சென்னையின் ஒண்டுக்குடித்தனங்களில் வசிக்கும் கோடம்பாக்க கனவுலகவாசி உதவி இயக்குனர் வெற்றி. அவனது அறையில் எப்போதும் நண்பர்கள் கூட்டம். படம் இயக்கும் முயற்சியில் இருக்கிற வெற்றிக்கு நடிகர் தினேஷிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. கதையை கேட்ட தினேஷ் முழுக்கதையையும் ஒரு வாரத்திற்குள் சொல்ல வேண்டும் என நாள் குறிக்கிறார். ஒரு வாரத்திற்குள் கதை சொல்வதற்காக அறையில் கதை எழுத ஆரம்பிக்கிறான் வெற்றி. அவனால் அறை நண்பர்கள், வெளி நண்பர்களின் தொந்தரவால் கதை எழுத முடியவில்லை. நண்பர்கள் வரவை குறைக்கவும், கதையை எழுதி முடிக்கவும் வெற்றி பல வகையில் முயன்று தோற்று, நண்பர்களை பயமுறுத்துவதற்காக தான் இருக்கும் இந்த அறையில் ஒரு பேய் இருப்பதாகவும் அது ஏற்கனவே பல பேரை கொன்றதாகவும் சொல்கிறான்.
நண்பர்கள் அச்சமடைகிறார்கள் ஆனால் உண்மையிலேயே அவனை ஒரு பேய் துரத்துகிறது. புனைந்த கதையே உண்மையாக நடக்க துவங்குகிறது. அவனது மனதுக்கும், உண்மைக்குமான போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. உண்மையிலேயே பேய் இருக்கிறதா... அந்த பேய் யார்... எதனால் அவனது வாழ்க்கை பல திருப்பங்களாக மாறுகிறது என்பது விரிவான திரைக்கதை... கதை மூன்று கால கட்டங்களில் நடக்கிறது.
இது குறித்து இயக்குனர் கீராவிடம் கேட்டபோது...
அழகான திரில்லர் பேய் கதை. 3 கால கட்டங்களில் நடக்கிற கதை. கதைப்படி ஹீரோ வெற்றி எப்படியாவது இயக்குனர் ஆக வேண்டும் என்று வாய்ப்பு தேடுகிறார்.
தினேஷ் நடிக்க பவர்ஸ்டார் தயாரிப்பில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. கதையின் கரு பிடித்து போவதால் ஒரு வாரத்திற்குள் முழுகதையையும் சொல்ல வேண்டும் என நடிகர் தினேஷ் கூறுவதால் கதை எழுத அறையிலேயே இருக்கிறார்.
கதை எழுத தொடங்கினால் நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் அடிக்கடி வ ந்து போவதால் கவனம் சிதறுகிறது. இ ந்த அன்பு தொல்லையில் இரு ந்து தப்பிக்க குடியிருக்கும் வீட்டில் கன்னிப்பேய் இருப்பதாக ஒரு பொய் கதையை சொல்கிறார் இயக்குனர் வெற்றி.
அதோடு அ ந்த கதைய வீட்டின் கீழே இருக்கும் வயதான பாட்டி சொன்னதாகவும் பேய் உண்மையை சொல்லிவிட்டதால் எ ந்த நேரமும் தான் அ ந்த பேயால் கொல்லப்படலாம் எனவும் சொல்லும் பாட்டி திடீரென இறந்து போக பேய் கதை கேட்ட நண்பர்கள் அதிர்ச்சியடை ந்து அ ந்த வீட்டுப்பக்கம் வருவதையே நிறுத்தி விடுகிறார்கள்.
இயக்குனர் வெற்றி பொய்யாக உருவாக்கிய பேய் கதை நிஜமானதா... கதையை எழுதி முடித்தாரா... உண்மையில் பேய் என்ற ஒன்று இருக்கிறதா... இதற்கெல்லாம் விடை சொல்வதுதான் மெர்லின் கதை. ஜே.எஸ்.பி.பிலிம்ஸ் ஸ்டுடியோ சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் பெரும் செலவில் தயாரிக்கிறார்.
No comments:
Post a Comment