Bhooloham
The much expected Bhooloham' is all set to hit the screens from 24th .Jayam Ravi in the pinnacle of his career with continuous hits is paired opposite Trisha and this action flick with a drama that speaks on corporate influence in the sports is directed by Kalyan krishnan , who had associated Director Jhananathan in all his earlier flicks. Kalyan as he is called in the sets had done plenty of research and development to do this film. He shares his experience on 'Bhooloham' here.
'The idea of doing a film on boxing was incorporated during a casual discussion.I had some valuable information about some families which were into boxing for generations and i was excited when this idea cropped up.When the discussion of the protagonist emerged the entire team uttered one name and it as Jayam Ravi. He is the most committed actor to my knowledge. Due to various factors this project got delayed , but he was the motivating factor behind us. His commitment was such with the role , he didn't hesitate to set up a boxing training stage in his terrace itself.He took just two months to match the intensity of a professional boxer. It is indeed a pride to work with Jayam ravi sir. His stature Producer Aascar Ravichandran for providing the opportunity to do a film of intensity.He had provided every thing that was possible and even some thing which we thought was impossible. We contemplated an idea of casting an known international wrestler for the climax fight of this film.We could have settled for any small names but the producer was fixed on an international name of great brand equity and then came Nathan Jones. The climax fight between Nathan Jones and Jayam ravi is electrifying.Srikanth Deva the music director had captured the mood of North Madras with perfect ease.I owe a lot to Jhananathan sir ,with out his support this project wouldnt have cornered so much attention.His powerful dialogues add fire brand dimensions to the film. 'Bhooloham ' will be a commercial pot boiler and will surely cater to the audience's taste' concluded Kalyan Krishnan.
பூலோகம்
பெரிதும் எதிர்ப்பார்க்க படும் 'பூலோகம்' இந்த மாதம் 24 ஆம் தேதி வெளி ஆகிறது.தொடரும் வெற்றிகளாலும்,குறிப்பாக தனி ஒருவன் பெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியின் படங்கள் மீதே பெரிய அளவுக்கு எதிர்ப்பார்ப்ப்பு இருக்கிறது. விளையாட்டு துறையில் அரசியலும் , வணிகமும் எப்படி நுழைகிறது , அதன் விளைவுகள் என்ன ஏன்பதை விவரமாக விளக்குகிறது 'பூலோகம்'. இயக்குனர் ஜனநாதனிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றிய கல்யாண் கிருஷ்ணன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
' முதல் படம் இயக்குவது என்பது முடிவான பிறகு பாக்சிங் சம்மந்தப் பட்ட படமாக தான் இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டோம்.நான் ஏற்கனவே குத்து சண்டை சம்மந்தப்பட்ட வட சென்னை பரம்பரைகள் சிலரிடம் இதைப் பற்றி விவாதித்து இருந்தேன்.
படத்தின் கதா நாயகன் பற்றிய பேச்சு எழுந்தப் போது அங்கு ஒலித்த ஒருமித்தக் குரல் அனைத்தும் சொன்னது ஜெயம் ரவி சாருடைய பெயரைத்தான்.நான் அறிந்தவரை அவரைப்போல தொழில் நேர்த்தி உள்ள நடிகரை நான் கண்டதே இல்லை. அவ்வளவு உழைப்பு. குத்து சண்டை பற்றிய படம் என்றவுடன் தன்னுடைய வீட்டின் மொட்டை பிற மாடியில் அதற்கான ஒரு பயிற்சி அரங்கமே அமைத்து விட்டார்.பல்வேறு சமயங்களில் நாங்களே துவண்டு விட்டாலும் அவர் எங்களுக்கு ஊக்கம் தந்தார்.இன்று அவருடைய நிலை மிகவும் உயர்ந்து இருக்கிறது. தனி ஒருவன் படத்துக்குப் பிறகு அவர் பின்னால் ஒரு மாஸ் இருப்பதை நாங்கள் உணர்கிறோம். வர்த்தக ரீதியாக தனி ஒருவனுக்கு அடுத்த வெளியீடு என்பதே பூலோகம் படத்துக்கு பெரும் Opening உத்திரவாதம் செய்யும்.
தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரனுக்கு இந்தப் படத்தை இயக்கம் வாய்ப்பு தந்தமைக்கு பெரும் நன்றி. நாங்கள் எதை கேட்டாலும் அவர் கொடுத்தார். படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிக்காக ஒரு பெரிய வில்லன் நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணினோம்.ஆனால் நாங்களே எதிர்பாராத வகையில் பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்த சர்வதேச புகழ் பெற்ற நாதேன் ஜோன்சை ஒப்பந்தம் செய்தார். இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா வட சென்னையின் பாரம்பரியத்தை அப்படியே இசை வடிவத்தில் கொண்டு வந்து உள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ஜனன்னாதன் சாரிர் வசனங்கள் எல்லோருடைய மனசாட்சியையும் தட்டி எழுப்பும். பூலோகம் மொத்தத்தில் ஜனரஞ்சகமான எல்லோரும் பார்த்து ரசிக்கக் கூடிய படைப்பாக இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment