நீட் விவகாரம் தொடர்பாக வரும் 27-ஆம் தேதி பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஜெயலலிதா கொண்டுவர நினைத்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்த முதலமைச்சர், 300 கோடி ரூபாய் செலவில் கோவை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும் என்றும் கூறினார்.
கோவையில் மோனோ ரயில் திட்டம் கொண்டுவர முயற்சி செய்யப்படும் என்று கூறிய அவர், 120 கோடி ரூபாய் செலவில் வெள்ளகோவில் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார். நீட் விவகாரம் தொடர்பாக வரும் 27-ஆம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்திக்க இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
5 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அனுமதி தந்தவுடன் அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment