ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டம் குறித்து உரிய முறையில் விளக்கி இருந்தால் வன்முறை ஏற்பட்டிருக்காது என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை தியாகாராய நகரில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டார். மேலும் உலகமே வியந்து பாராட்டிய இப்போராட்டத்தின் வெற்றியை கொண்டாட காவல்துறையினர் அனுமதிக்கவில்லை எனவும் சிம்பு தெரிவித்தார்.
வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நடிகர் சிம்பு வலியுறுத்தினார். கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்காவிட்டால் தம்மை கைது செய்யுமாறும் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அரசியலுக்கு தான் ஒருபோதும் வர மாட்டேன் என்றும், மக்களுக்காக தொடர்ந்து போராடப்போவதாகவும் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment