Tuesday 7 February 2017

ஜெயலலிதா வீட்டில் நடந்தது என்ன?: விசாரணை நடத்த பி.ஹெச்.பாண்டியன் வலியுறுத்தல்

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22ம் தேதிக்கு முன் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அண்ணாநாகரில் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஹெச்.பாண்டியன், உடல்நலக்குறைவால் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22ம் தேதி போயஸ் கார்டன் இல்லத்தில் வாக்குவாதம் நடந்ததாகவும், அப்போது கீழே விழுந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை யாரும் தூக்கிவிடவில்லை என்றும் ஊடகங்களில் செய்தி வெளியானதாகத் தெரிவித்தார்.
மருத்துவமனைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு செல்லப்படும்போதே மயக்கமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது என்றும் பி.ஹெச்.பாண்டியன் கூறினார்.
ஜெயலலிதா இறந்ததாக தகவல் தெரிந்த உடன், அவரது உடலைப் பார்க்க வேண்டும் என்று தான் கேட்டதாகவும் எம்பாமிங் செய்ய குறைந்தது 4 மணி நேரம் ஆகும் என்று அப்பல்லோ மருத்துவர்கள் சொன்னதாகவும் பி.எச்.பாண்டியன் தெரிவித்தார். ஆனால் 15 நிமிடங்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டதாக தற்போது மருத்துவர் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment