Pages

Tuesday, 12 April 2016

ஜி.வி.பிரகாஷின் 'பென்சில்' ரிலீஸ் தேதி

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' மற்றும் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற போதிலும், அவர் நடித்த முதல் படமான 'பென்சில்' ஒருசில பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது.
 
இந்நிலையில் அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்து விரைவில் இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'பென்சில்' திரைப்படம் வரும் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நடித்த 'பென்சில்' திரைப்படம் ஒருவார இடைவெளியில் ரிலீஸ் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மணிநாகராஜ் இயக்கியுள்ள 'பென்சில்' திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா, விடிவி கணேஷ், ஊர்வசி, டி.பி.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment