ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் மிகப்பிரமாண்டமான படமாக “ கத்திசண்டை “ படத்தையும் தயாரிக்கிறார்.
நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள் . கதாநாயகியாக தமன்னா முதல் முறையாக விஷால் ஜோடியாக நடிக்கிறார். மற்றும் ஜெகபதி பாபு வில்லன் வேடம் ஏற்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம்.நாதன்
இசை - ஹிப்ஹாப் தமிழா
கலை - உமேஷ்
ஸ்டன்ட் - தளபதி தினேஷ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சுராஜ்
தயாரிப்பு - எஸ். நந்தகோபால்
இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய விஷால்.. எனக்கு இன்னொரு பரிமாணத்தை கொடுக்கும் படம் இது. ஒன்பது வருடங்களுக்கு மும்பு திமிரு படத்தில் இணைந்து நானும் வடிவேலுவும் வெற்றிபெற்றோம். இந்த படத்தில் மீண்டும் இணைகிறோம். அவரது காமெடியை நானும் ஒரு ரசிகனாக கண்டுகளிக்க காதுக்கொண்டிருகிறேன் என்றார்.
விழாவில் வடிவேலு பேசும்போது...
மீண்டும் காமெடி வேடத்தில் நடிப்பது பற்றி கேட்டபோது.. இனி ரெண்டு டிராக் தான் ஹீரோவா வந்தாலும் நடிப்பேன், காமெடியனாகவும் நடிப்பேன்
இனி நிறைய படங்களில் காமெடி வேடம் படம் முழுக்க வரா மாதிரி இறங்கி உள்ளேன். சுராஜ் நம்மளுக்கு ஏத்தா மாதிரி தீனி போடுவார். அதனால் நம்பிக்கையோடு நடிக்கிறேன் கண்டிப்பாக வெற்றி பெரும் என்றார்.
நடிகர் சூரி பேசும்போது...
ஒரு நல்ல டீம்ல நானும் இருக்கேன். ஏற்கனவே சுராஜ் இயக்கத்தில் அப்பாடக்கர் படத்தில் நானும் நடித்தேன் இந்த படத்தில் நானும் இணைந்தது மகிழ்ச்சி என்றார்.
விழாவில் இயக்குனர் சுராஜ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் ஆகியோரும் பேசினார்கள்.
No comments:
Post a Comment