Pages

Tuesday, 7 February 2017

ஆளுநர்-அதிமுக இடையே குழப்பம்: திமுக

சசிகலா முதலமைச்சராக பதவியேற்பது தொடர்பாக அதிமுக மற்றும் ஆளுநர் இடையே குழப்பம் நீடிப்பதாக திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவையின் அதிமுக தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவருக்கு, பதவிப் பிரமாணம் செய்து வைப்பது ஆளுநரின் கடமை என்றும் கூறினார். திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும், மரியாதை நிமித்தமாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கும் எண்ணம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment