள்ளோம். 

நான் இயக்குனர் ஆவதற்கு முன்பே என்னிடம் ஒரு ஐடியா இருந்தது. ஒரு மாடர்ன் பாக்யராஜ் சார் மாதிரி என் படத்தில் எந்த ஒரு விஷயம் சொன்னாலும் அதில் ஒரு நகைச்சுவை இருக்க வேண்டும் என்பது தான் அது. அதை இந்தப் படம் முழுவதிலும் பயன்படுத்தி இருக்கிறேன். நான் படத்தின் காட்சிகளை, வசனங்களை எழுதி முடித்த பின் சுந்தர்.சி சாரிடம் காண்பித்தேன். என்னை வெகுவாகப் பாராட்டினார். மேலும் உடனடியாக படப்பிடிப்பினை ஆரம்பிக்கலாம் என்று சொன்னார். அவர் சொல்லிய ஒரு வாரத்தில் நாங்கள் படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டோம் .. 
நடிகர்,மற்றும் தயாரிப்பாளர் என்று வெவ்வேறு நபர்கள் இருந்தால்,அவர்களிடம் தனித்தனியாக நான் சென்று படத்தினைப் பற்றி,காட்சிகளைப் பற்றி விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்.ஆனால் இந்தப்படத்தில் இரண்டும் சுந்தர்.சி சாராக இருப்பதால் எனக்கு எளிதாக இருந்தது. 
படத்தில் ஒரு அரசியல்வாதியின் இயல்பான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம். படத்தின் தலைப்பிலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும். ரொம்ப வருடங்கள் திருமணமாகாமல் பேச்சிலராக இருக்கும் இளைஞர்களைத் தான் 'முத்தின கத்திரிக்கா'என்று சொல்வார்கள். கதாநாயகனை இமிடேட் செய்யக்கூடிய இந்தத் தலைப்பிற்கு ஓ.கே சொன்னதற்கே சுந்தர்.சி சார்க்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன். மேலும் காட்சிஅமைப்பிலோ, வசனங்களிலோ எந்த ஒரு இடையூறும் செய்யாமல் என்னை சுதந்திரமாகச் செயல்படவிட்டார்.b
இந்தப் படத்தின் படப்பிடிப்பினை நாங்கள் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், குற்றாலம் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் நடத்தினோம்.
 
40வயதான அரசியல்வாதி ஒருவர் அவர் வாழ்க்கையிலும் சரி,அரசியலிலும் சரி எதுவும் சாதிக்கமுடியாமல் இருக்கையில்,ஒரு கட்டத்தில் ஒரு பெண் மூலமாக அவரது வாழ்வில் நடைபெறும் ஒரு நிகழ்வு அவரை,அரசியலில், சொந்த வாழ்க்கையில் எந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது என்பது தான் கதை. படம் முழுவதும் இந்த ஒரு கதாபத்திரத்தின் செயல்பாடுகளைப் பற்றியே தானிருக்கும். அவரை ஏன் மக்கள் வெறுக்கிறார்கள்,அவருடைய எதிரிகள் யார்?அவரால் ஏன் அரசியலில் சாதிக்கமுடியவில்லை என ஒவ்வொரு காட்சியும் அதனைச் சுற்றியே வடிவமைக்கப்பட்டிருக்கும். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கின்றது. பாடல் காட்சிகளும் கதையோடு இணைந்து வரும்படியாகப் படமாக்கியுள்ளோம். 
கதாநாயகனுடன் இணைந்து ஒரு நகைச்சுவை நடிகர்,படம் முழுவதும் தோன்றுவார். அந்தக் கதாபத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்துள்ளார். அவருடைய அந்த கதாபாத்திரத்திற்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். அவர் மட்டுமல்ல,படத்தில் ஒரு நகைச்சுவைப் பட்டாளமே உள்ளனர். அனைவரும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு மெருகூட்டியுள்ளனர். 
படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு தந்தனர். கதாநாயகி பூனம் பஜ்வா மற்றும், ஒளிப்பதிவாளர்,எடிட்டர், இசையமைப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர், டான்ஸ் மாஸ்டர் என,என்னோடு பணியாற்றிய அனைத்து 
டெக்னீசியன்களும் விரைவாகப் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் எந்தவொரு இடத்திலும் படத்தின் தரம் குறையாமல் பார்த்துக் கொண்டனர். இந்தப் படத்தைப் பொறுத்தவரை,யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில்,அனைத்துக் காட்சிகளிலும் நகைச்சுவை இழையோடியிருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.  சண்டைக்காட்சியானாலும்,செண்ட்டிமெண்ட் காட்சியானாலும்,காதல் காட்சியானாலும் அதில் ஒரு நகைச்சுவை இருக்கும். ரசிகர்கள் அனைத்துக் காட்சிகளிலும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். அது நிச்சயமாக நிறைவேறும். அனைத்துத் தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு மகிழக்கூடிய ஒரு முழுமையான நகைச்சுவைப் படம் இது. என்று 
இயக்குநர் வெங்கட் ராகவன் கூறினார்

Tamil films are embarking on a 'U-turn' heroine sarata Srinath










Saturday 21 May 2016

யூடியூபில் 90 லட்சம் ஹிட் தந்த நம்பிக்கையில் 'அம்சனா' படம் உருவாகிறது!

ஒரு காலத்தில் சினிமாவை வந்தடைய ஒரு வழிப்பாதைதான் இருந்தது இப்போது பல வழிப் பாதைகள் உருவாகியிருக்கின்றன.

தொலைக்காட்சி  அறிமுகம்  மூலமும்,,குறும்படங்கள், ஆல்பங்கள் போன்றவற்றின் மூலமும்  என்றெல்லாம் பலதிசைகளிலிருந்து எளிதில் சினிமாவில் நுழைய முடிகிறது.

அப்படி ஒரு புதிய திசையிலிருந்து வந்து முற்றிலும் புதுமுகங்களின் ஆதிக்கத்தில் 'அம்சனா' என்கிற ஒரு படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

'முத்து முத்து' என்கிற மியூசிக் ஆல்பம் யூடியூபில் ஒன்பது மில்லியன் , அதாவது  90 லட்சம் ஹிட்டடித்து கலக்கியது. அதில் டிஜே என்பவர்  பாடியதுடன் தோன்றி நடித்து அந்த ஆல்பத்தை  உருவாக்கியும் வெளியிட்டார்.இவரது இயற்பெயர் டிஜெந்தன் அருணாச்சலம் .இவர் சர்வதேச புகழ் பெற்ற பாடகர், பாடலாசிரியர், இசைத் தயாரிப்பாளர்.

உலக நாடுகளில் அதற்குக் கிடைத்த பரவலான பலத்த வரவேற்பு திரையில் நுழையும் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் துணிவையும் டிஜேக்குத் தந்திருக்கிறது. களத்தில் இறங்கிவிட்டார்.  'அம்சானா'  படக்குழு உருவானது. டிஜேதான் நாயகன்,நாயகி ஸ்ரீபிரியங்கா.ஒளிப்பதிவு--- சிவானந்தம், இசை---டிஜே, இயக்கம்-- நிஷாந்த்  என  படக்குழு உருவானது.


திட்டம் போட்டு ஆயத்தமானார்கள்.  பாண்டிச்சேரிக்குப் ப டப்பிடிப்புக்கு  புறப்பட்டுப்போய் ,பாதிப்படத்தை முடித்து விட்டார்கள். இப்படத்தை லிசா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இது ஒரு காதல் கதைதான் என்றாலும் திரைக்கதை,  அதைச் சொல்லும் விதம் எல்லாவற்றிலும் புதிய பாதை புதிய பயணம் என்றிருக்குமாம்.

இப்போதெல்லாம் படமெடுப்பதை விட அதை வெளியிடுவது சிரமமாக இருக்கிறது. எனவே வியாபாரம், வெளியீடு தளங்களிலும் மும்முரமாக இயங்கி வருகிறது இந்தப் படக்குழு.

 'அம்சனா', வேகமாக வளர்ந்து வருகிறது.

Varun Tej - Sekhar Kammula - Dil Raju Film Launch Soon

Mega Prince Varun Tej has established a unique identity for himself within a short span of time, with his story selection and acting abilities. Sekhar Kammula is known for making clean entertainers that attract young adults as well as family crowds. The two of them will now be working with noted producer Dil Raju very soon. 

A love story between an NRI from USA and a girl from Telangana will form the core of this movie. " Sekhar Kammula is a wonderful narrator and Varun has already established a name for himself. I am happy to announce a project with them. Shooting will start soon", said producer Dil Raju. 

Details about the cast and crew as well as other dates will be formally announced by the team soon. 

Tuesday 17 May 2016

ராதாரவியுடன் நடித்தது மறக்க முடியாதது! - விஷால்


ராதாரவியுடன் நடித்தது மறக்க முடியாதது என்று விஷால் கூறினார். 

விஷால்- ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் 'மருது' .இப்படத்தை  'குட்டிப்புலி' ,'கொம்பன்' படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ளார்.   கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி.என். அன்புசெழியன் தயாரித்துள்ளார்..

இப்படத்தில் தென்னிந்திய நடிகர்சங்கத் தேர்தலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த ராதாரவியும் விஷாலும் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.

'மருது' படம் பற்றி விஷால் கூறும் போது, ராதாரவியுடன்  இணைந்து நடித்தது உள்பட பலவற்றையும் பகிர்ந்து கொண்டார். 

இனி விஷாலுடன் பேசுவோம்!

'மருது' படத்தின் கதை?


'அவன் இவன்' படத்திற்குப் பிறகு நல்லதொரு கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.அப்படி ஒரு படமாக அமைந்த கதைதான் 'மருது. என் முந்தைய கிராமத்துப் படங்கள் 'தாமிரபரணி' ,'சண்டக்கோழி' படங்களில்  கூட நகரம் சார்ந்த சிலகாட்சிகள் வரும். வெளிநாட்டு பாடல் காட்சிகள் வரும்.இதில் அப்படி இல்லை. முழுதுமே கிராமம்தான். முத்தையா இந்தக் கதையைச் சொன்ன போதே கிராமம், காட்சிகள், என் தோற்றம், உடல்மொழி எல்லாமே மாறுபட்டதாக இருக்கும் என்கிற நம்பிக்கை வந்தது.

இது ஒரு பாட்டி பேரன் பற்றிய உணர்வு பூர்வமான கதை என்றாலும்  ஒரு முழுமையான கமர்ஷியல் படத்துக்குரிய எல்லாமும் இருக்கும் .

படப்பிடிப்பு இடங்கள்? 
இந்தக் கதைக்கு தேவைப்பட்டதாலும் இயக்குநரின் ஊர் என்பதாலும் ராஜபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. 

ராஜபாளையம் ஊர் பற்றி இண்டு இடுக்கு ,சந்து பொந்து எல்லாமும் முத்தையாவுக்குத் தெரிந்து இருந்ததால் ஒரு பிலிம் சிட்டியைப் போல அந்த ஊரை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தினார்.

அந்த ஊர் மண், மக்கள் எல்லாமே எனக்குப் புது அனுபவமாகவும் மறக்க முடியாததாகவும் இருந்தது. அந்த ஊரில் 72 நாட்கள் வாழ்ந்தது அப்பப்பா மறக்க முடியாதது அவ்வூர்  மக்கள் எங்கள் மீது காட்டிய அன்பும் பாசமும் ஆச்சரியப்பட வைத்தது.

ஒரு காட்சியில் நான் நடித்த போது எனக்குக் காலில் அடிபட்டு விட்டது. ஒரு அம்மா பதறிப் போய் என் காலை தன் மடியில் தூக்கி வைத்து நாட்டு மருந்துவ சிகிச்சை செய்தார். என் தரப்பினர் அதை வேண்டாம் ஏதாவது ஸ்பிரே அடிக்கலாம் என்ற போது 'எங்க புள்ளைக்கு என்ன போடணும்னு எங்களுக்குத் தெரியும்' என்று உரிமையோடு கூறியது நெகிழ்ச்சி அனுபவம்.

பொதுவாகப் படப்பிடிப்பு நடந்து முடிந்து வந்து விடடால் மீண்டும் அங்கு போக ஆர்வம் வருவதில்லை. ஆனால் அங்கு ஒரு பந்தம் ஏற்பட்டு விட்டது  அதனால்தான் அங்கு  ஏதாவது செய்யத்தோன்றியது கழிப்பறை இல்லாமல் சிரமப்பட்ட மக்களுக்குக் கழிப்பறைகள்  கட்ட ஏற்பாடு செய்தோம் .மீண்டும் அங்கே போக ஆசையாக இருக்கிறது. ராஜபாளையம் என்கிற ஊர் நாய்களுக்குப் புகழ்பெற்றது என்பார்கள். அழகான பெண்களுக்கும் ராஜபாளையம் பெயர் பெற்றது என்பேன். அங்கு அழகழகான பெண்களைக் கண்டு வியந்தேன். ரசித்தேன்.

உடன் நடித்தவர்கள் பற்றி?


கதாநாயகி ஸ்ரீதிவ்யா. என்னுடன் அவர் நடிக்கும் முதல் படம் 'மருது' தான்.  அவருக்குப் பொருத்தமான வேடம் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

என் படங்களில் என் பாத்திரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதைப் போலவே எனக்கு எதிரியாக வரும் வில்லன் பாத்திரமும் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்புவேன்.

இதில் வில்லனாக வரும் ஆர்கே சுரேஷ் ஒரு மனுஷனே கிடையாது. அவர் ஒரு பேய், ராட்சசன் என்று கூறலாம். அந்த அளவுக்கு வெளுத்து வாங்கியிருக்கிறார். எங்கள் இருவர் சம்பந்தப் பட்ட காட்சிகள் நேஷனல் ஜியாகிரபி போல மிரட்டும்.

படத்தில் கிராமத்துப் பாட்டியாக மலையாள நடிகை லீலா நடித்திருக்கிறார்.
அவருக்கு இதுதான் தமிழில் முதல்படம். பிரமாதப் படுத்தியிருக்கிறார். நான்தான் கதாநாயகன், ஸ்ரீதிவ்யாதான் கதாநாயகி என்றாலும் பாட்டி பாத்திரம்தான் படத்தின் உயிர் என்று கூறுவேன்.
 
ராதாரவி அண்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

சூரியுடன் நான் நடித்துள்ள 4வது படம் இது. சூரி இதில் மாறுபட்ட பாத்திரத்தில் வருகிறார் இயக்குநர் மாரிமுத்து கதாநாயகியின் அப்பாவாக வருகிறார். நமோ நாராயணன் ,அருள்தாஸ்  போன்றோரும் நடித்துள்ளார்கள். 

ராதாரவியுடன் நடித்தது பற்றி?

 
முத்தையா என்னிடம் கதை சொன்ன போது அந்தப் பாத்திரத்துக்கு ராதாரவி அண்ணன் நடித்தால் நன்றாக இருக்கும்  உங்களுக்கு எப்படி என்று தயங்கியபடி கேட்டார். இதை ஏன்  கேட்கத் தயக்கம்? யார் தேவையோ அவர்களை நடிக்க வையுங்கள் தயங்காதீர்கள் நடிக்கட்டுமே ,என்றேன். இதுவரை நாங்கள் இணைந்து நடித்ததில்லை நடிக்கட்டுமே என்றேன்.

நடிகர் சங்க தேர்தல் பிரச்சினையில் அவர் எதிர் தரப்பில் நின்றார் என்று பகைமை பாராட்டுவதும் அவர் முகத்தில் விழிக்கவே மாட்டேன் என்பதும் முட்டாள்தணம் என்பேன்.நடிகர் சங்க தேர்தலில் அவர் ஒரு கோணத்தில் நின்றார்,நான் ஒரு கோணத்தில் நின்றேன் அவ்வளவுதான். 

அவர் என் படத்தில் நடிப்பது பற்றி படக்குழுவுக்கு மட்டுமல்ல வேடிக்கை பார்க்க வந்த மக்களுக்கும் கூட எதிர்பார்ப்பு பரபரப்பு இருந்தது.. நாளைக்கு வருகிறார். இன்றைக்கு வருகிறார் என்ன நடக்கப்போகிறதோ என்று  எதிரிகளைப் போல விறுவிறுப்பு காட்டினார்கள். ராதாரவி அண்ணன் வந்தார் நடித்தார். அவர் சிறந்த அனுபவம் உள்ள நடிகர்.

சங்கம் வேறு ; நடிப்பு வேறு. சங்கம் வேறு;தொழில்வேறு இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. ராதாரவி அண்ணன் வந்தார் என்னைக் கட்டிப் பிடித்தார். 'இப்போது நிறைய தொடர்ச்சியாக படங்கள் நடிக்கிறேன் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.நடிகர் சங்கத்துக்கு எந்த உதவி தேவைப் பட்டாலும் சொல்லுப்பா செய்றேன் 'என்றார் அவர் ஒரு மூத்த நடிகர். அவர் மரியாதைக் குரியவர் என்பதை என்றும் நான் மறந்ததில்லை. 

தொழில்நுட்பக் குழுவினர் பற்றி..?


முத்தையா உணர்வு பூர்வமாக கதை சொல்வதில் திறமையானவர். அவர் சொன்ன கதை பிடித்து விட்டது. இந்தப் படத்தில் அவர் சொன்னதை மட்டுமே செய்தேன். அவர் எழுதும் வசனம் சக்தி மிக்கதாக இருக்கும். அழுத்தமாக இருக்கும். .இன்று கிராமம்  பற்றி சினிமா எடுக்க ஆளில்லை. அவர் கிராமம் பட்டுமே தனக்குத் தெரியும் என்பவர் அவர் வாழ்வில் நடந்த பல அனுபவங்களை இதில் வைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் முத்தையாவுக்கு ஏற்ற பெண்பாட்டி போல இருப்பவர்.அவர்களுக்குள் அவ்வளவு பொருத்தம்.இமானின் இசையில் தொடர்ந்து எனக்கு ஹிட் பாடல்கள் அமைந்து வருகின்றன. இதிலும் அப்படி உள்ளது

.' மருது'  படம் மே 20 -ல் வெளியாகிறது. இது நிச்சயமாக எனக்கு திருப்தியான படமாக இருக்கும்.பார்ப்பவர்களுக்கும் திருப்தியான  மகிழ்ச்சியூட்டும் படமாக இருக்கும்.


பழம்பெரும் நடிகர் அமரர் .ஐசரி வேலன் அவர்களது 29ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது.


பழம்பெரும் நடிகர் அமரர். ஐசரி வேலன் அவர்களது 29ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில்  நடிகர் சங்க தலைவர் நாசர் ,பொது செயலாளர் விஷால் , பொருளாளர் கார்த்தி , துணை தலைவர் பொன்வண்ணன் , செயற்குழு உறுப்பினர்கள் பசுபதி ,ஸ்ரீமன் ,S.பிரேம்குமார் ,A.L.உதயா  .S.D.நந்தா , தளபதி தினேஷ் , சங்கிதா  ,அறங்காவல் குழு உறுப்பினர் S.V.சேகர் , நியமன செயற்குழு உறுப்பினர்கள் ஹேமச்சந்திரன் , காஜா மைதின், வாசுதேவன்  மற்றும் நடிகர் K.ராஜன் ,நடிகர் க்ரிஷ் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சங்கத்தை சேர்ந்த 1௦௦௦ நலிந்த கலைஞர்களுக்கு அறங்காவல் குழு உறுப்பினர் ஐசரி கணேஷ் வேஷ்டி , சேலை வழங்கினார்.அதுமட்டுமின்றி நடிகர் சங்க உறுப்பினர்களது குழந்தைகள் 153 பேருக்கு கல்வி வசதியும் , நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கான உதவி தொகையை ரூபாய் 5௦௦இல் இருந்து ருபாய் 1௦௦௦ மாக உயர்த்தி தர முன்வந்துள்ளார்.

விழாவில் பேசிய ஐசரி கணேஷ் , நடிகர் சங்க கட்டிடம் இருந்த வரை என்னுடைய தந்தை  அமரர்.ஐசரி வேலன் அவர்களுடைய நினைவு அஞ்சலி விழா நடிகர் சங்கத்தில் வைத்து தான் நடைபெற்றது. நடிகர் சங்க கட்டிடத்தை இடித்த பின்னர் தந்தையின் நினைவு அஞ்சலி விழா எங்களுடைய கல்லூரியில் வைத்து நடைபெற்று வந்தது. இப்போது மீண்டும் நடிகர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெறுவது எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
                  பத்து நாட்களுக்கு முன்னர் உலக நாயகன் கமல் ஹாசன் அவருடைய திரைப்படத்தின் துவக்க விழாவை இங்கே வைத்து தான் நடத்தினார் அதன் பின்னர் இப்போது நான் இங்கு விழாவை நடத்தியுள்ளேன். விழாக்கள் இங்கே தொடர்ந்து நடக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.

 நடிகர் சங்க கட்டிடத்தில் என் தந்தை திரு. ஐசரி வேலன் அவர்களது பெயரில் 350 பேர் அமரும் வசதி கொண்ட மண்டபம் ஒன்றை நான் கட்டி தரவுள்ளேன். அந்த மண்டபம் ஏ.சி வசதி கொண்ட மண்டபமாக இருக்கும். இந்த மண்டபத்தில் நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய இல்லத் திருமண விழாக்களை கட்டணம் ஏதும் இன்றி இலவசமாக நடத்தலாம் என்று கூறினார்.

 நாசர் பேசுகையில்

 ஐசரி வேலன் சிறந்த மனிதர் அவர் வளர்ந்த விதம் அவர் கண்ட கனவு என எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்ட பொழுதுதான் எங்களுக்கு தெரிந்தது. நாங்கள் ஐசரி வேலனின் கனவைதான் இன்று வரைக்கும் நடிகர் சங்கத்தில் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம் என்று .அன்று நடிகர்சங்க வளர்ச்சிக்காக அவரும் எங்களை போலவே தேர்தலை சந்தித்தார். நடிகர்சங்கத்தைப் பற்றிய அவர் கனவும்’ நோக்கமும் தான் எங்களுக்கு முக்கியம்.இன்று வரை அவருடைய கனவைத்தான் நாங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோமே தவிர எங்களுடைய கனவை அல்ல
     இந்த நிகழ்வு அவர்களுடைய குடும்ப வளாகத்தில் நடந்திருக்கலாம். ஆனால் இந்த மண்ணில் நடக்க வேண்டும் என்பது ஐசரி கணேசின்  ஆசையாக இருந்திருக்கிறது.
           இந்த ஆறு மாதங்களில் நடிகர் சங்கம் பெரும் வளர்ச்சியை கண்டிருக்கிறது என்றால் அதில் ஐசரி கணேஷ்க்கும் பெரும் பங்கு இருக்கிறது.
           இந்த மண்ணிற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் அறங்காவல் குழு உறுப்பினர் கமல் ஹாசன் அவர்கள் ஒரு அழகு சேர்த்தார் ( படத்தின் பூஜை ) இன்று இங்கு ஒரு அழகு சேர்ந்திருக்கிறது.
கார்த்தி பேசுகையில்:
           தன் குடும்ப விழாவை நடிகர் சங்கத்தில் நடத்தி உறுப்பினர்களை மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
     இந்த ஆறு மாத காலத்தில் உறுப்பினர்களுக்காக நிறைய சலுகைகள் ஒய்வூதியம் , கல்வி ,மருத்துவ உதவி, என பல்வேறு திட்டங்கள் நிறைவேறியதற்க்கு முக்கிய பங்கு ஐசரி கணேஷ் அவர்கள்தான் .
     சென்ற மாதத்தில் இருந்து 80 வயதிற்கு மேல் உள்ள உறுப்பினர்களுக்கு மாதம் 2000   ருபாய் ஒய்வூதியம் அனுப்பப்பட்டுவருகிறது.  
அதுமட்டுமின்றி 70 வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்கும் , ஊனமுற்றவர்களுக்கும்  ஒய்வூதியம் கொடுப்பதற்காக கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது .அதுவும் வெகு விரைவில் அவர்களுக்கு சென்றடையும் .அதில் 150 பேருக்கு 500ருபாய் கொடுக்கப்பட்டு வந்திருந்தது . ஐசரி கணேஷ் அவர்கள் நமக்காக அந்த 150 பேருக்கு 1000 ரூபாயாக உயர்த்தி கொடுத்திருக்கிறார் .அது மட்டுமல்லாமல் ஐசரி கணேஷ் AC.சண்முகம் அவர்களிடம் கேட்டமைக்காக அவரும் 150  பேருக்கு ஒய்வூதியம் 1000 ரூபாயாக உயர்த்தி கொடுக்க முன் வந்துள்ளார்.
         விழாவின் நிறைவில் ரூபாய் 1௦ லட்சத்துக்கான காசோலையை திரு. ஐசரி கணேஷ் அவர்கள் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார்.