சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் சசிகலா முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 2015ஆம் ஆண்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு கெர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில் 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாராசாமி ரத்து செய்து தீர்ப்பளித்தார்.இதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்துள்ள நிலையில் கடந்த மாதமே தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்க்பபட்டது.இந்நிலையில் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆளும் அதிமுக சட்டசபைக்குழு தலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்ட சசிகலா 9ஆம் தேதிக்குள் தமிழக முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியானதுஇதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு காரணமாக சசிகலா பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment