Tuesday 27 September 2016

Dwayne “The Rock” Johnson in a never seen before avatar in Disney’s MOANA. -The film releases in India on 2nd December, 2016-


Walt Disney Animation Studios’ new feature film “Moana” is about an adventurous teenager who, with help from demigod Maui, sails out on a daring mission to prove herself a master wayfinder and save her people.
Hollywoods highest paid Dwayne “The Rock” Johnson is back, and this time in a never before seen avatar as the uproarious tattooed demi-God Maui in Disney’s Moana. The actor returns in a voice-role alongside newcomer Auli'i Cravalho in Disney’s next adventure –Moana. The film is all set to sail into Indian theatres on the 2nd of December, 2016.
Three thousand years ago, the greatest sailors in the world voyaged across the vast Pacific, discovering the many islands of Oceania. But then, for a millennium, their voyages stopped – and no one knows why. From Walt Disney Animation Studios comes “Moana,” a sweeping, CG-animated feature film about an adventurous teenager who sails out on a daring mission to save her people. During her journey, Moana (voice of Auli‘i Cravalho) meets the once-mighty demigod Maui (voice of Dwayne Johnson), who guides her in her quest to become a master wayfinder. Together, they sail across the open ocean on an action-packed voyage, encountering enormous monsters and impossible odds, and along the way, Moana fulfills the ancient quest of her ancestors and discovers the one thing she’s always sought: her own identity.
When we reached out to Disney India to confirm the release date,  they said, “We are extremely excited about the release of Disney’s Moana in India. The film is a fun-filled adventurous journey of two amazing characters – Moana and Maui - which will appeal to youngsters and families along with kids. Dwayne Johnson, plays the vibrant Maui and audiences will love his humorous avatar. Disney’s Moana truly celebrates the coming together of fantastic story, brilliant creative vision, great talent, humour, music and adventure,” says Amrita Pandey, Vice President, Studios, Disney India.
The diverse and dynamic team behind the film’s inspired music include Tony®-winner Lin-Manuel Miranda (Broadway’s Pulitzer Prize-winning and multiple Tony-winning “Hamilton,” Tony-winning “In the Heights”), Grammy®-winning composer Mark Mancina (“Speed,” “Tarzan” “The Lion King”) and Opetaia Foa‘i (founder and lead singer of the world music award-winning band Te Vaka).
Directed by the renowned filmmaking team of Ron Clements and John Musker (“The Little Mermaid,” “Aladdin,” “The Princess & the Frog”) and produced by Osnat Shurer (“Lifted,” “One Man Band”) and “Moana” sails into Indian theatres on Dec. 2, 2016 in 2D, 3D and IMAX formats.

Devi(L) movie Pressmeet chennai


Tuesday 20 September 2016

Oscar winning Lupita Nyong'o and Mira Nair attend the TIFF premiere of 'Queen of Katwe'




And Lupita Nyong'o continued to captivate fans with her outstanding red carpet appearances one after another.

On Saturday at the 41st Toronto International Film Festival Queen of Katwe premiere, the 33-year-old continued to surpass expectations in a jaw-dropping yellow-and-blue number, which she accessorized with over $600,000 worth of jewelry from Tiffany & Co.


The actress set the red carpet on fire in a strapless House of Herrera yellow gown, adorned with velvet, royal blue floral patterns, which accentuated her slender figure and toned arms. 

She added a dramatic flair with a matching color headpiece that wrapped around her head, popping a bright red to her lips and opted for metallic blue pumps.

The actress joined her fellow co-star David Oyelowo and director Mira Nair in the excitement of their film.

Internationally acclaimed filmmaker, Mira Nair's forthcoming drama, Disney's Queen of Katwe is all set to release in India on 7th October, 2016. The movie will premiere at the prestigious Toronto International Film Festival in September, 2016. Like Nair’s previous films, Queen of Katwe is a heartwarming and riveting drama. Based on real-life events, the film chronicles the inspiring story of an underdog from the streets of rural Uganda. She’s a young girl whose world rapidly changes when she is introduced to the game of chess; as a result of the support from her family and community she develops confidence and determination to pursue her dream to become an international chess champion.

Queen of Katwe is all set to release in India on 7th October, 2016

samayangalil movie press meet


Friday 16 September 2016

Mammootty released Kurangu bommai first look poster

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் "இயக்குநர் இமயம்" பாரதிராஜா - விதார்த் இணைந்து நடிக்கும், நித்திலன் இயக்கும் "குரங்கு பொம்மை" படத்தின் முதல்பார்வை போஸ்டரை  (First Look Poster) மெகா ஸ்டார் மம்முட்டி வெளியிட்டார்.

"Mega Star" Mammootty Released the First Look of Bharathiraja & Vidharth *ing "Kurangu Pommai", directed by Nithilan, Produced by Shreya Shree Movies LLP.

சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் 'ஆண்தேவதை' தாமிரா இயக்குகிறார்!


 பெயர் சொன்னாலே போதும் அவர் ஏற்கிற பாத்திரத்தின் அடர்த்தி தெரியும் என்கிற பெயரெடுத்துவிட்டவர்
​ 
சமுத்திரக்கனி. அவர் இப்போது நடிக்கும் புதிய படம் 'ஆண் தேவதை' .

பெண்தானே தேவதை? இது என்ன 'ஆண் தேவதை'  என  யோசிக்கும் அளவுக்கு தலைப்புக்குள்ளேயே புதுமைப்பொடி வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தை தாமிரா இயக்குகிறார். இயக்குநர் சிகரம் கே. பால
​ச்​
சந்தரின் மாணவரான இவர், ஏற்கெனவே பாலச்சந்தர்-- பாரதிராஜா இருவரையும் 'ரெட்டச்சுழி' படத்தில் இணைந்து நடிக்க வைத்து  இயக்கியவர்.

'ஆண்தேவதை'யில் சமுத்திரக்கனி, ரம்யாபாண்டியன், கவின், கஸ்தூரி, 'பூ' ராமு, இளவரசு, ஸ்ரீநிகா, பிரகதீஷ், அறந்தாங்கி நிஷா
​,யாழ் நிலா, மயில்சாமி, அருண்மொழி, திலீபன் ​
மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை.

இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடுகிற சட்டை முதல் பேசும் அலைபேசியின் நெட்ஒர்க் வரை  எதையும் அதுவே முடிவு செய்கிறது.

இப்படிப்பட்ட இன்றைய பரபர சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்.

ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும்  என்ன வேறுபாடு? இன்று நிலவும் பொருளாதார சூழலும், கடன் வாங்கும் மனப்பான்மையும் மனிதர்களை எந்த எல்லைக்கு அழைத்து
​ச்
 செல்கிறது என்பதையும் படம்  உணரவைக்கும்.

' இயக்குநர் சிகரம்' பாலச்சந்தரிடம் கொண்ட அன்பின், மதிப்பின் அடையாளமாக அவரது நினைவாக 'சிகரம் சினிமாஸ்' என்று தன் நிறுவனத்திற்குப் பெயர் வைத்து
​ஃ​
பக்ருதீனுடன் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார் தாமிரா.  இப்படத்தைத் தன் குருநாதருக்கு சமர்ப்பணமாக்கவும் உள்ளார்.

சற்றே இடைவெளிக்குப்பின் வந்தாலும் , விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம்  என்று திறமைசாலிகளுடன் கை கோர்த்துக் கொண்டு முழு பலத்தோடு திரைக்களத்துக்கு வந்திருக்கிறார் இயக்குநர் தாமிரா.

'ஹே பெண்னே' என்னும் 'கட்டப்பாவா காணோம்' படத்தின் முதல் பாடலை இன்று வெளியிட்டது சோனி சவுத் மியூசிக் நிறுவனம்




2016 ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை கலந்த கற்பனை திரைப்படமாக உருவெடுத்து வருகிறது சிபிராஜ் - ஐஸ்வர்யா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கும்  'கட்டப்பாவ காணோம்' திரைப்படம். இயக்குனர் மணி சேயோன் (இயக்குனர் அறிவழகனின் இணை இயக்குனர்) இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த 'கட்டப்பாவ காணோம்' படத்தை 'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

'கட்டப்பாவா காணோம்' படத்தின் முதல் பாடலான "ஹே பெண்னே..." பாடலை இன்று சோனி சவுத் மியூசிக் நிறுவனம் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

"இதுவரை நாம் சிபிராஜை அதிரடி, செண்டிமெண்ட், திரில்லர் மற்றும் வில்லன் காட்சிகளில்  தான் பார்த்து இருக்கிறோம்....ஆனால் அவருக்கு காதல் பாடல்கள் வெகு குறைவாக தான் அமைந்திருக்கிறது..எனவே அவருக்காக ஒரு சிறந்த காதல் பாடலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதே எங்கள் 'கட்டப்பாவ காணோம்' படத்தின் 'ஹே பெண்னே பாடல்..." என்று உற்சாகமாக கூறுகிறார் 'கட்டப்பாவ காணோம்' படத்தின் இயக்குனர் மணி சேயோன்.

"காதலை முற்றிலும் இந்த காலத்திற்கேத்த இசையோடு ஒருங்கிணைத்து உருவாக்கியதே எங்கள் 'கட்டப்பாவ காணோம்' படத்தின் ஹே பெண்னே பாடல். சிட் ஸ்ரீராம் மற்றும்  அலிஷா தாமஸ், ஐஸ்வர்யா குமார் ஆகியோர்   மீண்டும் ஒருமுறை இந்த பாடலில் தங்களின் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளனர்... முழுவதும் புதுமையான தோரணையில் எங்களின் ஹே பெண்னே பாடல் உருவாகி இருக்கிறது..." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'கட்டப்பாவ காணோம்' படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி

The Single track “Hey Penne” from ‘Kattapava Kanom’ was released today by Sony Music South..


It can be clearly said that one of the most anticipated  Fantasy-Comedy film of 2016 is Sibiraj - Aishwarya Starrer ‘Kattapava Kanom’. Directed by Mani Seiyon (Associate Director Arivazhagan), Kattapava Kanom is being produced by Madhusoodhanan Karthik, Shivakumar, Venkatesh and Lalith under the banner ‘Wind Chimes Media Entertainment’

The first single track "Hey Penne' from Kattapava Kanom was released today by Sony Music South through their official Twitter page.

“We all know that Sibiraj has earned acclaims for his Action, Sentiment, Thriller and Villain sequences… But when it comes to Love songs, it will be merely less. Hence I decided to give a good love number for Sibiraj, and it is ‘Hey Penne’ song from our Kattapava Kanom." says Mani Seiyon, the Director of Kattapava Kanom enthusiastically.

"Hey Penne is a groovy number.. Sid Sriram has once again thrown his magic in this beautiful medley along with Alisha Thomas and Aishwarya Kumar. We are quite sure that hey penne song will be completely youthful and fresh..." says Santosh Dhayanidhi, the composer of Kattapava Kanom in a harmonic tone.

நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவரவிருக்கும் பக்தி படம் மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா

இந்த படத்தில் புதுமுகங்கள் மகி,சரவணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். திவ்யா நாகேஷ், ஜான்விகா இருவரும் நாயகிகளா நடிக்கிறார்கள்.  முக்கிய வேடத்தில் டெல்லிகணேஷ் டி.பி.கஜேந்திரன் நடிக்கிறார்கள்...மற்றும் நதியாஸ்ரீ, வைகை கவிதா, ராகவி, சுஷ்மிதா,ஸ்ரீஹரி, பிரதீப்,  ஜெனிபர்  ஆகியோருடன் ஏராளமான நகைச்சுவை நடிகர்களும் நடிக்கிறார்கள்.                                        
இசை  -   தேனிசை தென்றல் தேவா ,     ஒளிப்பதிவு -  N.D.சிவமனோகரன்                              
கலை  -  ஆர்.மோகன் ,      நடனம்  -  சம்பத் குமார்                                                             
படத்தொகுப்பு  -  உதயசங்கர் ,     தயாரிப்பு நிர்வாகம் -  ஆத்தூர் ஆறுமுகம்.                 
அலுவலக மேலாளர் -  பத்மநாபன்                                                                                               
இணை இயக்கம் – சங்கர்ஜி                                                                                                                    
கதை ,திரைக்கதை,வசனம்,பாடல்கள் எழுதிE.ஜெயபால் சுவாமி தயாரிக்கிறார்.                                                                                                                                       
சந்திர கண்ணையன்  இயக்குகிறார்.                                                                                                                                         
படம் பற்றி இயக்குனர் கூறுகையில்...  இப்பொழுது சாமி படங்கள் தயாரிப்பு குறைந்து விட்டது. பேய் படங்களை மட்டுமே எடுக்கிறார்கள். ஆனால் நாங்கள் துணிந்து சாமிபடமாக இந்த மேற்கு முகபேர் ஸ்ரீ கனகதுர்கா  படத்தை எடுத்துள்ளோம்.   ஜாதகத்தில் தோஷம் இருக்கும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதனால்  தோஷம் அவர்களை படாத பாடு படுத்தி விடுகிறது...விரதமிருந்து அம்மனை வேண்டுகிறார்கள்..ஸ்ரீ கனகதுர்கா எப்படி அவர்களை காப்பாற்றினாள் என்பதும்.

திருமணமாகி ஹனிமூனுக்கு  ஒரு ஜோடி செல்கிறார்கள். ஆனால் அந்த பையனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் இருந்துள்ளது ..காதல் நிறைவேறாத அந்த பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.. பிறகு பேயாக வந்து அந்த புது மணத்தம்பதிகளை வாழ விடாமல் தடுக்கிறது. அவர்கள் ஸ்ரீ கனகதுர்கா அம்மனுக்கு விரதம் இருந்து  எப்படி பேயிடம் இருந்து மீண்டார்கள்  என ஒரு கதை..வித்தியாசமான திரைக்கதையின் மூலம் அனைவரும் ரசிக்கும் வகையில் எடுத்துள்ளோம்.  சாமி படங்களுக்கும், பாடல்களுக்கும்  தேவா எப்போதும் பேர் போனவர் ...இந்த படத்திலும் ஐந்து ஹிட்டான பாடல்களை கொடுத்துள்ளார்.

இந்த படத்தை  காளையப்பா பிக்சர்ஸ் இம்மாதம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

Thursday 15 September 2016

இப்படம் குறித்து இயக்குனர் நித்திலன் கூறும்போது,


மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும். அதன் குறியீடாக வைத்து ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியிருக்கிறேன். இதில் விதார்த்துக்கு அப்பாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். வித்தார்த்துக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் என்ற கேரளா பெண் நடித்திருக்கிறார்.

இப்படம் அப்பா, மகனுக்கும் இடையேயான ஒரு பாசத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம். ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பை கதைக்கருவாக வைத்து படம் இயக்கியுள்ளேன். இப்படத்தின் படப்பிடிப்பு 59 நாட்கள் நடந்தது. சென்னையை சுற்றியே படம் நகரும்.

படத்தில் மொத்தம் 3 பாடல்கள். இதில் நா.முத்துக்குமார் 2 பாடல்களை எழுதி இருக்கிறார். ‘பீச்சு காத்து பார்சல் என்ன வெல...’ என்ற பாடலும், ‘அண்ணமாறே அய்யாமாறே...’ என்ற பாடல் வரிகள் நா.முத்துக்குமார் எழுதியவை. இப்படத்தின் மூலம் அஜனீஷ் லோக்நாத் என்பவர் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. 

நடிகர் விதார்த் என்னுடைய ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்ற குறும்படத்தை பார்த்து என்னை அழைத்தார். என்னை பாராட்டி ஒரு படம் பண்ணலாம் என்று கூறினார். நானும் ‘குரங்கு பொம்மை’ படத்தின் கதையை கூறினேன். அவரும் கதையை கேட்டு சிறப்பாக இருக்கிறது என்று கூறி படம் இயக்க ஆரம்பித்தோம்.

பின்னர், பாரதி ராஜா சாரிடம் நான் கதையை சொல்ல முதலில் தங்கினேன். அவரை சந்தித்து கதையை சொன்னேன். கேட்டவுடனே நன்றாக இருக்கிறது என்றார். அவர் சரி என்று சொன்ன பிறகு தான் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. என்னுடைய குறும்படத்தை பாரதிராஜா சார் ஏற்கனவே பார்த்து பாராட்டியிருக்கிறார்.

இப்படம் என்னுடைய முதல் குறும்படமான ‘புதிர்’ தாக்கத்தின் காரணமாக உருவானது. 


குரங்கு பொம்மை 

நடிகர்கள், நடிகைகள்

விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ், பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, ரமா

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை                     : B.அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு  : N.S.உதயகுமார்
படத்தொகுப்பு  : அபினவ் சுந்தர் நாயக்
வசனம்  : மடோன் அஸ்வின்
பாடல்கள்  : நா.முத்துக்குமார்
நடனம்  :ராதிகா
நிர்வாகத் தொடர்பு: M.கண்ணன்
ஸ்டண்ட் மாஸ்டர்: மிராக்கல் மைக்கேல்
இயக்கம்  : நித்திலன்
தயாரிப்பு  : ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP

அதாகபட்டது மகா ஜனங்களே" படத்தின் பாடல்களுக்கு ஆயுள் அதிகம் – இசையமைப்பாளர் D.இமான் !!

எனக்கு பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும் என யாரெல்லாம் சொல்லுவார்களோ அவர்கள் அனைவருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் பிடிக்கும். இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவு நான்கு பாடல்களாக வெளிவந்துள்ளது.இப்படத்துக்கு அவர் கூடுதலாக ஒரு பாடலை வழங்கியுள்ளார். அப்பாடல் ஆல்பத்தில் மட்டும் இடம்பெறும். இப்படம் காமெடி கலந்த த்ரில்லர் படமாகும். நடிப்பில் வெவ்வேறு பரிமாணங்களை காட்டி வரும் நடிகர் தம்பி ராமையா அவர்களுடைய மகன் உமாபதி தான் இப்படத்தின் கதாநாயகன். எல்லோருக்கும் சில விஷயங்கள் அமையும் என்று கூறுவார்கள் அதே போல் எனக்கு கதைக்கு ஏற்ற கதாநாயகனை தேடும் போது உமாபதி அமைந்தார். இக்கதைக்கு புதுமுக கதாநாயகன் தான் தேவைபட்டார். அதே போல் நாம் தினம்தோறும் அக்கம்பக்கத்தில் பார்க்கும் முகம் போல் இருக்க வேண்டும் நான் தேடி வந்த போது சரியான தேர்வாக அவர் அமைந்தார். படத்தின் கதாநாயகி ரேஷ்மா ரதோர் இவர் தெலுங்குவில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். தமிழில் நாங்கள் தான் அவரை அறிமுகம் செய்கிறோம். படத்தில் அவர் கதாநாயகியாக அல்லாமல் கதையின் நாயகியாக இருப்பார். கதைக்கு பொருத்தமான ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தில் மனோபாலா , பாண்டியராஜன் , நரேன் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் முழுவதும் கதாநாயகனோடு பயணமாகும் ஒரு கதாபாத்திரத்தில் கருணா நடித்துள்ளார். படத்துக்கு ஒளிப்பதிவு பி.கே.வர்மா. படத்தொகுப்பு ஏ.எல்.ரமேஷ் இவர் அப்பா , நாடோடிகள் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர் தம்பி ராமையாவின் மகன் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தில் தம்பி ராமையாவின் பங்கு என்ன என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கும். அதற்கு பதில் இதுவரை யாரும் பார்காத தம்பி ராமையாவை இப்படத்தில் பார்க்கலாம் என்று இயக்குநர் இன்ப சேகரன் கூறினார்.
அதாகபட்டது மகா ஜனங்களே திரைப்படத்தின் இசையமைப்பாளர் D.இமான் பேசியது :- 

அதாகபட்டது மகா ஜனங்களே திரைப்படம் புதுமுகங்கள் நடித்து புதுமுக இயக்குனருடன் இணைந்து மிக சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ள திரைப்படம். நடிகர் தம்பி ராமையா அவர்களின் மகன் உமாபதி அறிமுகமாகும் இப்படத்தில் ரேஷ்மா ரதோர் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இன்ப சேகர் அவர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்களில் வேலை செய்யும் போது மிகவும் இனிமையாக இருந்தது. ஏனென்றால் இப்படத்தில் அனைத்துமே பீல் குட் பாடல்கள் தான். நானும் யுகபாரதி அவர்களும் இணைந்து இப்படத்தில் நான்கு பாடல்களை உருவாக்கியுள்ளோம். அதில் மூன்று பாடல்கள் மெல்லிசை பாடல்கள். மீதம் உள்ள ஒரு பாடல் கதாநாயகனின் அறிமுக பாடல் ஆகும். “ ஏனடி இப்படி என்ன “ என்ற வரிகளோடு துவங்கும் ஒரு பாடல் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்பாடலின் கவர் வெர்ஷனாக ஸ்ரேயா கோஷலின் குரலில் ஐந்தாவது பாடல் இருக்கும். இப்பாடல் திரைப்படத்தில் இருக்காது , இப்பாடலை நாங்கள் படத்தின் விளம்பரத்துக்காக பயன்படுத்தவுள்ளோம். எனக்கும் தம்பி ராமையா அவர்களுக்கும் மைனா திரைப்படத்தில் இருந்து நல்ல உறவு இருந்து வருகிறது. அவர் தன்னுடைய மகன் நடிக்கும் இப்படத்துக்கு நான் தான் இசையமைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் நான் அவரிடம் எனக்கு நிறைய படங்களுக்கு இசையமைக்கும் பணிகள் இருக்கிறது ஆதலால் என்னால் இசையமைக்க முடியாது என்று கூறினேன்.    முதலில் நீங்கள் கதை கேளுங்கள் கதை பிடித்திருந்தால் இசையமையுங்கள் என்று கூறினார். நானும் கதை கேட்டேன் , கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு பணிகள் இருப்பதனால் அதில் இருந்து தப்பிக்க நல்ல கதையை நன்றாக இல்லை என்று என்னால் கூற இயலாது அல்லவா ?? அதனால் கதை பிடித்திருக்கிறது நான் இசையமைக்கிறேன் கூறினேன். என்னுடைய வேலை பளுவை புரிந்து கொண்டு என்னோடு பணியாற்றிய இக்குழுவுக்கு நான் நிச்சயம் நன்றி கூற வேண்டும். நான் சரியான இடைவேளையில் இப்படத்துக்கு பாடல்களை தரவில்லை , நான் எப்போது தருகிறேனோ அப்போது பாடலை படமாக்கிய குழுவுக்கு நன்றி. என்னோடு வேலை செய்ய வேண்டும் என்று அபிமானத்தோடு இருந்த அக்குழுவுக்கு நான் கூடுதல் கவனத்தோடு பாடல்களுக்கு இசையமைத்து அதை அன்பாக திருப்பி கொடுத்தேன்.     என்னை நேசித்து வருபவர்களின் கதை எனக்கு பிடித்து போகும் பட்சத்தில் அவர்கள் புதியவர்கள் , கை தேர்ந்தவர்கள் என்று பாராது நான் அவர்களோடு பணியாற்றுவேன். இப்படத்தில் பாடல்கள் நன்றாக வர வேண்டும் என்று காரணத்தால் நான் பாடவில்லை.குரலுக்கு இது சரியாக இருக்கும் என்று தோணும் பாடல்களை மட்டும் தான் நான் பாடுவேன். இசையமைப்பாளர் இமான் பாடகர் இமான் அவர்களை மதிக்கவே மாட்டார். இப்பாடலுக்கு நான் பாடினால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் கேட்கும் போது நான் நிச்சயம் பாடுவேன் , மற்றபடி நான் இசையமைக்கும் பாடல்களுக்கு சரியான பாடகர்கள் தான் குரல் கொடுப்பார்கள். இப்படத்தின் பாடல்களுக்கு வாழ்நாள் அதிகம் இருக்கும் , எத்தனை வருடங்கள் கடந்து போனாலும் இப்படத்தின் பாடல்களை அனைவரும் நியாபகம் வைத்து கொள்வார்கள். அந்த ஒரு தரம் இப்படத்தில் உள்ளது என்பதை நான் பெரிதும் நம்புகிறன். நிறைய மக்கள் இப்படத்தின் “ ஏனடி இப்படி என்னை “ சிங்கள் பாடல் வெளியான போது என்னை மிக பெரிய அளவில் உலக தமிழர்கள் அனைவரும் பாராட்டினார்கள். ஆம் , ஒரு பெண் இலங்கையில் இருந்து இப்பாடலை கேட்டு விட்டு சென்னைக்கு நேரில் வந்து என்னை சந்தித்து வாழ்த்தினார். அதிலும் அவர் அவருடைய மகன் கூறியதால் கேட்ட முதல் சினிமா பாடல் இது தான் , உங்கள் பாடல் என்னை மிகவும் கவர்ந்துள்ளது என கூறி என்னை வாழ்த்தியது எனக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது. இந்த அளவிற்கு இப்பாடல் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்து எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதை வைத்து தான் இப்படத்தின் பாடல்களுக்கு ஆயுள் அதிகம் என கூறுகிறேன் என்றார் இசையமைப்பாளர் D.இமான்.

Wednesday 14 September 2016

ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை


 தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் ஹீரோக்கள் வில்லன்களாக வேஷம் கட்டி கலக்கிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் வில்லன்கள் காமெடியன்களாகி மக்களை வயிறு குலுங்க வைத்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர் இயக்குனர் ரவிமரியா… ரவிமரியாவை பொறுத்தவரை பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டியதில்லை. முக பாவனைகளாலும் உடல் மொழியாலுமே நம்மை சிரிக்க வைத்துவிடுவார். அவரிடம் பகிரி படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசினோம்.

   ‘’பகிரி படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் ஏற்கெனவே இரண்டு படங்களை தயாரித்தவர். ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குனராக படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். முக்கியமாக கலைஞர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கினார்.

   இதில் நான் எக்ஸ்பெக்டிங் கவுன்சிலராக நடித்திருக்கிறேன். அதாவது கவுன்சிலராவதற்காக காத்திருக்கும் கேரக்டர். எப்படியாவது அந்த வார்டு கவுன்சிலராகிவிட வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால் அது இறுதிவரை நடக்காது. அதற்கான காரணத்தை படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

   அது தவிர ஹீரோயினின் அம்மாவை சைட் அடிக்கும் கேரக்டர். ஹீரோயின்னா சைட் அடிக்கலாம். ஹீரோயின் அம்மாவா? என்று தயக்கத்துடன் தான் ஸ்பாட் போனேன். ஆனால் ஹீரோயின் அம்மாவாக ஹீரோயினுக்கு சமமான அழகான ஆர்ட்டிஸ்டை தேர்வு செய்திருந்தார் இயக்குனர். ஸ்பாட்டிலும் ஹீரோயினுக்கும் ஹீரோயின் அம்மாவுக்கும் யார் அதிக அழகு என்ற போட்டி நடக்கும். அதனாலேயே நான் படப்பிடிப்பு முடிந்தவுடன் நமக்கெதுக்கு வம்பு என்று வீட்டுக்கு கிளம்பிவிடுவேன்.

  இந்த படத்தில் நான் வரும் காட்சிகள் எல்லாமே சிரிக்க வைக்கும். ஒரு பார் காட்சி எடுக்கும்போதே எல்லோரும் கைதட்டினார்கள்.

   இந்த படத்துக்கு பகிரி என்று டைட்டில் வைத்தார் இயக்குனர். எங்கு படப்பிடிப்பு போனாலும் அங்கு வரும் புதிய மனிதர்களிடம் பகிரிக்கு விளக்கம் கேட்போம். எல்லோருமே முழிப்பார்கள். நம் தமிழ் மொழியின் நிலை இப்படித்தான் இருக்கிறது. பகிரி என்பதற்கு வாட்ஸ் அப் என்று அர்த்தம் என்பது படம் வந்தபின்பு எல்லோருமே அறிந்துகொள்வார்கள். தமிழ் சினிமாவில் இதுபோன்ற தூய தமிழ் வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும்’’.

ரவிமரியா சமீபகாலமாக நடிக்கும் படங்கள் எல்லாம் பெரிய வெற்றியை அடைகின்றன. அந்த வரிசையில் பகிரியும் இணையட்டும்.

ThambiRamiah to be seen in never seen before role in APMJ !!



Adhagappattathu Magajanangalay is an upcoming film directed by Inbasekhar and have musical score by Imman. Its first single track "Yaenadi" sung by Karthik and Shreya Ghoshal released few days back and was viral among the music buffs. The film's next single track "Andhapulla Manasu sung by Haricharan is going to release today.During this occasion the film's director Inbashekar says "People who have passion for hearing songs will develop a great love and interest towards this song. Four of the songs composed by Imman will feature in the film and there is an additional bonus number sung by Shreya Ghoshal specifically for the musical album. This film is a comic thriller and has Thambi Ramaiah's son Umapathy playing the lead role. Sometimes right things will fall in a right place for a good prosper to occur and the casting of Umapathy happened like that. I required a new face for this script but I wanted the fresh face to be apt for the story. I needed an actor who should be like a boy next door and common people should relate the character to their day to day life characters. Reshma Rathore who did few films in telugu is debuting herself as female lead in this film. We have provided a very good scope for the heroine in this script instead of including her in less number of scenes just for the sake of film. Actors like Manobala, Pandiarajan and Naren are donning significant roles in this film. Throughout the story, actor Karunakaran comes along with the hero which is the major highlight of the film. This film's cinematography is handled by P.K.Varma and A.L.Ramesh of Appa,Nadodigal and Easan fame is the editor of the film. As Thambi Ramiah's son is playing the lead, there will be an expectation from the people about the role played by Thambi Ramiah in this movie and I can say that the people can witness Thambi Ramiah in a never seen before role. People can come and enjoy this film to a great extent with their friends and families and as the director of the film I can assure you complete entertainment.”                         


 "Adhagappattathu Mahajanangalay" is a film directed by Inbashekar and produced by Ramesh.This film have new faces playing the lead roles with a team of very good technicians. Thambi Ramiah's son Umapathy plays the lead role in this film and Reshma plays his female lead. I had a great time in composing tunes for this film and it gave me a beautiful opportunity to produce feel good songs. This film has four songs which consist of three melodies and a peppy hero intro number.  One of the song, "Yeanadi" which released few days back received positive buzz among the music buffs. We have a fifth bonus track as the cover version of "Yeanadi" which was solely sung by Shreya Ghoshal. This track is made specifically for the album and won't feature in the film. The album consists of these five songs and it will be released by Sony Music. I have a very good rapport with Thambi Ramiah from the times of Mynaa. As his son makes his debut in this film, he asked me to the compose tunes for it. Initially I denied composing due to my tight schedule but he insisted me to hear the story first and asked me to compose if I like the script. Once I heard the story completely, I liked it very much and I cannot quote that the story is not good for the sake of rejecting it. Irrespective of whether I compose the tunes or not, I accepted the fact that I liked the story. Once I told him about my liking towards the story, he told me "if you like it, why not you do it" and thus I kick-started my work for this film. I should thank the team for understanding my schedule and for giving me more time to provide them with songs. I was not able to deliver the songs in regular intervals and I almost took some one and half to two months between the songs. I have informed them much earlier about the delay and they wholeheartedly accepted it. They had great love and care towards me and I wanted to give them superior songs to show back their love. I am not the one who expects known directors and actors to be a part of the team to compose music for the film. If anyone with a quality script approach me with great affection, I would surely compose for them. I didn't sing any song in this album as it's not required for the script. I am not a versatile singer who can sing all kind of songs and I know my limitations very well. I would sing only if the song falls under by constraints. As the directors always hear my voice always while composing the tunes, I won't insist them to have my voice for the album. I am assuring that the songs in this album will have self-life and will last longer in the hearts of people. In the previous single launch, I got many positive reviews from various people throughout the world. A lady from Srilanka came to meet me after hearing this song. She told that " I was not used to hear film songs and I heard this song because of my son’s request. Once I heard,I liked it very much and I badly wanted to meet the one who composed this song  and thus ended up meeting you". I am very delighted and happy to hear these words from her. I always like to include melodious tunes in most of my songs as I feel they will provide more recall value to the song. Even in my peppy tunes like "Silukku Marame",there would be small melodious portions in it. This would make the songs to stay in the minds and hearts of the people forever. I also have to mention about my musicians and their team who composes many live recordings and you could have also witnessed these recordings in "Yaendi" song making. We recorded these tunes with various instruments in the VGP studio. In this computerized world, where we compose tunes in computers,we also should retain our traditional way of composing. I accept that I also involve myself in using modern computerized methods but I like composing traditional tunes to carry their pride to the future generations. There are various music directors to compose Rap,Dubstep ,Jazz music and so I wanted to stick strongly to the traditional way of composing. It doesn't mean that I won't follow modern ways of composing and I would use them when there is a need in the script to compose in such a way. I got such an opportunity in a film like "Miruthan" where I got more scope to use computerized tunes. I doesn't want to compose modern tunes for Indian emotions as these emotions would be spoiled if I do so. I wanted to have beautiful soul in my songs when people turn back and hear my composition after many years. This film will come under the genre of black comedy with ample amount of love and emotions. I had great scope to compose background score for this film as this film revolves around a home and office in most of the parts with great amount of thrills and emotions which gave me wide opportunities to compose.

Director Lakshmy Ramakrishnan’s ‘Ammani’ is hitting the screens on 14th October


Not all the time we come across films with strong content and powerful storyline…It is a must to say that the upcoming film ‘Ammani’, written and directed by Lakshmy Ramakrishnan and produced by Ven Govinda under the banner ‘Tag Entertainment’ is one such a film. ‘Ammani’ is the special bonding between two characters ‘Salamma’, 57 (played by Lakshmy Ramakrishnan) and ‘Ammani’, 82 (played by Subbalakshmi - Trisha’s granny in Vinnaithaandi Varuvaayaa). The 105 minutes running ‘Ammani’ has Nithin Sathya, Robo Shankar, George Mariyan, Sri Balaji, Rejin Rose, C Renukha and S Annam in the pivotal roles. Well-built with a bunch of talented technicians such as Cinematographer KR Imran Ahmedh, Music Director K, Editor KR Rejith, Art Director AS Raja, Lyricist Na Muthukumar and Dance Choreographer M Sherif, ‘Ammani’ is all set to hit the screens from 14th October, 2016.

“When I read the script of ‘Ammani’, I just felt like reading a novel. The script was that much interesting. ‘Ammani’ is something more than entertainment…” says Ven Govinda of ‘Tag Entertainment’, the Producer of ‘Ammani’ in an enthusiastic tone.

“Ammani is not a Women oriented film. It is related to everyone with a Universal concept. Normally People will think how there life has to be, but a women thinks how her death has to be… She is ‘Ammani’… I thank producer Ven Govinda for picking up such a strong script. I would like to dedicate our ‘Ammani’ to late Lyricist Na Muthukumar… He was simply the legend… His works in ‘Ammani’ were priceless. The New-Age-philosophical song, ‘Lifea Machan Machan oru Prepaid Phoneu…’ written by Na Muthukumar will speak about the facts of life…. We are quite sure that ‘Ammani’ will travel in the hearts of Audience very soon…” says Lakshmy Ramakrishnan, the Director of ‘Ammani’ in a confident tone.

வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாகிறது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி இருக்கும் 'அம்மணி'



எண்ணற்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளி வந்து கொண்டிருந்தாலும், ஒரு சில படங்கள் மட்டும் தான் ரசிகர்களின் உள்ளத்தில் ஆழமாக பதிகின்றது... அதற்கு முக்கிய காரணம் படத்தின் வலுவான கதை களம். அப்படி ஒரு சிறந்த கதையம்ச்சத்தோடு உருவாகி இருக்கிறது இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி இருக்கும் 'அம்மணி' திரைப்படம். 'டேக்  என்டர்டைன்மெண்ட்' சார்பில் வெண் கோவிந்தா தயாரித்து இருக்கும் 'அம்மணி' திரைப்படமானது, 'சாலம்மா' (57) மற்றும் 'அம்மணி' (82) என்னும் இரண்டு கதாப்பாத்திரங்களின் உறவை மையமாக கொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் 'சாலம்மா' கதாப்பாத்திரத்திலும், சுப்பலக்ஷ்மி  (விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவின் பாட்டியாக நடித்தவர்) 'அம்மணி' கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கும் 'அம்மணி' படத்தில், நித்தின் சத்யா, ரோபோ ஷங்கர், ஜார்ஜ் மரியான், ஸ்ரீ பாலாஜி, ரெஜின் ரோஸ், சி ரேணுகா மற்றும் எஸ் அன்னம்ம் ஆகியோர்  முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 105 நிமிடங்கள் ஓடக்கூடிய 'அம்மணி' திரைப்படத்தில் திறமையான தொழில் நுட்ப கலைஞர்களாகிய ஒளிப்பதிவாளர் கே ஆர் இம்ரான் அஹமட், இசையமைப்பாளர் கே, படத்தொகுப்பாளர் கே ஆர் ரெஜித், கலை இயக்குனர் ஏ எஸ் ராஜா, பாடலாசிரியர் (லேட்) நா முத்துக்குமார் மற்றும் நடன இயக்குனர் எம் ஷெரிப் ஆகியோர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. ரசிகர்களின் எதிர்பார்ப்பை வெகுவாக பெற்று வரும் 'அம்மணி' திரைப்படமானது வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

"அம்மணி கதையை படிக்கும் போது நான் ஒரு  நாவலை படிப்பது போல தான் உணர்ந்தேன்.... அந்த அளவிற்கு இந்த கதையம்சமானது சுவாரசியமாக இருந்தது... வெறும் ஒரு பொழுது போக்கு திரைப்படம் என்பதை தாண்டி பல சிறப்பம்சங்கள் எங்களின் 'அம்மணி'  படத்தில் இருக்கிறது..." என்று உற்சாகமாக கூறுகிறார்  'டேக்  என்டர்டைன்மெண்ட்'  நிறுவனத்தின் உரிமையாளரும், 'அம்மணி' படத்தின் தயாரிப்பாளருமான வெண் கோவிந்தா.

"அம்மணி' திரைப்படம்  பெண்கள் மட்டுமில்லாமல்  எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பொதுவான படமாக விளங்கும்... பொதுவாகவே நாம் எப்படியெல்லாம் சிறப்பாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் அனைவரும் யோசிப்பார்கள்... ஆனால்  தன்னுடைய சாவு எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி யோசிக்கும் ஒரு பெண்மணியை பற்றிய கதை  தான் 'அம்மணி'.  இப்படிப்பட்ட  வலுவான கதை களத்தை தேர்ந்தெடுத்த தயாரிப்பாளர் வென் கோவிந்த் அவர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். எங்களின் 'அம்மணி' படத்தை காலம் சென்ற உன்னதமான கவிஞர்  நா முத்துக்குமார் அவர்களுக்கு நாங்கள் சமர்ப்பணம் செய்கிறோம்...'அம்மணி' படத்திற்காக  அவர் எழுதி தந்திருக்கும்  பாடல்கள் ஒவ்வொன்றும் காவியம்...'லைப்பே மச்சான் மச்சான்... ஒரு ப்ரீபெய்டு போனு...' என்னும் பாடல் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தை  இன்றைய கால தத்துவத்தோடு ஒன்றிணைத்து மிக அழகாக சொல்லி இருக்கிறார் நா முத்துக்குமார். நிச்சயமாக எங்களின் 'அம்மணி' திரைப்படம் ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதியும்..." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'அம்மணி' படத்தின் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது 'தாயம்' படத்தின் டீசர்


பொதுவாக நேர்காணல் என்றாலே நம் அனைவருக்கும் ஒரு விதமான பயம் இருக்கும், ஆனால் விரைவில் வெளியாகும்  'தாயம்' படத்தில்  நடைபெற இருக்கும் நேர்காணலானது, அந்த பயத்தையும் ஒரு படி மேலே எடுத்து செல்ல இருக்கிறது. கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி விஜய் சேதுபதி வெளியிட்ட 'தாயம்' படத்தின் டீசரே அதற்கு ஒரு சிறந்த உதாரணம். 'பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்' சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரிப்பில் உருவாகி வரும்  'தாயம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார், குறும்படங்களை இயக்குவதில்  கலை நயம்  படைத்த அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி. கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி   வெளியான இந்த தாயம் படத்தின் டீசரானது தற்போது யூடூப்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை எட்டியுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரே அறையில் படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் 'தாயம்' என்று சொன்னால் அது மிகையாகாது.  

"வெல்கம் டு தி இன்டெர்வியூ...." என்ற வசனத்தோடு ஆரம்பமாகவும் 'தாயம்' படத்தின் 40 வினாடிகள் ஓடக்கூடிய டீசரானது, பார்வையாளர்களுக்கு ஒரு திகில் அனுபவத்தை தருகிறது என்பதை உறுதியாக சொல்லலாம். சிறந்த திரில்லர் திரைப்படமாக உருவெடுத்து வரும் 'தாயம்' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

‘Dhayam’ teaser exceeds One Lakh Viewers



Normally People will have a general fear on Interview, but the Interview that is going to happen in the upcoming film ‘Dhayam’ is about to give something more than fear. Produced by ARS sunder under the banner ‘Future Film Factory International’ and Co-Produced by P.Thiru, the film ‘Dhayam’ is directed by debutante Kannan Rangaswamy (Artistry Short film Maker). The teaser of India’s first single room thriller ‘Dhayam’ was released by Vijay Seuthupathi on September 8th, 2016, and now the teaser is going Viral in Social Media leaving more than One Lakh Viewers on YouTube. 

It is a must to say that the forty seconds teaser that starts with “Welcome to the Interview….” creates a panic situation in the minds of Audience. Touted to be the most anticipated thriller, ‘Dhayam’, is keeping on increasing the expectations of the Audience to its peak.  

Saturday 10 September 2016

சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் இணையத்தளங்களில் கசிந்தது...


அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கி, ஜிப்ரான் இசையமைத்திருக்கும் திரைப்படம் 'சென்னை 2 சிங்கப்பூர்'.  இந்த படத்தின் பாடல்களை தனித்துவமான முறையில் வெளியிட முடிவு செய்த ஜிப்ரான் மற்றும் குழுவினர், தற்போது நெடுந்தூர சாலை வழி பயணத்தில் பயணித்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னையில் ஆரம்பித்த இந்த நெடுந்தூர பயணமானது தற்போது சிங்கப்பூரை நோக்கி பயணமாகி கொண்டிருக்கிறது. தங்கள் படத்தின் முதல் பாடலை சென்னையிலும், இரண்டாவது பாடலை பூட்டானிலும், மூன்றாவது பாடலை மியான்மாரிலும் பல தடைகளை தாண்டி இந்த குழுவினர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் யாவும் இணையத்தளங்களில் கசிந்திருக்கும் செய்தி, இந்த குழுவினருக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை பற்றி விவரமாக  ஜிப்ரான் தனது 'பேஸ்புக்' பக்கத்தில் ஒரு காணொளி மூலம் தெரிவித்திருக்கிறார்.  

"இதுவரை யாரும் மேற்கொள்ளாத முயற்சியை நீங்கள் ஏன் கையாண்டு இருக்கிறீர்கள்...என்று திரையுலகினரும், எனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களும் கேட்டதுண்டு..."

"ஒரு இசை ஆல்பம் என்பதை தாண்டி சென்னை 2 சிங்கப்பூர் பாடல்கள் யாவும் எங்கள் அனைவரின் உள்ளங்களோடு ஒன்றி இருக்கின்றது... கடந்த ஜனவரி மாதத்தில் எங்களின் சென்னை 2 சிங்கப்பூர் பயணத்தை பற்றி நான் எனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்திருந்தேன்... மியன்மார் பூகம்பம் உள்ளிட்ட  பல தடைகளை நாங்கள் கடந்து வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில்,  எங்களது கார்  'லக்ஷ்மி'  தற்போது தாய்லாந்து நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது... விரைவில் அது சரி செய்யப்படும்...தற்போது நாங்கள் தாய்லாந்து மற்றும் மியன்மாரின் எல்லை பகுதியில் இருக்கிறோம்.... இத்தகைய தடங்கல்களால் நாங்கள் சில சமயங்களில் இந்த பயணத்தை ரத்து செய்துவிடலாம் என்று கூட எண்ணியிருக்கிறோம்... ஆனால் எங்கள் குழுவினரின் வலுவான நம்பிக்கை எங்களுக்கு பக்கபலமாக இருக்கின்றது.  

ஆனால் தற்போது நாங்கள் கடுமையான அதிர்ச்சியில் இருக்கின்றோம்... சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் யாவும் இணையத்தளங்களில் கசிந்திருக்கிறது என்கின்ற தகவல் தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்... எங்கள் பாடல்களுக்கு ரசிகர்களிடம் நல்ல பாராட்டுகளும், வரவேற்பும் இருந்தாலும், அவை  இணையத்தளங்களில் கசிந்திருக்கும் செய்தி எங்களை மிகுந்த மன வேதனைக்கு ஆழ்த்தியுள்ளது... தற்போது எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியவில்லை.. இதற்கு மேல் எதற்காக இந்த பயணம் என்ற கேள்வி கூட எங்கள் மனதில் எழுகின்றது... நாம் எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், ஏதாவது ஒரு விதத்தில் அவை கசிந்து விடுகின்றன. தற்போது பதிவு செய்யப்படாத இணையத்தளங்களில் இருந்து எங்களின் பாடல்களை நீக்க சொல்லி இருக்கிறோம்.... இப்படிப்பட்ட இணையத்தளங்களில் இருந்து பாடல்களை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்....இந்த நிலைமையை சரி செய்ய உதவி வரும் என்னுடைய ரசிகர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் " என்று கூறுகிறார் ஜிப்ரான்.    

விரைவில் சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் நான்காவது பாடலான 'டெக்சாஸ் போகிறேன்' பாடலானது தாய்லாந்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CHENNAI2SINGAPORE MOVIE SONGS LEAKED


Chennai2Singapore is an upcoming film that is directed by newcomer Abbas Akbar and has music composed by Ghibran. The team who has decided to steer away from conventional audio launches are on a road trip in a first-ever attempt to launch the movie’s songs.

They are on a journey through six-countries – to drive from Chennai to Singapore by road which began on the 12th of August. They have already released three songs – one in Chennai, one in Bhutan and the third in Myanmar after a lot of hurdles. 

The team is now in for a rude shock as the songs from Chennai2Singapore have been leaked.

Ghibran has released an exclusive video on his Facebook page on what happened. 

“ Many people have asked me what is the purpose of this unconventional drive. This includes people from the film fraternity as well as family and friends. 

Chennai2Singapore is an album to reach out to people and to shout out loud. This drive is very close to all our hearts. Early this January, I shared on my social media pages that I am going to start a drive from Chennai to Singapore. The team has been facing a lot of unexpected obstacles, like the earthquake in Myanmar. Now, our car Lakshmi, has been seized in Thailand due to the lack of a permit. We are in the midst of sorting this out. Currently, we are in the border of Myanmar and Thailand. As much as this drive is mentally draining and at times we want to cancel it, the team has become much stronger than we first started and are giving it a tough fight. 

But something has shattered us terribly. The songs from Chennai2Singapore have been leaked and are available online. Although people are giving me positive feedback and saying that they are enjoying the songs, it is disturbing to know that they have been leaked and are available on numerous torrent sites for download. Now that the songs are out, we do not know what to do. We are heartbroken and are asking ourselves on what is the purpose of continuing on this drive. This piracy war cannot be fought. We managed to fight on when there were unforeseen situations during the drive. However, we do not know how to react to this. We have asked for the songs to be taken down on pirated sites to avoid piracy spreading further. We humbly request people to not download the songs from pirated sites and to support us,” says Ghibran. 

Ghibran also extends his gratitude to everyone, including fans and officials, who are helping to resolve this matter.  

The fourth song “Texas Pogiren” will be officially released in Thailand once matters are resolved and we hope the team will get through this tough period soon.

'பலூன்' திரைப்படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் பாடலை பாடியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்


ஒரே இரவில் பிரபலம் அடைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதுவும் திரையுலகில் பிரபலம் அடைய வேண்டுமென்றால் அதற்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை...அத்தகைய சிறப்பான குணங்களால் தமிழக ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று இருப்பவர் பாடலாசிரியர் - பாடகர் அருண்ராஜா காமராஜ்.... தற்போது இவர்  இளைஞர்களை தன்னுடைய துள்ளலான இசையால் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்  யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி வரும் பலூன் திரைப்படத்தின் பாடலை பாடியிருக்கிறார். ஜெய் - அஞ்சலி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் 'பலூன்' திரைப்படத்தை '70 எம் எம்' நிறுவனத்தின் உரிமையாளர்கள்  டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சினிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் பலூன் திரைப்படத்தில் யுவன்ஷங்கர் ராஜா  இசையமைப்பாளராக பணிபுரிவது பலூன் படத்திற்கு கூடுதல் பலம். 

"யுவன் சாரின் மிக பெரிய ரசிகன் நான்....அவருடைய இசையில் நான் பாடுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.... இந்த பாடலுக்காக என்னை தேர்ந்தெடுத்த யுவன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.." என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் அருண்ராஜா காமராஜ். ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் பெற்றுவரும் இந்த சிறப்பான கூட்டணியானது, விரைவில் இசை பிரியர்களை கவர உள்ளது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

Yuvanshankar Raja ropes in Arunraja Kamaraj for ‘Balloon’


Becoming popular in overnight is not that much easy, and that too in Film industry is really a tougher task. But Lyricist - Singer Arunraja Kamaraj has made it with his complete Dedication and Hardwork. What will be the expectation level of the Audience, if Arunraja Kamaraj croons for Rhythmic Master Yuvashankar Raja… The impact will be seen in the upcoming Jai - Anjali starrer ‘Balloon’.  Produced by TN Arunbalaji and Kandasamy Nandhakumar for 70MM and Dhilip Subbarayan for Farmer's Master Plan Production, the film ‘Balloon’ is being directed by Sinish. It is to be noted that ‘Balloon’ has increased the hype among Audience by roping in Composer Yuvanshankar Raja for Background scores and songs.

“I am a huge fan of Yuvan sir and it is a pleasure for me to work with him… I sincerely thank Yuvan sir for picking me up…” says Arunraja Kamaraj in a joyful tone. It can be clearly said that this most exciting combo of Yuvanshankar Raja and Arunraja Kamaraj will be topping the musical charts very soon.

Devi(L) - Official Trailer | Prabhudeva | Tamannaah | Sonu Sood | Vijay