Pages

Saturday, 3 September 2016

'கவலை வேண்டாம்' படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி இருக்கிறது 'சூப்பர் குட் பிலிம்ஸ்'


காதல், நட்பு, நகைச்சுவை உணர்வு, பொறாமையின்மை ஆகிய சிறந்த குணங்கள் தான் ஒரு மனிதனை கவலை இல்லாமல் வாழ செய்கிறது... வருகின்ற தசரா விடுமுறை நாட்களில் ரசிகர்களின் மகிழ்ச்சியை  இந்த குணங்களோடு இரட்டிப்பாக்க தயாராக இருக்கிறது, ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து இருக்கும் 'கவலை வேண்டாம்' திரைப்படம். 'யாமிருக்க பயமே' படப்புகழ் டீகே இயக்கி,  ஜீவா - காஜல் அகர்வால் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கும் இந்த 'கவலை வேண்டாம்'  திரைப்படமானது, வர்த்தக மற்றும் வணீக உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தி கொண்டே போகும் இந்த   'கவலை வேண்டாம்' படத்தின் தெலுங்கு உரிமையை தற்போது  'சூப்பர் குட் பிலிம்ஸ்' ஆர்.பி சவுத்திரி மற்றும் திருப்பதி பிரசாத் (மகேஷ் பாபு - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் தயாரிப்பாளர்) வாங்கி இருப்பது, திரையுலகினரின் கவனத்தை பெருமளவில் ஈர்த்து இருக்கிறது.

"சிறந்த தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் திகழ்ந்து  வரும்  சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் எங்களின் 'கவலை வேண்டாம்' படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியிருப்பது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும்  இருக்கின்றது... சிறந்த வணீகத்திற்கும், வர்த்தகத்திற்கும்  ஏற்ற திரைப்படமாக மட்டுமில்லாமல், மொழிகளை தாண்டி அனைத்து தரப்பு  ரசிகர்களின் மனதை வெல்லும் ஒரு திரைப்படமாகவும் எங்களின் 'கவலை வேண்டாம்' இருக்கும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்..." என்று கூறுகிறார்  'கவலை வேண்டாம்' படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.

No comments:

Post a Comment