'தப்பு தண்டா' என்ற படத்தின் பெயரை கேட்டவுடன், வெறும் குற்றமும், களவாணித்தனமும் தான் இருக்கும் என யாரும் எண்ணிவிட வேண்டாம். ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு கிரைம் கலந்த நகைச்சுவை திரில்லர் படமாக தயாராகி உள்ளது, இயக்குனர் சிகரம் பாலு மகேந்திராவின் சீடரான ஸ்ரீகண்டன் இயக்கி இருக்கும் இந்த 'தப்பு தண்டா' திரைப்படம். தயாரிப்பாளர் சத்ய மூர்த்தி தயாரித்து வரும் 'தப்பு தண்டா' படத்தின் படப்பிடிப்பானது முழுவதுமாக முடிவடைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் A வினோத், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், படத்தொகுப்பாளர் SP ராஜ சேதுபதி ஆகியோர் பணியாற்றி வரும் இந்த 'தப்பு தண்டா' படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
"ஒரு திரைப்படத்தை சொன்ன தேதியிலும், சொன்ன தொகையிலும் முடித்து கொடுப்பது தான் ஒரு சிறந்த இயக்குனருக்கு அழகு...." என்று என்னுடைய குருநாதர் பாலுமகேந்திரா சார் கூறிய வார்த்தைகளை நான் இப்போது நினைத்து பார்க்கிறேன்....அவர் அவ்வப்போது கூறும் அந்த கருத்தை நான் இந்த 'தப்பு தண்டா' படத்தின் மூலம் நிறைவு செய்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது...அவருடைய பெயருக்கு மகுடம் சூட்டிய பல சீடர்களுள் நானும் ஒருவனாக இருப்பதை எண்ணும் பொழுது, மிகுந்த பெருமை கொள்கிறேன்...
"எங்கள் தப்பு தண்டா படத்தின் படப்பிடிப்பை எந்த வித கால தாமதமும் இன்றி நாங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறோம். நிச்சயமாக என்னால் மட்டும் இந்த காரியத்தை தனித்து செய்திருக்க முடியாது. இதற்கு முதுகெலும்பாக செயல்பட்ட தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர் - நடிகைகள் என ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...மேலும் 'டூப்ளிக்கா டோமாரி' என்னும் பாடலை கொண்டு தான் எங்களின் படப்பிடிப்பை நிறைவு செய்து இருக்கிறோம், இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த பாடலில் இருக்கின்றது. மிகுந்த பொருட் செலவில் சுமார் நாற்பது ஸ்டண்ட் கலைஞர்களை கொண்டு முற்றிலும் தனித்துவமாக இந்த பாடலை நாங்கள் படமாக்கி இருப்பதே அந்த சிறப்பு... தற்போது தொழில் நுட்ப பணிகள் மூலம் எங்களின் தப்பு தண்டா படத்தை மெருகேற்றி வருகிறோம்... டார்க் காமிக்கல் - திரில்லர் ஆகியவற்றின் கலவையில் உருவாகி இருக்கும் எங்களது தப்பு தண்டா படத்தை அக்டோபர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம்..." என்று கூறுகிறார் 'தப்பு தண்டா' படத்தின் இயக்குனர் ஸ்ரீகண்டன்.
No comments:
Post a Comment