




கதாநாயகியாக ஆயிஷா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக மமதா ராவத் நடிக்கிறார். மற்றும் பாண்டியராஜன், தேவதர்ஷினி, சிங்கமுத்து,லொள்ளுசபா மனோகர், பிளாக்பாண்டி, மைசூர் மஞ்சுளா, திருச்சி பாபு, ஷாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ஷியாம்ராஜ்
விவேகா பாடல்களுக்கு பர்ஹான்ரோஷன் இசையமைக்கிறார்.
கலை - பத்மநாபன் / ஸ்டன்ட் - மிரட்டல் செல்வா
நடனம் - ராதிகா / தயாரிப்பு மேற்பார்வை - கார்த்திக் ரெட்டி
தயாரிப்பு - M. ராமய்யா
எழுதி இயக்குபவர் - ஷாமி திருமலை
படம் பற்றி இயக்கம் ஷாமி திருமலையிடம் கேட்டோம்...
இந்த படம் சில நாட்களுக்கு முன் சில திரையரங்குகளில் வெளியிடப் பட்டது. வெளியிடப் பட்ட அந்த நேரத்தில் சரியான திரையரங்குகள் அமையததாலும், கால சூழ்நிலை சரியாக அமையாததால் திரையிடப் பட்ட தியேட்டர்களில் இருந்து திரும்பப் பெற்றனர்.
தற்பொழுது சுமார் 100 க்கும் மேற்பட்ட நல்ல திரையரங்குகளில் மறு வெளியீடு செய்கிறோம்.
ஹரிகுமார் இந்த படத்தில் சத்யா என்ற மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஒரே கதாப்பாத்திரம் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிப்பது குறிப்பிடத் தக்கது. ஹரிகுமாரின் வித்தியாசமான வில்லன் வேடத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என இயக்குனர் ஷாமிதிருமலை தெரிவித்தார்.
No comments:
Post a Comment