Sunday 22 November 2015

தென்னிந்திய நடிகர்சங்க செய்தி 22.11.2015






     
​வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர்
மாவட்டத்தை சார்ந்த, சிதம்பரம் தாலுக்காவில் அமைந்துள்ள கரிவேட்டை என்ற
கிராமத்தைச் சார்ந்த மக்களுக்கு “The Environmentalist Foundation of
India “ என்ற NGO மூலமாக நமது தென்னிந்திய நடிகர் சங்கம் முதற்கட்ட
பணியாக சில உதவிகளை மேற்க்கொண்டுள்ளது.

அதில் அடிப்படை பொருட்களான அரிசி, பருப்பு ,உப்பு,சர்க்கரை போன்ற சமையல்
பொருட்களும் கரண்டி, தட்டு மற்றும் சமையல் பாத்திரங்களும் புழங்குவதற்கு
தேவையான பாய், பெட்சிட் போன்றவைகளும் மாற்றுத்துணிகளுக்காக புடவை, வேட்டி
மற்றும் T.சர்ட் போன்ற பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்காக நடிகர் சங்கத்தோடு கைகோர்த்து திரு.எஸ்.வி.சேகர்,
திரு.பூச்சிமுருகன், திரு.மனோபாலா மற்றும் திருமதி.ரோகிணி அவர்கள்
உதவியுள்ளனர். மேலும் , நடிகர் திரு. அருள்நிதி அவர்கள் 1,000
பெட்சிட்டுகள் அந்த மக்களுக்காக வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்சிக்காக கடந்த மூன்று நாட்களாக நமது சங்கத்தைச் சார்ந்த
திருமதி.குட்டிபத்மினி ,செல்வி.கோவைசரளா, திருமதி.லலிதாகுமாரி,
திருமதி.சோனியா,திரு.மனோபாலா,திரு.பசுபதி,திரு.உதயா,திரு.ஹேமச்சந்திரன்
,திரு.அயுப்கான் மற்றும் சங்க நிர்வாகிகள் ,அலுவலக மேலாளர்
திரு.வி.பாலமுருகன் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர் பாடுபட்டுள்ளானர்
என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் சென்னையில் கோட்டூர்புரத்தை சார்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நமது நடிகர்சங்க செயற்குழுஉறுப்பினர்கள் திரு.அயுப்கான்
மற்றும் திரு.ஹேமச்சந்திரன் மூலமாக உதவிகள் செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment