திருச்சியில் உள்ள பழம் பெரும் நடிகரான காசிம் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளான பூச்சி முருகன், ஜெரால்ட், டேவிட், துரை ஆகியோர் இன்று அவருடைய வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தனர். திரு. காசிம் (வயது 90) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். காசிம் அவர்களின் புதல்வரான சுல்தான் (வயது 60) தம் தந்தை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த போது நடிகர் சங்க நிர்வாகியான பொன்வண்ணன் அவர்களை அலை பேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு மருத்துவ செலவிற்கு நதி உதவி கோரி இருந்தார். சங்கத்தில் கலந்து பேசி ஒரு மணி நேரத்திற்குள் ரூபாய் 15,000 தருவதாக பதில் அளித்ததுடன் அன்று மாலையே பணம் நடிகர் சங்க உறுப்பினர் ஒருவரின் மூலமாக காசிம் அவர்களின் புதல்வரான சுல்தானிடம் கொடுக்கப்பட்டது . திரு. காசிம் அவர்கள் 45 வருடங்களாக தமிழ் சினிமா நடிகராகவும் , 38 வருடங்களாக நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களுடனும் , நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடனும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களில் குறிப்பிடதக்கது கலைஞர் அவர்களின் கை வண்ணத்தில் வெளிவந்த "பூம்புகார்" என்ற திரைப்படத்தில் இளங்கோவடிகளாகவும், முதல்வர் புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் திரைப்படமான "மேஜர் சந்திரகாந்த்" மற்றும் ஆச்சி மனோரம்மாவுடன் "லவ குசா" படத்திலும் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம், இந்தி மொழிகளை சேர்த்து சுமார் 300 படங்களில் நடித்துள்ளார். இவர் தற்ப்போது உடல் தகுதி பெற்று வீடு திரும்பியுள்ளார். இவரை இன்று நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்து நலம் விசாரித்தனர் . இதனால் மகிழ்ச்சியடைந்த நடிகர் காசிம் புதிதாக பொறுப்பேற்றுள்ள நடிகர் சங்கத்தையும் அதன் நிர்வாகிகளையும் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டியுள்ளார்.
No comments:
Post a Comment