Showing posts with label TAMIL. Show all posts
Showing posts with label TAMIL. Show all posts

Friday, 24 February 2017

சேற்றில் சிக்கி தவித்த காட்டு யானை கும்கி யானைகளின் உதவியுடன் மீட்பு

முதுமலை புலிகள் காப்பத்தில் சேற்றில் சிக்கி தவித்த காட்டு யானை கும்கி யானைகளின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள அபாயரணியம் வனப் பகுதியில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் குடிக்க பெண் யானை வந்துள்ளது. 
அப்போது அந்த யானை சேற்றில் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடியதை அந்த வழியாக சென்ற வனத்துறையினர் பார்த்துள்ளனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு 5 கும்கியானைகள் வரவழைக்கப்பட்டு , அவற்றின் உதவியுடன் பெண் யானை சேற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இதனால் அங்குள்ள அபாயரணியம் வனப் பகுதியில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் குடிக்க பெண் யானை வந்துள்ளது. அப்போது அந்த யானை சேற்றில் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடியதை அந்த வழியாக சென்ற வனத்துறையினர் பார்த்துள்ளனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு 5 கும்கியானைகள் வரவழைக்கப்பட்டு , அவற்றின் உதவியுடன் பெண் யானை சேற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டது. சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட பெண் யானை நிற்க முடியாமல் சோர்வுடன் காணப்படுவதால் அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் “ மாநகரம்”

பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் “ மாநகரம்” சந்தீப் , ஸ்ரீ , ரெஜினா கசான்ட்ரா , சார்லி , முனீஸ் காந்த் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் சந்தீப் பேசியது :- எல்லோரும் தமிழுக்கு நான் மீண்டும் வந்துள்ளேன் என்று கூறுகிறார்கள். நான் சென்னை பையன் , என்னுடைய வீடு கோடம்பாக்கத்தில் தான் உள்ளது. என்னுடைய அம்மா , அப்பா என என்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் இங்கே சென்னையில் தான் இருக்கிறார்கள். நான் வேலை பார்ப்பது தான் ஹைதராபாத்தில். நான் survivalலுக்காக தெலுங்கில் நடிக்கிறேன் , தமிழில் நடிக்கும் போது கதையை தேர்வு செய்து கவனத்தோடு நடிக்கிறேன். இப்போது நான் நடித்துள்ள மாநகரமும் , அடுத்து வரவிருக்கும் மாயவன் போன்ற படங்களும் நிச்சயம் அனைவரையும் கவரும் வகையில் புதுமையான ஒரு படைப்பாக இருக்கும். நான் நேற்று தான் மாநகரம் படத்தை பார்த்தேன். மாநகரம் சென்னையின் பெருமையை பற்றி பேசும் படமாக இருக்கும். படம் பார்த்துவிட்டு நீங்கள் வெளியே வரும் போது சென்னையை பற்றி நீங்கள் அனைவரும் பெருமையாக எண்ணுவீர்கள் என்பது தான் உண்மை. எனக்கு இங்கே உள்ள உண்மையான நண்பர்களில் மிகசிறந்த நண்பர் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள். மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் கதை சொன்ன போது எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. முதலில் நான் தயாரிக்கிறேன் என்று அவரிடம் வாக்கு கொடுத்துவிட்டேன். நம்மிடம் பணம் இல்லையே எப்படி தயாரிக்க போகிறோம் என்று யோசித்து கொண்டு இருந்த போது தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறேன் என்று என்னிடம் கூறினார்    என்றார் சந்தீப்.

நடிகர் ஸ்ரீ பேசியது . இது வரை நான் நடித்த அனைத்து படங்களுக்கும் நீங்கள் அனைவரும் ஆதரவு கொடுத்துள்ளீர்கள். இந்த திரைப்படத்துக்கும் நீங்கள் அதே போல் ஆதரவை கொடுக்க வேண்டும். அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் மாநகரம் திரைப்படத்தை பார்த்த பிறகு படத்தின் கதை  சார்ந்த முக்கிய விஷயங்களை வெளியே வந்து பிறரிடம் பகிர வேண்டாம் என்ற வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார் நடிகர் ஸ்ரீ.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியது :- மாநகரம் திரைப்படம் நிச்சயம் அனைவருக்கும் மனதார பிடிக்கும் ஒரு படமாக இருக்கும். எப்போதும் எங்கள் படங்களுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் மாநகரம் திரைப்படத்துக்கும் கொடுக்க வேண்டும். படத்தை அனைவரும் திரையரங்குக்கு சென்று பார்த்து ரசித்து பைரசியை ஒழிக்க உதவ வேண்டும். காதலில் காத்திருப்பது மகிழ்ச்சியான தருணம் , சினிமாவில் காத்திருப்பது அப்படி அல்ல என்றார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியது :- இது வரை மாநகரம் திரைப்படத்தை பார்த்த அனைவரிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளது. படத்தை பார்த்த பிரபல படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் அவர்கள் படத்தை பற்றி ட்விட்டரில் வெளியிட்ட விமர்சனம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. அவர் அதை வெளியிட்டதை தொடர்ந்து பிரபலங்கள் பலர் எங்கள் குழுவில் உள்ள அனைவரையும் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். வருகிற மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் மாநகரம் திரைப்படம் அனைவருக்கும் புதிய அனுபவமாக இருக்கும் என்றார். 

நீட் தேர்வு: 27-ல் பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

நீட் விவகாரம் தொடர்பாக வரும் 27-ஆம் தேதி பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஜெயலலிதா கொண்டுவர நினைத்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்த முதலமைச்சர், 300 கோடி ரூபாய் செலவில் கோவை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும் என்றும் கூறினார்.
கோவையில் மோனோ ரயில் திட்டம் கொண்டுவர முயற்சி செய்யப்படும் என்று கூறிய அவர், 120 கோடி ரூபாய் செலவில் வெள்ளகோவில் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார். நீட் விவகாரம் தொடர்பாக வரும் 27-ஆம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்திக்க இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
5 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அனுமதி தந்தவுடன் அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

சொத்து வேண்டாம்: தீபா

ஜெயலலிதாவின் சொத்துக்களை நான் எதிர்பார்க்கவில்லை என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த தீபா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறோம் என தெரிவித்தார். அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் தீபா கூறினார். தீபக் நேற்று கூறிய கருத்து குறித்து பேசிய தீபா, தீபக்கை பின்னணியில் இருந்து யாரோ இயக்குகிறார்கள். அவர் பேசியதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்றார். ’போயஸ் கார்டன் இல்லத்திற்கு நானும், தீபாவுதான் சொந்தக்காரர்கள்’ என தீபக் குறியது பற்றி கருத்து தெரிவித்த தீபா, ஜெயலலிதாவின் சொத்துக்களை நான் எதிர்பார்க்கவில்லை என கூறினார்.

ஒரு குடும்பத்திடம் சிக்கிய அதிமுக: ஓ.பி.எஸ்


ஜெயலலிதா எண்ணத்துக்கு எதிராக கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கையில் சென்று விட்டது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று ஆர்.கே.நகரில் அவரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார் ஓ.பன்னீர்செல்வம். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தர்மயுத்தங்கள் வெற்றியடைந்ததாகத்தான் வரலாறு உள்ளது என்றார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடக்கும் வரையிலும், சாமானிய அதிமுக தொண்டர்களிடம் கட்சியும் ஆட்சியும் வரும் வரை நமது தர்மயுத்தம் தொடரும் என்றார்.
மேலும், ஜெயலலிதா தனது பிறந்த நாளில் ஏழைகளுக்கு உதவச் சொன்னார் என்று கூறிய பன்னீர்செல்வம், ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா என்றார். இந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் நடிகை பாத்திமா பாபு இணைந்தார்

Thursday, 16 February 2017

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் 'தீ' குளித்தார்

தீக்குளித்த தொண்டரை மருத்துவமனையில் சந்தித்து பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார்.

முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாகத் தமிழக ஆளுநருக்குப் பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியதும் மனமுடைந்த காஞ்சிபுரம் அதிமுக தொண்டரான மூசா என்பவர் தீக்குளித்தார். உடல்முழுவதும் கடுமையாகத் தீக்காயம் அடைந்த அவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து நேராகக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்றுவரும் அதிமுக தொண்டர் மூசாவைச் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் பேசிய பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் தீக்குளிப்பு, தற்கொலை ஆகியவற்றில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். 

ஆட்சியமைக்க வருமாறு எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்துள்ள நிலையில், கட்சியும், அரசும் தனியொரு குடும்பத்தின் நலனுக்கானதாக மாறிவிடக் கூடாது என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழகத்தின் 13-வது முதலமைச்சரானார் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை, ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் மாலை 4.30 மணியளவில் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனையடுத்து அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற மற்ற 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார்.

Sunday, 12 February 2017

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த மர்மமும் இல்லை: செவிலியர் பிரமிளா


ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த மர்மமும் இல்லை என்று ஜெயலலிதாவுக்கு 2001-ல் சிகிச்சை அளித்த செவிலி பிரமிளா தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை எழுப்பினர். இது குறித்து நடிகை கெளதமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
தமிழக முதலமைச்சராக உள்ள பன்னீர் செல்வம் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழும் சந்தேகங்களை போக்க, விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித மர்மமும் இல்லை என்று அவருக்கு 2001-ல் சிகிச்சை அளித்த செவிலியர் பிரமிளா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித மர்மமும் இல்லை எனவும், முதலமைச்சரின் மரணத்தில் ‌சந்தேகம் உள்ளது என தற்போது எழும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் கூறினார்.
ஜெயலலிதாவுடன் சசிகலா 34 ஆண்டுகள் வாழ்ந்தவர் எனக் கூறிய அவர், ஜெயலலிதாவின் திட்டங்களை சசிகலா சிறப்பாக நிறைவேற்றுவார் எனவும் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் சொல்லும், செயலும் வேறுவேறாக உள்ளது எனவும் பிரமிளா குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயிரை கொடுத்து காப்பேன்; எடுத்த முடிவில் பின்வாங்க மாட்டேன்: சசிகலா

அதிமுக கட்சியை உயிரை கொடுத்தேனும் கட்டுக்கோப்பாக காப்பேன் எனவும், எடுத்து முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் எனவும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
கூவத்தூரில் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ-க்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினர். பின்னர் ஆதரவு எம்எல்ஏ-க்கள் மத்தியில் பேசிய அவர், உயிரை கொடுத்தேனும் கட்சியை கட்டுக்கோப்பாக காப்பேன் என தெரிவித்தார்.
பெண் தான் என்று அச்சுறுத்த நினைத்தால் தைரியமாக எதிர்த்து நிற்பேன் என கூறிய சசிகலா, எதிரிகளின் அனைத்து சதிகளையும் முறியடிப்பேன் எனவும் தெரிவித்தார்.
கோட்டைக்கு சென்று ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்றுவோம் எனக் கூறிய அவர், எம்எல்ஏக்கள் அனைவரும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். எந்த பிரச்னையையும் சமாளிக்கும் தைரியம் தனக்கு இருப்பதாக கூறிய அவர், எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

15 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தால் துன்பப்பட்டு வந்தேன்... ஓ.பன்னீர்செல்வம்


15 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தால் துன்பப்பட்டு வந்ததாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா முதலமைச்சராவதை ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டோம் எனவும், சட்டமன்றத்தில் தனக்கு உள்ள பலத்தை நிரூபிப்பேன் எனவும் தெரிவித்தார்.
15 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தால் துன்பப்பட்டு வந்ததாகவும், அப்போது தனது துன்பத்தை ஜெயலலிதா தீர்த்து வைத்தார் எனவும் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நாளை தலைமைச் செயலகம் செல்லவிருப்பதாகவும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Tuesday, 7 February 2017

மீரா கதிரவன் இயக்கி இருக்கும் 'விழித்திரு' திரைப்படத்தின் டிரைலர், வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி அன்று வெளியிடப்படுகிறது



இயக்குநர் மீரா கதிரவன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் - 'விழித்திரு'. கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்  'விழித்திரு' திரைப்படத்தை, 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். 'U' சான்றிதழை பெற்று,  ரசிகர்களிடையே பெரும் எதிரிபார்ப்பை உருவாக்கி வரும் இந்த படத்தின் டிரைலர், வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி அன்று வெளியிடப்படுகிறது.  

"இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு தரமான திரைப்படம் இந்த விழித்திரு" என்று படத்தை பார்த்த, தமிழ் திரையுலகை சார்ந்த  சில மூத்த கலைஞர்கள் கூறுகையில், எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. நிச்சயமாக இளைஞர்களின் மனதில் ஒரு விதமான விழிப்புணர்ச்சியை எங்களின் விழித்திரு திரைப்படம் விதைக்கும். அதற்கான முதற்கட்ட  சான்று தான் எங்கள்  விழித்திரு  படத்தின் டிரைலர்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் மீரா கதிரவன்.

சசிகலாவை கண்டு பயம் இல்லை: தீபா

சசிகலாவைக் கண்டு தனக்கு பயம் இல்லை எனவும், அவர் அதிமுக சட்டமன்ற குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சட்டசபைக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சசிகலாவை முதல்வராக தேர்வு செய்தாலும் இதனை ஏற்று கொள்ள முடியாது என கூறினார். மக்களும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் கூறினார். தமிழகத்தில் நிலையற்ற தன்மை தொடர்ந்து வருவது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது எனவும் தீபா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா உடன் 33 வருடங்களாக இருந்தது, முதலமைச்சராவதற்கான தகுதி அல்ல என கூறிய தீபா, ஜெயலலிதா விட்டு
சென்ற பணியைத் தொடர வேண்டும் என தொண்டர்கள் எனக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.சசிகலா முதலமைச்சரானால் தமிழகத்தில் நிலையற்ற தன்மை ஏற்படும். புதிய தலைவர் உருவாக வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது என்ற தீபா, மக்கள் தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகத் தெரிவித்தார். தனக்கு நிறைய தடைகள் வருவதாகக் கூறிய அவர், சசிகலாவை கண்டு தனக்கு எந்த பயமும் இல்லை என்றார்.

ஜெயலலிதாவின் மருத்துவ செலவை நான் செலுத்தவில்லை: தீபா

ஜெயலலிதாவின் மருத்துவ செலவை நான் செலுத்தவில்லை என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி இறந்தார். அவரது உடல் நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அமெரிக்க டாக்டர் ரிச்சர்ட் பீலே மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் நேற்று விளக்கமளித்தனர். அப்போது அவர்கள் ஜெயலலிதா சிகிச்சைக்கு மருத்துவ செலவு ரூ. 5.5 கோடி எனவும் அந்தத் தொகையை ஜெயலலிதா குடும்பத்தினர் செலுத்தியதாகவும் தெரிவித்தனர். இது குறித்து கருத்துத் தெரிவித்த தீபா, ஜெயலலிதாவின் மருத்துவச் செலவை தந்த குடும்பத்தினர் யார் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அந்தத் தொகையை தான் தரவில்லை என்றும் கூறினார்.

தேவை இல்லாமல் வதந்தியைப் பரப்புகின்றனர்: பண்ருட்டி ராமச்சந்திரன்

தேவையில்லாமல் சிலர் வதந்திகளைப் பரப்புகின்றனர் என அதிமுகவின் மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
சசிகலா பதவி ஏற்பு மற்றும் அவர் எம்எல்ஏக்கள் தலைவராகத் தேர்வு செய்தது குறித்து அதிமுகவைச் சேர்ந்த பிஎச் பாண்டியன் காலையில் செய்தியாளர்களைச் சந்த்து பேட்டியளித்த போது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.இந்த நிலையில் மதியம் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தனர்.அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தேவை இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சிலர் வதந்தியைப் பரப்புகின்றனர் என்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்டுப்பாடாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஆளுநர்-அதிமுக இடையே குழப்பம்: திமுக

சசிகலா முதலமைச்சராக பதவியேற்பது தொடர்பாக அதிமுக மற்றும் ஆளுநர் இடையே குழப்பம் நீடிப்பதாக திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவையின் அதிமுக தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவருக்கு, பதவிப் பிரமாணம் செய்து வைப்பது ஆளுநரின் கடமை என்றும் கூறினார். திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும், மரியாதை நிமித்தமாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கும் எண்ணம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வீட்டில் நடந்தது என்ன?: விசாரணை நடத்த பி.ஹெச்.பாண்டியன் வலியுறுத்தல்

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22ம் தேதிக்கு முன் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அண்ணாநாகரில் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஹெச்.பாண்டியன், உடல்நலக்குறைவால் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22ம் தேதி போயஸ் கார்டன் இல்லத்தில் வாக்குவாதம் நடந்ததாகவும், அப்போது கீழே விழுந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை யாரும் தூக்கிவிடவில்லை என்றும் ஊடகங்களில் செய்தி வெளியானதாகத் தெரிவித்தார்.
மருத்துவமனைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு செல்லப்படும்போதே மயக்கமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது என்றும் பி.ஹெச்.பாண்டியன் கூறினார்.
ஜெயலலிதா இறந்ததாக தகவல் தெரிந்த உடன், அவரது உடலைப் பார்க்க வேண்டும் என்று தான் கேட்டதாகவும் எம்பாமிங் செய்ய குறைந்தது 4 மணி நேரம் ஆகும் என்று அப்பல்லோ மருத்துவர்கள் சொன்னதாகவும் பி.எச்.பாண்டியன் தெரிவித்தார். ஆனால் 15 நிமிடங்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டதாக தற்போது மருத்துவர் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.

Monday, 6 February 2017

ஆளுநரின் கோவை பயணம் ரத்து

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் நாளை நடக்கும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்கமாட்டார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் நாளை நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இருந்தார். இந்நிலையில் அவரது அந்த பயணம் திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. எனினும் திட்டமிட்டபடி பட்டமளிப்பு விழா நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் சசிகலா முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 2015ஆம் ஆண்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு கெர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில் 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாராசாமி ரத்து செய்து தீர்ப்பளித்தார்.இதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்துள்ள நிலையில் கடந்த மாதமே தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்க்பபட்டது.இந்நிலையில் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆளும் அதிமுக சட்டசபைக்குழு தலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்ட சசிகலா 9ஆம் தேதிக்குள் தமிழக முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியானதுஇதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு காரணமாக சசிகலா பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மருத்துவ செலவு ரூ.5.5 கோடி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மருத்துவ செலவு ரூ.5.5 கோடி வரை இருந்ததாக அப்போலோ மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்தாண்டு செப்டம்பர் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து அரசு தரப்பில் இன்று விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் பாலாஜி, பாபு ஆப்ரஹாம் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அப்போது ஜெயலலிதாவின் மருத்துவச் செலவுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மருத்துவர் பாலாஜி, அவரது மருத்துவச் செலவு ரூ.5.5கோடி என்று தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான் என்று மருத்துவர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் அப்போலோ மருத்துவர் குழு இன்று விளக்கமளித்தது. அப்போது பேசிய மருத்துவர் சுதா சேஷய்யன், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் டிசம்பர் 6ம் தேதி அதிகாலை 12.20 மணிக்கு எம்பாமிங் எனும் முறையில் பதப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். இந்த நடைமுறை 15 நிமிடங்களில் முடிந்ததாகத் தெரிவித்த மருத்துவர் சுதா, பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என்பதால் பதப்படுத்தப்பட்டதாகவும் விளக்கமளித்தார். பிரபலங்கள் இறக்கும்போது உடல் பதப்படுத்தப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்றும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மறைந்தபோதும் அவரது உடல் பதப்பட்டது என்றும் மருத்துவர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.