Sunday 29 January 2017

நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கும்: கனிமொழி


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை மற்றும் அத்துமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப் போ‌தாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. இதையொட்டி சுமித்ரா மகாஜன் தலைமையில் தலைநகர் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. தொடர்ந்து நாளை மறுநாள் பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார். இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விவசாயிகள் பிரச்னை குறித்தும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நிகழ்ந்த அத்துமீறல் குறித்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப் போ‌தாக தெரிவித்தார்.

Arrest me or release fishermen & students: Simbu | Full speech on violence in Jallikattu protest


singam 3 movie press meet


மகாத்மா காந்தி நினைவு தினம் இன்று: முதலமைச்சர் பன்னீர்செல்வம் மரியாதை

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 70வது நினைவு தினமான இன்று சென்னை மெரினாவில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செய்தார்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 70வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதில் முக்கிய பங்கு மகாத்மா காந்திக்கு உள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் ‘விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் நாதுராம் கோட்ஸே ஆல் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது நினைவு தினமான இன்று இந்தியாவில் தியாகிகள் தினமாக நடத்தப்படுகிறது. மகாத்மா காந்தியின் 70வது நினைவு தினமான இன்று அவரது சிலைக்கும், படத்திற்கும் நாடு முழுவதும் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செய்தார். அவரை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளும் மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மரியாதை செய்தனர்.

வேலூரில் தீப்பற்றி எரிந்த ரசாயனத் தொழிற்சாலை


வேலூரை அடுத்த ராணிப்பேட்டையில் வேதிப்பொருள் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

தனியாருக்கு சொந்தமான இந்த ஆலையில் வேதிப்பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை ஏற்பட்ட தீ, ஆலை முழுவதும் பரவியது. ரசாயனப் பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்ததால் கடுமையான புகைமூட்டம் ‌எழுந்தது. தகவல் அறிந்துவந்த தீயணைப்புப் படையினர், பல மணிநேரம் முயற்சித்து தீ பரவுவதை கட்டுப்படுத்தினர். இருப்பினும் ஆலையின் ஒருசில பகுதிகளில் தீ எரிந்து வருகிறது. தீயை முழுமையாக அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது பற்றிய தகவல் இதுவரை தெரியவரவில்லை.
தனியாருக்கு சொந்தமான இந்த ஆலையில் வேதிப்பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை ஏற்பட்ட தீ, ஆலை முழுவதும் பரவியது. ரசாயனப் பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்ததால் கடுமையான புகைமூட்டம் ‌எழுந்தது. தகவல் அறிந்துவந்த தீயணைப்புப் படையினர், பல மணிநேரம் முயற்சித்து தீ பரவுவதை கட்டுப்படுத்தினர். இருப்பினும் ஆலையின் ஒருசில பகுதிகளில் தீ எரிந்து வருகிறது. தீயை முழுமையாக அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது பற்றிய தகவல் இதுவரை தெரியவரவில்லை.

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை: நடிகர் சிம்பு பரபரப்பு கருத்து

ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டம் குறித்து உரிய முறையில் விளக்கி இருந்தால் வன்முறை ஏற்பட்டிருக்காது என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சென்னை தியாகாராய நகரில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டார். மேலும் உலகமே வியந்து பாராட்டிய இப்போராட்டத்தின் வெற்றியை கொண்டாட காவல்துறையினர் அனுமதிக்கவில்லை எனவும் சிம்பு தெரிவித்தார்.

வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நடிகர் சிம்பு வலியுறுத்தினார். கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்காவிட்டால் தம்மை கைது செய்யுமாறும் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அரசியலுக்கு தான் ஒருபோதும் வர மாட்டேன் என்றும், மக்களுக்காக தொடர்ந்து போராடப்போவதாகவும் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை விடுத்த லாரன்ஸ்..!

கொண்டாட்டத்தில் முடிய வேண்டிய ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையில் முடிந்தது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் இன்று முதல்வரைச் சந்தித்த லாரன்ஸ் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது இதனைக் கூறினார்.  

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் லாரன்ஸ் தெரிவித்தார். 

போராட்ட நோக்கத்தை திசை திருப்பும் வகையில் எழுப்பபட்ட தனித்தமிழ்நாடு உள்ளிட்ட முழக்கங்களை தாம் எதிர்த்ததாக ராகவா லாரன்ஸ் தெரிவித்தார். 

Friday 6 January 2017

IRRFAN PLAYS PUNJABI BUSINESSMAN FROM CHANDNI CHOWK IN HINDI MEDIUM


 
Irrfan Khan’s next, Hindi Medium, directed by Saket Chaudhary, will show him in an unusual avatar. The actor will be seen playing a rich Punjabi businessman and clothes store owner from Chandni Chowk who is married to Saba Qamar. 
A source revealed that,"The film was shot on real locations like Chandni Chowk, Anand Lok, Karol Bagh and Sangam Vihar to keep things authentic. Irrfan met with and recorded clips of shopkeepers and salesmen while they went about their daily business  to prepare for his role."

"The idea was to capture the essence of affluent Chandni Chowk residents who are known to favour flashy things, so the actor will be seen sporting leather jackets and jhatak clothes; the look is bright and colorful." added the source.
Interestingly, the people that are shown working in Irrfan’s store were selected from real shops.

Besides Chandni Chowk the film was also shot at the posh South Delhi, Gurgaon and Noida. Hindi Medium is a light hearted romantic film about a young couple in Chandni Chowk in Delhi, who aspire to move into society's upper crust. The film traces the trails and tribulations the couple faces on this journey and the impact it has on their relationship.

I felt goosebumps while composing BGM for VSP scenes…” reveals ‘Puriyaatha Puthir’ music Director CS Sam




Composing music for a thriller film will be really a tougher task for any Music Directors and in the case of Debutante composers, it is challenging too.  Debutante Music Director CS Sam, the composer of Vijay Sethupathi - Gayathrie starrer ‘Puriyaatha Puthir’ which is all set to release on 13th January has gained appreciations from the Audience, especially for his medley tracks. Directed by debutante Ranjit Jeyakodi, the Psychological Thriller, ‘Puriyaatha Puthir’ is produced by Rebel Studios and Distributed by J Satish Kumar under the banner JSK Film Corporation.  
“I think ‘Puriyaatha Puthir’ is the best film for me to launch myself as a Music Director in Tamil Film Industry. I am very much glad that the songs of our ‘Puriyaatha Puthir’ has already received good response from Music Lovers. 

Composing BGMs for Vijay Sethupathi sir is simply mind blowing. In fact I felt the Goosebumps while composing the background scores for him. Normally the actors will get the script with dialogues, but Director Ranjit Jeyakodi has given me a separate script, in which the name of the instruments that are to be used will have been mentioned. Since music plays a vital role in the film, we have used the BGMs only where it is needed, because, at certain times silence speaks more than words. We are receiving exciting talks and appreciations from those who have watched ‘Puriyaatha Puthir’, and it obviously raises our nervousness because we are eagerly waiting for the Audience’s response too. January 13 is a big day for all of us.” says Music Director CS Sam in a confident tone.

விஜய் சேதுபதி அவர்களின் காட்சிகளுக்கு இசையமைக்கும் போது, நான் மெய் சிலிர்த்து போனேன்..." என்கிறார் 'புரியாத புதிர்' படத்தின் இசையமைப்பாளர் சி எஸ் சாம்


திகில் படங்களுக்கு இசையமைப்பது என்பது எல்லா இசையமைப்பாளருகளுக்கும், குறிப்பாக அறிமுக இசையமைப்பாளர்களுக்கு சவாலான காரியம் தான். அந்த வகையில், விஜய் சேதுபதி - காயத்திரி நடித்து இருக்கும்  'புரியாத புதிர்' திரைப்படம் மூலம்  அறிமுக இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் சி எஸ் சாம், தன்னுடைய பணியை செம்மையாக செய்திருக்கிறார் என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம். ஏற்கனவே வெளியாகி, இசை பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'புரியாத புதிர்' படத்தின் பாடல்களே அதற்கு சிறந்த உதாரணம். அறிமுக இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி, ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரித்து இருக்கும் இந்த 'புரியாத புதிர்' படத்தை ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் வெளியிடுகிறார் ஜே சதீஷ் குமார். 


"ஒரு அறிமுக இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் நான் அடியெடுத்து வைப்பதற்கு மிக சரியான திரைப்படம் 'புரியாத புதிர்'. இந்த படத்தின் பாடல்கள் யாவும் இசை பிரியர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருப்பது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. 

விஜய் சேதுபதி சாரின் காட்சிகளுக்கு இசையமைக்கும் போது, என்னை அறியாமலையே நான் மெய் சிலிர்த்து போய் விடுவேன். பொதுவாக படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகளுக்கு தான் கதை எழுதப்பட்ட காகிதத்தையும், வசனங்களையும் கொடுப்பது வழக்கம், ஆனால் எங்கள் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, இசையமைப்பாளரான எனக்கும் ஒரு காகித்தை கொடுத்தார். அதில் எந்த காட்சிக்கு என்ன இசை வர வேண்டும் என்றும், எந்த மாதிரியான இசை கருவிகளை உபயோகப்படுத்த வேண்டும் என்றும் எழுதி இருந்தது. இசை ஒரு முக்கிய கதாபாத்திரமாகாவே இந்த படத்தில் பயணிப்பதால், தேவையான இடங்களில் மட்டுமே பின்னணி இசையை கொடுத்து இருக்கிறோம். இதுவரை எங்களின் 'புரியாத புதிர்' படத்தை பார்த்தவர்களிடம்  இருந்து  நல்ல கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம் இது மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுப்புறம் ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை நினைக்கும் போது, சற்று பதட்டமாக தான் இருக்கின்றது. ஜனவரி 13 ஆம் தேதி, எங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான நாள்." என்று மிகுந்த எதிர்பார்ப்புடன்  கூறுகிறார் 'புரியாத புதிர்' படத்தின் இசையமைப்பாளர் சி எஸ் சாம்.

கட்டமா ராயுடு படம் மூலம் பவன் கல்யாணுடன் மீண்டும் இணையும் ஸ்ருதி ஹாசன் .




தமிழில்  அஜித் குமார் மற்றும் தமன்னா நடிப்பில் சிவா இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற 'வீரம்' தற்போது கட்டமா ராயுடு என்ற பெயரில் தெலுங்கில் தயாராவது தெரிந்ததே. இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு இணையாக சுருதி ஹாசன் நடித்து வருகிறார். பெரும் வெற்றி  பெற்ற  கப்பார் சிங் படத்தை தொடர்ந்து இந்த ஜோடியின் இரண்டாம் படம் இது.துரித வேகத்தில் படமாக்க பட்ட இந்தப் படம் இப்பொழுது முடியும் தருவாயில் உள்ளது.பொள்ளாச்சியை தொடர்ந்து இப்பொழுது ஹைதராபாதில் படப்பிடிப்பு  தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

பவன் கல்யாணுடன் ஸ்ருதி ஹாசன் நடித்த பாடல் காட்சி பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்த போது  ஆரவாரம் ஒரு தமிழ் படத்துக்கு இணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வருகின்ற தெலுங்கு வருட பிறப்பு அன்று வெளி இடப படும் இந்தப் படம்  ஸ்ருதி  ஹாசனை தென்னிந்திய திரை உலகில்  மேலும்  உச்சத்தில் உயர்த்தி செல்லும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.தயாரிப்பு ஷரத் மார், இயக்கம் கிஷோர் பர்தசானி.

Power Star Pawan Kalyan and Shruti Hassan re-kindle The Magic



'Katamarayudu' unit completed a successful schedule in pollachi and are now back in Hyderabad.

The shooting of this film has been progressing at a fast pace and most of the film stands completed.

After the  immensely successful blockbuster Gabbarsingh Pawankalyan and Shruti Hassan are back together in 'Katamarayudu' 
Producer Sharrath Marar stated 'It was delight to watch the combination of Pawan Kalyan and Shruti Haasan come alive during the song picturisation at Pollachi. 

Director  Kishore Pardasani  who is onto his second film with Pawankalyan as a director is most satisfied with the progress. He now looks forward to completing the balance shoot in January & February. The film is heading for a UGADI release in March.

Katamarayudu which is produced under the Northstar Entertainment Banner, has music scored by Anoop Ruben, Camera Prasad by Prasad Murella.
 Ali, Nassar, Rao Ramesh, Ajay, Narra Srinu, prithvi, Siva Balaji, Pavitra lokesh,, Rajitha, Pradeep rawat, Tharun arora, Ravi Prakash, Kamal kamaraju, Chaitanya Krishna, Yamini bhaskar,  Asmitha, Rama devi, Bhanu sri  are playing key roles in 'Katamarayudu'.

Sunday 1 January 2017

Bairavaa Official Trailer | 'Ilayathalapathy' Vijay, Keerthy Suresh | Santhosh Narayanan | Bharathan


Kabali Deleted Scenes | Superstar Rajinikanth | Radhika Apte | Pa Ranjith | V Creations