Wednesday, 27 July 2016

வீரசிவாஜி படத்தில் “ சொப்பன சுந்தரி “ பாடல்


மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில்  “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்  படம் விரைவில் வெளியாக உள்ளது.        
கரகாட்ட காரன் படத்தில் சொப்பன சுந்தரி காமெடி கவுண்டமணி, செந்தில் சம்மந்தப்பட்ட பல காட்சிகளில் காமெடியாக வரும். ஆனால் அந்த சொப்பன சுந்தரி யாரென்று யாருக்கும் தெரியாது..
 வீரசிவாஜி  படத்தில் இமான் இசையில்  “ சொப்பன சுந்தரி “ என்ற சிங்கிள் டிராக் பாடலை நடிகர் ஜெயம் ரவி  இன்று இரவு  8 மணியளவில் வெளியிட்டார்.  அந்த பாடலில்  சொப்பன சுந்தரி யார் என்பதற்கான விடை கிடைக்கும்.

மனித உணர்வுகளை பற்றி பேச கூடிய திரைப்படம் 'பயம் ஒரு பயணம்...", என்கிறார் 'பயம் ஒரு பயணம்' படத்தின் கதாநாயகன் டாக்டர் பரத்



அடிப்படையில் டாக்டராக பணியாற்றி வந்தாலும், நடிப்பு  மீது உள்ள காதலால் தமிழ் சினிமாவில்  கால் பதித்து, தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்ட கலைஞர்கள் ஏராளம். அந்த வரிசையில், உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'உன்னை போல் ஒருவன்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, உதயநிதி ஸ்டாலினின் 'இது கதிர்வேலன் காதல்', 'பி.வி.பி. சினிமா' தயாரிப்பில் உருவான 'தோழா', பாபி சிம்ஹாவின் 'கோ - 2' என் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து, தமிழக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்தவர் டாக்டர் பரத். அர்மேனியா நாட்டில் தனது மருத்துவ பட்டப்படிப்பை முடித்துவிட்டு, ஐதராபாத்தில் இதய நோய் ஆலோசகராக பணியாற்றிய  டாக்டர் பரத்,  தற்போது அறிமுக இயக்குனர் மணி ஷர்மா இயக்கி வரும்   'பயம் ஒரு பயணம்'  படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்திருக்கிறார். 'ஆக்ட்டோஸ்பைடர் புரொடக்ஷன்' சார்பில் எஸ். துரை மற்றும் எஸ். ஷண்முகம் தயாரித்து  வரும் 'பயம் ஒரு பயணம்' படத்தில்  விஷாகா சிங், மீனாக்ஷி தீட்சித் முன்னணி கதாப்பாத்திரங்களிலும், ஊர்வசி, சிங்கம் புலி, ஜான் விஜய், முனிஷ் காந்த், யோகி பாபு, லொள்ளு சபா மனோகர், கிங் காங் மற்றும் ஞானவேல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

"நான் மருத்துவராக பணிபுரியும் போது, என் கண் முன்னே  சில உயிர்கள் பிரிவதை நான் பார்த்து இருக்கிறேன். அப்படி உயிர் பிரிந்த ஆத்மாக்கள் என்னுடன் வந்து பேசுவது போல் நான் சில சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். ஒரு சம்பவம் நடந்திருக்காது.ஆனால் அந்த சம்பவம் நமக்கு நடந்தது போலவே தோன்றும். கண்டிப்பாக இது மாதிரியான அனுபவங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் நடந்திருக்க கூடும். அப்படிப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான்  'பயம் ஒரு பயணம்' . முழுக்க முழுக்க மனித உணர்வுகளை பற்றி பேச கூடிய இந்த 'பயம் ஒரு பயணம்' படத்தில் நாங்கள் காமெடிக்கு சற்றும் இடம் கொடுக்கவில்லை. முற்றிலும் ஒரு ஹாரர் படமாக மட்டும் தான்  'பயம் ஒரு பயணம்'  இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த யுக்தியை நாங்கள் கையாண்டுள்ளோம். தமிழ் சினிமாவில் இதுவரை எவரும் கண்டிராத திகில் படமாக  'பயம் ஒரு பயணம்'  இருக்கும் என்பதை முழுமையாக நாங்கள் நம்புகிறோம்...' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்  'பயம் ஒரு பயணம்'  படத்தின் கதாநாயகன் டாக்டர் பரத்.

ரசிகர்களை திகிலில் ஆழ்த்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்  இந்த  'பயம் ஒரு பயணம்'  படத்தில்,  ஒளிப்பதிவாளர் ஐ. ஆண்ட்ரூ, இசையமைப்பாளர் ஒய்.ஆர். பிரசாத், கலை இயக்குனர் கார்த்திக் ராஜ்குமார், படத்தொகுப்பாளர்  எல்.வி.கே. தாஸ், நடன இயக்குனர்  ஷங்கர் மற்றும் ஸ்டண்ட்  மாஸ்டர்  'ஸ்டன்னர்' சாம்  ஆகியோர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.

Bayam Oru Payanam talks about Human Emotions…” says ‘Bayam Oru Payanam’ Lead Dr.Bharath



How many of us know that some of the successful actors in Tamil cinema are doctors by Profession? It’s all because of their passion towards cinema. Dr.Bharath who has earned a special respect for his realistic performance in Ulaganayagan Kamal Hasan’s ‘Unnai Pol Oruvan’, Udhayanidhi Stalin’s ‘Idhu Kathivelan Kadhal’, PVP Cinema’s ‘Thozha’ and Bobby Simha’s ‘Ko 2’ is one among them. It is to be noted that after grabbing a Medical degree from the Republic of Armenia, Dr. Bharath was worked as a Cardio Specialist in Hyderabad.  And now the doctor-turned-actor Dr,Bharath emerged as a Protagonist through the upcoming Horror film ‘Bayam Oru Payanam’. Directed by debutante Manisharma, the film ‘Bayam Oru Payanam’ is produced by S. Durai and S.Shanmugam under the banner ‘Octospider Production’. While Vishakha Singh and Meenakshi Dixit plays the female lead, actors Uvrashi, Singam Puli, John Vijay, Munish Kanth, Yogi Babu, Lollu Sabha Manohar, King Kong and Gnanavel plays pivotal roles in ‘Bayam Oru Payanam’“During my Doctor profession, I used to see quiet few people in their last moments. After their death, I will be having a feel of communicating with them. An incident may not be happened but we will feel like it was happened long before. ‘Bayam Oru Payanam’ will be of that kind and it will portray the Human emotions. There are no comedy tracks in the film because we wanted to give a 100% horror film to the audience and hence we have followed this strategy. I am quite sure that ‘Bayam Oru Payanam’ will stand out-of-the-box from other Horror genre films…” says Dr.Bharath, the hero of ‘Bayam Oru Payanam’ in a confident tone. A bunch of  talented techinichans that includes Cinematographer I. Andrew, Music Director Y.R.Prasad, Art Director Karthik Rajkumar, Editor L.V.K.Dass, Dance Choreographer Shankar and Stunt choreographer Stunner Sam acts as strong support for ‘Bayam Oru Payanam’.

டாக்டர். A.P.J. அப்துல் கலாம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல். விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் இன்று ( ஜூலை 27..7.2016) அனுசரிக்கப்பட்டது.

​டாக்டர். A.P.J. அப்துல் கலாம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல். விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் இன்று ( ஜூலை 27.7.2016) அனுசரிக்கப்பட்டது. இதில் தென்னிந்தியா நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் மேலாளர் முருகராஜ் கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த அரவிந்த் ஃபவுன்டேஷனை சேர்ந்த  மாணவ மாணவியர்களின் படிப்பிற்கு தேவையான புத்தகம் , பேனா , பென்சில் மற்றும் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகம் , அத்தோடு ஒவ்வொரு குழந்தைகளின் கையிலும் மரக்கன்றுகளை கொடுத்து வளர்க்கும் படி கொடுக்கப்பட்டது. இதில் நடிகர் சௌந்தரராஜா , புரட்சி தளபதி விஷால் நற்பணி மன்ற தலைவர் ஜெய சீலன் , செயலாளர் ஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.​