திரைப்பட தயாரிப்பு துறையில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் மூலம், ஒரு படத்தை எப்படி விளம்பர படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் 24 ஏ.எம் ஸ்டுடியோஸின் உரிமையாளர் ஆர்.டி.ராஜா. நாள்தோறும் வித்தியாசமான அதுவும் வெற்றிகரமான யோசனைகளோடு களம் இறங்கும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, தற்போது எப்படி படத்தை திரையரங்கை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாக்கலாம் என்பதற்காக புதியதொரு யுக்தியை கையாண்டு இருக்கிறார். இந்த புத்தம் புதிய யோசனையை திரையுலகினர் அனைவரும் முழு மனதோடு வரவேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கும் ரெமோ திரைப்படம், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிரூத் என தமிழ் திரையுலகின் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருக்கிறது. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணனின் வலுவான கதையம்சத்தில் உருவாகி இருக்கும் இந்த 'ரெமோ' திரைப்படமானது அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்தே ரசிகர்களின் உள்ளத்தில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கிறது. 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து இருக்கும் முதல் படமான 'ரெமோ', வியாபார ரீதியாக மிக பெரிய வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.
தசரா விடுமுறை நாட்களில் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை தரும் வண்ணமாக அக்டோபர் ஏழாம் தேதி வெளியாக இருக்கிறது ரெமோ. பொதுவாகவே ஒரு திரைப்படமானது அதன் வெளியீட்டு தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே வெளி நாடுகளில் வெளியிடப்படும். ஆனால் தற்போது ரெமோ படத்தின் பாதுகாப்பு கருதி அதை சற்றே மாற்றி இருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. "ஒரு நாள் முன்னதாக நாம் வெளிநாடுகளில் திரைப்படத்தை வெளியிடுவதால், வெகு சுலபமாக அந்த படமானது வெளியே கசிந்து விடுகிறது. ஆனால் ஒரே நாளில், ஒரே சமயத்தில் இந்தியா உட்பட மற்ற வெளி நாடுகளிலும் திரைப்படத்தை வெளியிட்டால், அப்படி நடக்க வாய்ப்புகள் குறைவு. பிரபலங்கள் பலர் திருட்டு வி.சி.டியை ஒழிக்க வழங்கி இருக்கும் பல சிறப்பான முயற்சிகளில் இந்த யோசனையும் சேர்க்கப்பட்டுள்ளது. இது நம்முடைய வாழ்க்கை !! எந்தவித அச்சமும் இன்றி இதை பாதுகாக்க தேவையான அனைத்து வழி வகைகளையும் நாம் உருவாக்க வேண்டும்...' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.
No comments:
Post a Comment