Pages

Tuesday, 7 June 2016

அனல் பறக்கும் கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் இருக்கிறது அருண் விஜயின் 'குற்றம் 23'





இயக்குனர் அறிவழகன் இயக்கி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'குற்றம் 23' திரைப்படம், ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே அறிவழகனின் படங்களில் கிளைமாக்ஸ் காட்சிகள் அனைத்தும் மிகுந்த பரபரப்பாக தான் இருக்கும். அதுவும் இதுஒரு அதிரடி படம் என்பதால், சண்டை காட்சிகளுக்கு எந்த வகையிலும் பஞ்சம் இருக்காது என்பதை உறுதியாக சொல்கிறது சமீபத்தில் வெளியானபடத்தின் 'மோஷன் போஸ்டர்'. தற்போது'குற்றம்23', அருண் விஜயின் அசத்தலான அதிரடியிலும், அனல் பறக்கும் கிளைமாக்ஸ்படப்பிடிப்பிலும்கலைக்கட்டிவருகிறது.சாட்டை' படப்புகழ் மகிமா நம்பியார் அருண் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் இந்த மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தைஇந்திர குமார் அவர்களின் 'ரேடான் தி சினிமா பீபள்' நிறுவனத்தோடு இணைந்து 'இன் சினிமாஸ் என்டர்டைன்மன்ட்' நிறுவனத்தின் உரிமையாளர்ஆர்த்தி அருண் தயாரித்து வருகிறார்.முதல் முறையாக போலீஸ் வேடத்தில்நடிக்கும்அருண்விஜயின் குற்றம் 23' படத்தின் இறுதிகட்ட கிளைமாக்ஸ் காட்சிகள், சென்னையிலும்அதைசுற்றிஉள்ளபகுதிகளிலும்படமாக்கப்பட்டுவருகிறது."காரில் துரத்தி கொண்டு போகும் ஒரு சண்டை காட்சி எங்கள் படத்தில் இருக்கிறது. அந்தகாட்சியை நாங்கள் தற்போது சென்னையில் நள்ளிரவு ஆரம்பித்து விடியற்காலை வரை படமாக்கி வருகிறோம். அதனை தொடர்ந்து எங்கள் படத்தின்கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு தொடர்ந்து ஆறு நாட்களுக்கு படூர் பகுதிகளில் நடைப்பெற இருக்கிறது. அது மட்டுமின்றி ஒரு பிரமாண்டஅரங்கத்தை 'குற்றம் 23' படத்திற்காக எங்களது இயக்குனர் எழுப்பி உள்ளார் " என்று கூறினார் இயக்குனர் அறிவழகன். படத்திற்கு மேலும் சிறப்புசேர்க்கும் வண்ணமாக வில்லன் வம்சி, அருண் விஜயுடன் கைக்கோர்த்து உள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான 'தடையறதாக்க' படம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற நிலையில், தற்போது மீண்டும் இந்த கூட்டணி 'குற்றம் 23' படத்தில் ஒன்று சேர்ந்துள்ளதுஅனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. 'என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு அருண் விஜயின் நடிப்பில் வெளிவரும் இந்த படம்கண்டிப்பாக அவரை தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு படி மேலே எடுத்து செல்லும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

No comments:

Post a Comment