Pages

Tuesday, 12 April 2016

கபாலி' ரிலீஸ் குறித்து ரஜினியின் முக்கிய அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு 'பத்ம விபூஷன் விருதினை அறிவித்தது. இந்த விருது இன்று நடைபெறும் பிரமாண்டமான விழாவில் ரஜினிக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விருதை பெறுவதற்காக ரஜினிகாந்த் டெல்லி சென்றுள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் விமான நிலையத்தில் 'கபாலி' திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலலித்த ரஜினிகாந்த், "கபாலி திரைப்படம் மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும்' என்று கூறியுள்ளார். இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'கபாலி' படத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

No comments:

Post a Comment