Sunday, 13 September 2015

trisha illana nayanthara







திர்ஷா இல்லைனா நயன்தார படத்துக்கு கிடைத்த வரவேற்ப்பு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வெளிவரவிருக்கும் த்ரிஷா இல்லைனா நயன்தாரா திரைப்படத்துக்கு  லயோலா பொறியியல் கல்லூரியில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது.
லயோலா பொறியியல் கல்லூரியின் எஞ்சினியா  எனப்படும்  கலை விழாவை
இன்று நடிகர் ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும்  திர்ஷா இல்லைனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து பேசினர். முதலில் பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ; நாம் காணும் கனவை நோக்கி ஓடினால் நிச்சயம் அது ஒரு நாள் நிறைவேறும். நான் கல்லூரி காலங்களில்  
படிக்காமல் கண்ட பகல் கனவு இன்று நினைவாகி உள்ளது. நான் உங்கள் முன் இப்போது இயக்குனராக நிற்கிறேன். எனக்கு என் பள்ளி காலத்தில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்று ரொம்ப  ஆசை அப்போதில் இருந்தே நான் கதை எழுதுவது ; படம் பார்ப்பது என்று பெரிய அளவில்  தயாராகி வந்தேன். ஆனால் நான் பொறியியல் தான் படிக்க வேண்டும் என்று என் அம்மா உறுதியாக இருந்ததால் நான் பி.இ படித்தேன். அதன் புண் சினிமா இயக்க வேண்டும் என்று அம்மாவிடம் சொனேன். அரியரை கிளியர் செய்தால் படம் இயக்க செல்லலாம் என்றார். என் மேல் அவ்ளோ நம்பிக்கை. ஆல் கிளியர் செய்துவிட்டு இப்போ உங்கள் முன்  இயக்குனராக நிற்கிறேன். என் தந்தையின் கனவோடு சேர்த்து என் கனவும் நிஜமாகிவிட்டது. திர்ஷா இல்லைனா நயன்தாரா படம் ஆரம்பித்த
நாளில் இருந்து இன்று வரை என்னை நம்பிய ஒரே ஆள் ஜி.வி. பிரகாஷ் தான் அவருக்கு நன்றி.
மாணவர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து தங்கள் கனவை நிஜமாக்க வேண்டும் என்றார்.
அடுத்ததாக பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார் ; நான் கல்லூரிக்கே சென்றதில்லை. கல்லூரி வாழ்க்கை இனிமையானது அதை ஒரு  துளி கூட மிஸ் செய்துவிட கூடாது என்றார். விழாவில் நடந்த பிளாஷ் மோப் நடனம் நன்றாக இருந்தது வாழ்த்தினார். மாணவர்கள் அவரை பாட சொல்லி கேட்டதும் 
அவர் அந்த பாடலை பாடியதும் பாடலுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.
பின்னர் ஜி.வி பிரகாஷ் குமார் எஞ்சினியா விழாவை துவக்கி வைப்பதாக கூறி துவக்கி வைத்தார்.

No comments:

Post a Comment