புதுக்கோட்டையில் சத்துணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டமன்றத்திலிருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டையில் 10 அரசுப் பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தை நிறுத்த அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஆட்சியரின் இந்த உத்தரவு குறித்து பேரவையில் பேச முற்பட்ட போது சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை என்றார். மேலும் திமுக கொறடா சக்கரபாணி பேசியதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டதாக ஸ்டாலின் கூறினார். சபாநாயகர் தனபாலின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததாக ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்

No comments:
Post a Comment