


இஞ்சி இடுப்பழகி
தேவர் மகன் படத்தில் கமலஹாசன் -ரேவதி ஜோடி மிக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி , இசை ஞானி இளைய ராஜாவின் இன்னிசையில் வெளி வந்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாடல் இஞ்சி இடுப்பழகி ...பாடல்
.அந்தப் பாடலின் முதல் வரியில் துவங்கும் தலைப்புடன் ஆர்யா அனுஷ்கா ஜோடியாக நடிக்க பி வி பி நிறுவனம் தயாரிக்க, பிரகாஷ் கோவிலமுடி இயக்கத்தில் உருவாகும் 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் டீசரை இசை வெளியீடுக் குறித்த டீசரை 30 லட்சத்துக்கும் மேலானோர் ரசித்து பார்த்து உள்ளனர்.
இந்த நிலையில் ஆர்யா அனுஷ்கா ஜோடி கமலஹாசன் -கௌதமி ஜோடி போலவே பிரதிபலிக்கும் 'இஞ்சி இடுப்பழகி என்றுத் தொடங்கும் பாடல் டீசராக வெளி வருகிறது. இந்த டீசர் ஒரிஜினல் பாடலின் தன்மையும் , இனிமையும் கெடாதவாறு படமாக்க பட்டு உள்ளது.
நகைச்சுவை கலந்தக் காதல் படமாக உருவாகும் 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் ஆர்யா, அனுஷ்கா ஆகியோருடன் சோனல் சௌஹன் , பிரகாஷ் ராஜ் , பரத், ஊர்வசி ஆகியோருடன் மற்றும் பலர் நடித்து உள்ளனர். கனிகா தில்லான் கொவிலமுடியின் கதை வடிவத்தில்,மரகதமணியின் இசையில்,நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில்,ஆர் எஸ் பிரசன்னாவின் வசனத்தில், மதன் கார்க்கியின் பாடல் வரிகளில் உருவாகி எல்லோர் மனதையும் கவரும் வண்ணம் உருவாகும் 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் பாடல்கள் இந்த மாதம் வெளி வரும் என அறிவித்து உள்ளனர் படக் குழுவினர்.
No comments:
Post a Comment