
























உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருக்கும் "கிருமி"
கிருமி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது . இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ராஜேந்திரன் , எம்.ரஜினி ஜெயராமன் , எல்.ப்ரிதிவி ராஜ் , கே. ஜெயராமன் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரன் , தயாரிப்பாளர் கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
திறமை உள்ள மனிதர்களுக்கு நிச்சயமாக ஊதியம் கிடைக்கும் , இப்போது கூட நான் முகத்துக்கு வேடமிட்டு வந்திருக்கிறேன் ஆனால் நான் படத்தில் உண்மையான தோற்றத்தில் நடித்திருக்கிறேன் என்றார் நடிகர் சார்லி. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இயக்குனரிடம் போலிஸ் ஸ்டேஷனில் எப்படி படம் பிடித்திர்கள் என்று கேட்டுள்ளனர் ?? அவர்கள் கேட்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி ஏனென்றால் என் கலையில் உருவாகிய காவல் நிலையம் நிஜம் போல் காட்சி அளித்தது எங்களுக்கு மிக பெரிய வெற்றியே என்றார் படத்தின் கலை இயக்குனர் எஸ்.எஸ்.மூர்த்தி. அடுத்ததாக பேசிய படத்தின் இசை அமைப்பாளர் கே , எனக்கு படத்தில் இசையமைக்க நிறைய ஆப்ட் ஆன காட்சிகள் இருந்தன நான் அதை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக இசையமைத்துள்ளேன். படத்தின் பாடல்கள் ஆறும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி என்றார். அடுத்ததாக பேசிய படத்தின் நாயகி ரேஷ்மி மேனன் இந்த படத்தின் தலைப்பை கேட்டதும் நான் ஷாக் ஆகிவிட்டேன். இந்த படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் என்னால் சிறப்பாக நடிக்க முடியுமா என்ற யோசனை என்னுள் இருந்து கொண்டே இருந்தது. இப்போது படம் வெளியாக உள்ளது. வட சென்னை பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.இந்த படக்குழுவில் உள்ள அனைவரும் என்னை இட்லி என்றே அழைப்பார்கள் என்றார். படத்தின் நாயகன் கதிர் பேசும் போது, மதயானை கூட்டம் படம் வெளியான பின்பு நான் பல கதைகளை தேர்ந்தெடுத்தே நடித்தேன். இந்த கதையின் முதல் 45 நிமிடங்களை இயக்குனர் என்னிடம் சொல்லும் போதே இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டேன் என்றார்.
அடுத்ததாக பேசிய இயக்குனர் அருண் சரண் , கிருமி திரைப்படம் உலக அளவில் புகழ் பெற்ற ஒரு திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. அந்த திரைப்படவிழாவில் திரையிடவிருக்கும் முதல் தமிழ் படம் இது தான் என்றார். எல்லாம் உறுதியான பின்பு அது எந்த திரைப்பட விழா என்பதை நான் வருகிற 17 ஆம் அறிவிக்கிறேன் என்றார். எனக்கு நாயகன் கதிரை வைத்து என்னுடைய முதல் படத்தை இயக்க ஆசையில்லை , என்னுடைய பெற்றோர்கள் வார்த்தைக்காக தான் அவரை வைத்து படம் இயக்கினேன் என்றார் இயக்குநர் அருண் சரண். படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் பேசும் போது , இந்த படத்தை நான் மூன்று றை நான் பார்த்துவிட்டேன் ஒரு முறை கூட படம் எனக்கு சலிக்கவில்லை என்பது தான் உண்மை. ரசிகர்கள் படத்தை பார்க்கும் போது படம் அவர்கள் மனதை விட்டு நிச்சயம் நீங்காது என்றார்.
இறுதியாக பேசிய இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரன் , இந்த படத்தின் இயக்குனர் அணு சரணை எனக்கு படம் இயக்க சொல்லி கேட்டேன் ஆனால் அவர் மறுத்தார். நிச்சயமாக படம் வெற்றி பெற்ற பின்பு அவர் என்னிடம் வந்தால் நான் அவரை வைத்து படம் இயக்க மாட்டேன் ஏனென்றால் எனக்கு ஜெயிக்கிற குதிரையில் பயணிக்க பிடிக்காது என்றார். நான் இந்த படத்தை பார்க்க வந்த போது பாதி படத்தை தான் பார்ப்பேன் என்றேன். ஆனால் நான் முழு படத்தை பார்த்து விட்டு தான் சென்றேன். அதற்க்கு காரணம் படம் அவ்வளவு அருமையாக இருந்தது என்று கூறினார் இயக்குனர் எஸ்.ஏ .சி.
No comments:
Post a Comment