Tuesday, 30 August 2016

celebrity badminton league chennai rockers lunch


"பிரகாஷ் ராஜ் சாருக்கும், நிவின் பாலிக்கும் என்றுமே ஒற்று போகாது..." என்கிறார் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன்.


கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் நிவின் பாலி நடித்து வரும் பெயர் சூட்டப்படாத திரைப்படமானது, தமிழக ரசிகர்கள் மத்தியில்  உற்சாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தில் நடித்து வரும் நடிகர் - நடிகைகளும் அந்த எதிர்பார்ப்புக்கு ஒரு முக்கிய காரணம்  என்பதை அழுத்தமாக சொல்லலாம். நிவின் பாலியில் ஆரம்பித்து, நட்ராஜ் சுப்ரமணியம் (நட்டி), கன்னட திரைப்படமான 'யு - டர்ன்' புகழ்  ஷ்ரதா ஸ்ரீனிவாஸ், 'சுட்டக்கதை' புகழ் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி என பல வலுவான நடிகர் - நடிகைகளை உள்ளடக்கிய இந்த பெயர் சூட்டப்படாத திரைப்படத்தில், தற்போது பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது, அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. பிரகாஷ் ராஜின் ஐம்பது சதவீத காட்சிகளை  மணப்பாடு மற்றும் குற்றாலம் பகுதிகளில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன். தற்போது இந்த பெயர் சூட்டப்படாத திரைப்படமானது மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

"சிறந்த தந்தை, உண்மையான தோழன், மிரட்டலான வில்லன் என பிரகாஷ் ராஜ் சாரை பற்றி சொல்லி கொண்டே போகலாம். 'உணர்ச்சி' என்ற சொல்லுக்கு அகராதியாக செயல்படுபவர்  அவர் தான்....அப்படிப்பட்ட உன்னதமான கலைஞர் எங்கள் படத்தில் நடிப்பது, எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும்  எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏ கே சகாயம் என்னும் பெயர் கொண்ட பாதிரியார் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ் சார். அவரின் மகனாக நிவின் பாலி நடித்து வருகிறார்....கதைப்படி இவர்கள் இருவருக்கும் என்றுமே ஒற்று போகாது...என்னதான் தந்தை - மகனாக இருந்தாலும் அவர்கள் ஆலய வழிபாட்டின் போது தான் அதிகமாக   சந்தித்து கொள்வார்கள்....

பிரகாஷ் ராஜ் சாரை பற்றி நமக்கு எல்லோருக்கும் நன்றாக  தெரியும்...ஒரு  படத்தின் கதையானது அவரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் மட்டும் தான் அந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொள்வார். அந்த வகையில், எங்களின் கதையை கேட்ட அடுத்த கணமே அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது, எங்கள் அனைவருக்கும் உண்மையாகவே பெருமையாக இருக்கிறது..." என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன்.


“Cold War between Prakash Raj and Nivin Pauly…” says Director Gautham Ramachandran


The Artist list is growing higher and higher for Nivin Pauly - Director Gautham Ramachandran’s upcoming untitled project. If it was Nivin Pauly, the first pleasant surprise of the film,  it was  followed by Nataraj Subramaniam (Natty), Shraddha Srinivas of U’Turn (Kannada Film) fame, and Lakshmi Priya Chandramouli (Suttakkadhai). The list has become bigger with Prakash Raj playing a very crucial role in the film.  It is to be noted that Gautham has completed 50% of Prakash Raj’s sequences in Manapad- Coutrallam regions and the entire team is currently in their third schedule of shoot.

“A Good father, a best companion, a Notorious Villain and we can say so about Prakash Raj Sir…He is an encyclopedia of Emotions. We are very much proud to have him onboard. Prakash Raj sir plays as Pastor AK Sagayam in this untitled film. Nivin pauly plays his son.  Both dad and son will be rarely meeting each other, and that too only in the church processions…It is almost like a cold war.

As we all know, he does not accept scripts that much easily, the content has to satisfy his expectations, only then he will agree to act in that film. In that case, he as accepted as soon as he heard the script…This is really a proud moment for our whole team…” says Director Gautham Ramachandran in an enthusiastic tone.


தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது 'பயம் ஒரு பயணம்' திரைப்படம்


இந்த ஆண்டு வெளியான 'கான்ஜுரிங் 2' திரைப்படத்தை பார்த்த பலர், தங்கள் தூக்கத்தை பயத்தினால் தியாகம் செய்திருப்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம். தற்போது அந்த வரிசையில், தமிழக ரசிகர்களின் பயத்திற்கு காரணமான திரைப்படமாக வலம் வந்து கொண்டிருக்கிறது சமீபத்தில் வெளியான 'பயம் ஒரு பயணம்' திரைப்படம். விஷாகா சிங்கின் பேய் அவதாரம் தான் அந்த பயத்திற்கு காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.  'ஆக்டோஸ்பைடர் புரொடக்ஷன்' சார்பில் எஸ் துரை மற்றும் எஸ் சண்முகம் தயாரித்து, அறிமுக இயக்குனர் மணிஷர்மா இயக்கி இருக்கும்  'பயம் ஒரு பயணம்' திரைப்படமானது, தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த 'பயம் ஒரு பயணம்' திரைப்படம்  மூலம்,  ஒரு சிறந்த அறிமுக இயக்குனராக மணிஷர்மா தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தி கொண்டுள்ளார்  என்பதை வெகுவாக சொல்லலாம். பயம் ஒரு பயணம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகி இருந்தாலும், ஒரு உண்மையான திகில் அனுபவத்திற்காக   ரசிகர்கள் பலர்,  இந்த படத்தை பார்ப்பதற்கு  படையெடுத்து சென்ற வண்ணம் இருக்கின்றனர். 

'பயம் ஒரு பயணம்' படத்தின் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்த டாக்டர் பரத் மற்றும் மீனாக்ஷி தீட்சித் ஆகியோர் தங்களின் எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கை தட்டல்களை பெற்று இருக்கின்றனர். "தொடர்ந்து நல்ல விமர்சனங்களை  எங்களது 'பயம் ஒரு பயணம்'  பெற்று வருவதை பார்க்கும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க காரணம், எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஒத்துழைப்பும், கூட்டு முயற்சியும் தான். எங்களின் இந்த வெற்றிக்கு முதுகெலும்பாக செயல்பட்ட 'பயம் ஒரு பயணம்' படத்தின் தயாரிப்பாளர்கள் எஸ் துரை மற்றும் எஸ் சண்முகம், இயக்குனர் மணிஷர்மா, விஷாகா சிங், மீனாக்ஷி தீட்சித், ஒளிப்பதிவாளர் ஆண்ட்ரு மற்றும் இசையமைப்பாளர் ஒய். ஆர் பிரசாத்  ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...இந்த வெற்றியின் மூலம் ,  ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எனது எண்ணம் மேலும் அதிகரித்துள்ளது..." என்கிறார் 'பயம் ஒரு பயணம்' படத்தின் கதாநாயகன் டாக்டர் பரத்.

Positive Showers are pouring in for ‘Bayam Oru Payanam’


Who can forget the Devil ‘Valak’ from ‘Conjuring 2’... Many sleepless nights has been experienced by the Audience who had seen ‘Valak’. And now the same situation is happening for those who have watched ‘Bayam Oru Payanam’ and the most fiery ghost Vishaka singh. Produced by S. Durai and S.Shanmugam under the banner ‘Octospider Production’, the film ‘Bayam Oru Payanam’ is being appreciated by both film critics as well as by the Audience. Debutante Manisharma has proved himself as a sustainable Director in Tamil Cinema. It’s been four days since Bayam Oru Payanam was released, but still the Audiences are heading in bunches for ‘Bayam Oru Payanam’ to experience the real horror feel. 

Dr.Bharath, the lead actor of ‘Bayam Oru Payanam’ is highly appreciated for his realistic performance and his pair Meenakshi Dixit has earned more positive reviews equally…“We are very much glad to see the positive showers that are pouring in for our Bayam Oru Payanam. This is all because of our chain work. Thanks to our Producers Durai sir and Shanmugam sir, Director Manisharma, Vishaka Singh, Meenakshi, Our DOP Andrew and Our Composer Y.R.Prasad for holding the chain tight…We all are literally in joy and this has increased my responsibilities to fulfill the expectations of Audience more and more…” says Dr.Bharath, the lead of Bayam Oru Payanam

எட்டு இளம் கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையில் 'தாயம்' விளையாட முடிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி'தாயம்' என்ற வார்த்தையை கேட்டாலே நம் நினைவுகள் யாவும் நம்முடைய குழந்தை பருவத்திற்கு செல்கின்றது. அரசனில் இருந்து சராசரி குடிமகன் வரை அனைவராலும் மதிக்கப்பட்ட, மதிக்கப்பட்டு வரும் ஒரு விளையாட்டு 'தாயம்'. அத்தகைய வலிமையான விளையாட்டின் பெயரை தலைப்பாக கொண்டு உருவாகி இருக்கிறது, 'பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்' சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்து இருக்கும் 'தாயம்' திரைப்படம். கலை நயத்தோடு குறும்படங்களை உருவாக்கும் அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இயக்கி இருக்கும் இந்த 'தாயம்' திரைப்படத்தை இணை தயாரிப்பு செய்திருக்கிறார் பி.திரு. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முழு நீள படத்தை ஒரே அறையில் படமாக்கி இருக்கும் பெருமை 'தாயம்' திரைப்படத்திற்கு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஹாரர் - சஸ்பென்ஸ் - திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் 'தாயம்' திரைப்படத்தில் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படப்புகழ் சந்தோஷ் பிரதாப் மற்றும் புது முகம் அய்ரா அகர்வால்  ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எட்டு கதாப்பாத்திரங்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த 'தாயம்' திரைப்படம், ஒளிப்பதிவாளர் பாஜி (ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவிடம் இணை ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்), இசையமைப்பாளர் சதீஷ் செல்வம் (அறிமுகம்), படத்தொகுப்பாளர் சுதர்சன் (ஜீரோ), கலை இயக்குனர் வினோத் ராஜ்குமார் (உறுமீன், ஒரு பக்க கதை), பாடலாசிரியர்கள் முத்தமிழ் (ஜிகர்தண்டா), அருண்ராஜா காமராஜ், பாடகர்கள் 'கவிதை குண்டர்'  எம்சி ஜாஸ், சக்திஸ்ரீ கோபாலன், நிக்கித்தா காந்தி (லேடியோ - ஐ), அல்போனேஸ் ஜோசப் (ஆரோமலே) மற்றும் சவுண்ட் என்ஜினீயர் கார்த்திக் (ஹாலிவுட்டின் புகழ் பெற்ற 'வேன் ஹெல்சிங்' வீடியோ கேம்மிற்கு சவுண்ட் என்ஜினீயராக பணி புரிந்தவர்) என பல திறமை பெற்ற வலுவான தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.

"நேர்காணலுக்காக  எட்டு இளைஞர்கள் ஒரு தனி அறையில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் அப்படி என்ன நேர்காணலுக்கு சென்றார்கள், அது எப்படி முடிவடைகிறது என்பது தான் எங்களின் 'தாயம்' படத்தின் ஒரு வரி கதை. ஒரே ஒரு அறையில் எங்களின் ஒட்டுமொத்த கதையானது  படமாக்க பட்டிருந்தாலும்,  'தாயம்' படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையானது  காட்சிக்கு காட்சி ரசிகர்களின் ஆர்வத்தை  அதிகரித்து கொண்டே போகும் . ஒரு சிறந்த ஹாரர் படத்திற்கு வலுவான தூணாக அமைவது பின்னணி இசை தான். எனவே, எங்கள் 'தாயம்' படத்தின் பின்னணி இசையையும், பாடல்களையும் பிரத்தியேகமாக கிரீஸ் - மசிடோனியா நாட்டின் புகழ் பெற்ற F.A.M.E.S ஸ்டுடியோவில் ரெகார்ட் செய்து இருக்கிறோம்..படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகளில் நாங்கள் தற்போது மும்மரமாக செயல்பட்டு வருகிறோம்...முழுக்க முழுக்க வித்தியாசமான கதை களத்தில் உருவாகி இருக்கும் எங்களின் 'தாயம்' திரைப்படமானது நிச்சயமாக மற்ற எல்லா திகில் படங்களில் இருந்தும் தனித்து விளங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது...."என்று கூறுகிறார் 'தாயம்' படத்தின் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி

Debutante Kannan Rangaswamy’s ‘Dhayam’ holds the life of eight Youngsters


“We may throw the ‘Dhayam’ (Dice), but it is the God who determines how they fall…” No one would have crossed our Childhood without playing ‘Dhayam’ (Dice). The value on the ‘Dhayam’ (Dice) decides our success path in the game. By keeping that much powerful name as title, ‘Dhayam’ the upcoming Horror-Suspense-Thriller is all set to play dice in the life of eight characters. Produced by ARS sunder under the banner ‘Future Film Factory International’ and Co-Produced by P.Thiru, the film ‘Dhayam’ is directed by debutante Kannan Rangaswamy (Artistry Short film Maker). For the very first time in the history of Indian Cinema, the whole story of ‘Dhayam’ has been shot in a single room.

The film ‘Dhayam’ has Santosh Pratap of ‘Kadhai, Thiraikadhai, Vasanam, Iyakkam’ fame and new face Aira Aggarwal in the lead roles. It is a must to say that, ‘Dhayam’ is very well built with a bunch of talented technicians that includes Cinematographer Baagii (Associate of Nirav Shah), Music Director Satish Selvam (Introducing), Editor Sudharshan (Zero), Art Director Vinoth Rajkumar (Urumeen, Oru Pakka Kathai), Lyricist Muthamizh (Jigarthanda), Arunraja Kamaraj, Singers ‘Kavithai Gundar’ Emcee Jesz, Shakthi Sree Gopalan, Nikitha Gandhi (Ladio from ‘I’), Alphons Joseph(Aaromale) and Sound Engineer Karthik (Renowned Sound engineer for Hollywood game - Van Helsing).

“Eight characters are stuck up in an interview which is going on in a single room. With whom the interview goes on, what is the interview is all about and what is the impact, is the rest story of our ‘Dhayam’. Though the whole story of ‘Dhayam’ revolves in a single room, Audience will not feel bored not even in a single scene because of the racy screenplay. We have specially recorded our songs and background scores in Greece - Macedonia’s famous ‘F.A.M.E.S STUDIO’ which will make the audience to experience live sound. We have completed the whole shoot of the film and I am pretty sure that our ‘Dhayam’ will play dice in the genre of Horror films…” says Kannan, the Director of Dhayam in a confident tone.

உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் 'ஜான்டி ரோட்ஸின்' கனவை நிஜமாக்கிய 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்'


360 டிகிரியிலும் சூறாவளி காற்றை போல சுழன்று பந்தை தடுத்து நிறுத்தும் திறன் கொண்ட 'ஜான்டி ரோட்ஸ்',  'டூ மூவிபஃஃப்ஸ்' மற்றும் 'அக்ராஸ் பிலிம்ஸ்' தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சுதர் இயக்கி வரும் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படத்தின் படப்பிடிப்பில்  ஆர்வத்தோடு கலந்து கொண்டு, கலைஞர்களை உற்சாகப்படுத்தினார். கயல் சந்திரன் மற்றும் சாட்னா டைட்டஸ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் இந்த  'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படத்தின் படப்பிடிப்பானது, சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரம்மாண்ட கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்று இருந்த பல அரிய பொக்கிஷங்களான விருதுகள், கேடயங்கள்,  முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கையொப்பம் இட்ட மட்டைகள் - பந்துகள், வீரர்களின் அரிய புகைப்படங்கள் ஆகியவற்றை காண வந்த தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள்   தலைச் சிறந்த ஆட்டக்காரரான  'ஜான்டி ரோட்ஸ்', அங்கு நடைபெற்று கொண்டிருந்த  'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, படக்குழுவினரோடு உற்சாகமாக கலந்து பேசினார்.  இந்த பிரமாண்ட கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் படப்பிடிப்பை நடத்தி வரும் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்'  படக்குழுவினரின் அர்ப்பணிப்பை பார்த்து வியந்த ஜான்டி ரோட்ஸ், அவர்களை வெகுவாக பாராட்டியதோடு, தனது வாழ்த்துக்களையும் அவர்களுக்கு தெரிவித்தார்.

"அடிப்படையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரரான  எனக்கு, கிரிக்கெட் தான் உலகம். அந்த கிரிக்கெட் விளையாட்டை பெருமை படுத்தும் விதத்தில் நான் ஆரம்பித்த இந்த கிரிக்கெட் அருங்காட்சியகத்துக்கு   ஜான்டி ரோட்ஸ் வருகை தந்தது, எங்கள் ஒட்டுமொத்த  'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படக்குழுவினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. எப்படி ஒரு தமிழ் திரைப்படம் உருவாக்கப்படுகிறது  என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், என்கின்ற ஆர்வத்தை கொண்டவர் ஜான்டி ரோட்ஸ். அவர் எங்களின்  'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு எங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தது, உண்மையாகவே பெருமையாக இருக்கிறது..." என்கிறார் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஜெ.கே.மஹேந்திரா. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜூனியர் பிரிவுக்காக விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவிற்கும், கிரிக்கெட்டிற்கும் எப்போதுமே ஒரு இணை பிரியா அன்பும், ஒற்றுமையும் இருந்து வருகிறது. அதனால் தான் பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலர் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது  'ஜான்டி ரோட்ஸும்' தமிழ் சினிமா மீது ஆர்வம் காட்டி வருவது, தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது...

The team ‘Thittam Poattu Thirudura Kootam’ has fulfilled the dream of Legendary Cricketer Jonty Rhodes


Jonty Rhodes the World class Cricketer known for his fielding prowess has joyfully visited the shooting spot of ‘Kayal’ Chandran - Satna Titus starrer ‘Thittam Poattu Thirudura Kootam’ that is produced by ‘Two MovieBuffs’ jointly with ‘Across Films’. The shooting was held recently in a grand Cricket Museum at Chennai which consisted of rare collections like Shields, Award Trophies, Leading Cricketer’s signed Bats and Balls, so on. The fielding revolutionist Jonty Rhodes has made his visit to the museum and he was surprised by the efforts of the unit of  ‘Thittam Poattu Thirudura Kootam’ to give the perfect pitch to shoot an important sequence. After an enthusiastic conversation, Jonty Rhodes had conveyed his wishes to the whole team of ‘Thittam Poattu Thirudura Kootam’ of  Watching the shoot of a Tamil Film. 

“As a Ranji Trophy player, I feel really delightful in welcoming the legendary fielder Jonty Rhodes to our Cricket Museum and it is really a proud moment for our whole ‘Thittam Poattu Thirudura Kootam’ team. His hearty wishes to our unit is absolutely priceless. Jonty Rhodes is always curious to know about how a Tamil film has been created…And today we (‘Thittam Poattu Thirudura Kootam’ team) have fulfilled his dream…” says J.K.Mahendra, who is playing  one of the important characteristic role in ‘Thittam Poattu Thirudura Kootam’ and also a former Cricketer of Indian Junior team.  
The popular pillars of cricket and films go together like Rhodes and fielding .The visit of Jonty Rhodes to the sets of a tamil film has initiated a huge speculation on the possible role of Jonty Rhodes as an actor.

இரு கில்லாடிகள் “ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார் பாரா.. ஜாக்கிசான் ஆவல்

 
ஜாக்கிசான் நடித்து வெளியான ஸ்கிப் டிராஷ் ( SKIP TRACE ) என்ற படம் சீனாவில் மட்டுமே வெளியாகி முதல் நாளில் 420 கோடி ரூபாய் வசூல் சாதனை பெற்று ஜாக்கியின் மனதில் நம்பிக்கையை விதைத்தது. ரிலீஸான ஒரே வாரத்தில் 1000 கோடியை வசூல் செய்தது. அதுவும் சீனாவில் மட்டுமே.
பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள SKIP TRACE படம் தமிழில் “ இரு கில்லாடிகள் என்ற பெயரில் வெளியாகிறது.
நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆகிலப் படங்களை விநியோகம் செய்திருக்கும் சன்மூன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக விஸ்வாஸ் சுந்தர்    SKIP TRACE  ( இரு கில்லாடிகள் )  “ படத்தை செப்டம்பர் 2 ம் தேதி வெளியிடுகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தை சீனாவில் வெளியான அன்றே திரையரங்கிற்கு சென்று  பார்த்து பாராட்டினார் ஜாக்கிசான்.  அவர் நடித்த (SKIP TRACE ) படமும் அன்றே ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
வருகிற செப்டம்பர்  2 அன்று வெளியாகும் இந்த இரு கில்லாடிகள் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பார் பாரா என்று ஜாக்கிசான் ஆவலாக உள்ளதாக அவரது தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

'தனி ஒருவன்' - ஒரு வருடம்.. கொண்டாடப்படுகிறது...ஜெயம் ரவி நெகிழ்ச்சி


ஏ ஜி எஸ் என்டர்டைன்மெண்ட் தயாரித்து, இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'தனி ஒருவன்' திரைப்படம், 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒரு வருடத்தில் தனி ஒருவன் திரைப்படத்திற்காக ஜெயம் ரவிக்கு கிடைத்த விருதுகளும், பாராட்டுகளும் ஏராளம். அதுமட்டுமின்றி, ஜெயம் ரவியின் கமர்ஷியல் ஹீரோ என்னும் அந்தஸ்தை இந்த 'தனி ஒருவன்' திரைப்படம் மேலும் உயர்த்தி இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

'தனி ஒருவன்' திரைப்படம் வெளியாகி ஒரு வருட காலமானாலும், அதற்காக நான் பெற்று வரும்  வாழ்த்து செய்திகளும், பாராட்டு மழைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 'தனி ஒருவன்' என்ற தலைப்பு வேண்டுமானால் ஒற்றைப்படையில் இருக்கலாம், ஆனால் எங்கள் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் தங்களின் முழு உழைப்பையும்  தனி ஒருவன்  படத்திற்காக கொடுத்தது தான் இந்த மாபெரும் வெற்றிக்கு முழு காரணம். குறிப்பாக இந்த படத்தின் வெற்றிக்காக முழு ஆராய்ச்சியில் இறங்கி, படத்தின் கதை களத்தை வலுவாக்கிய இயக்குனர் மோகன் ராஜாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அதே சமயத்தில் எங்களின் தொழில் நுட்ப கலைஞர்கள், சக நடிகர் - நடிகைகள், எங்களின் தயாரிப்பாளர்கள் (ஏ ஜி எஸ் என்டர்டைன்மெண்ட்), நண்பர்கள், பெற்றோர்கள், ஊடக நண்பர்கள், என்னுடைய வாழ்க்கை துணைவி  ஆரத்தி மற்றும் என்னுடைய எல்லாமுமான ரசிகர்களுக்கும், பொதுவான சினிமா பார்வையாளர்களுக்கும் என்னுடைய நன்றிகளை இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

"தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி தற்போது பேசப்பட்டு வந்தாலும், நானும் என்னுடைய சகோதரர் மோகன் ராஜாவும்  மற்ற வேலைகளில் ஈடுபட்டு வருவதால், இரண்டாம் பாகத்தை பற்றி இன்னும் சரிவர பேசவில்லை. தனி ஒருவனின் மாபெரும் வெற்றியானது என்னுடைய பொறுப்புக்களையும், கடமைகளையும் அதிகரித்துவிட்டது. இனி நான் நடிக்கும் படங்கள் யாவும் தனி ஒருவன் தரத்தில் இருக்க வேண்டும் எனவும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பதும்  தான் அந்த பொறுப்பு. தற்போதைக்கு இது தான் என்னுடைய தலையாய  குறிக்கோளாகவும், கடமையாகவும் இருந்து வருகிறது. நான் பெற்று வரும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், ஆசிர்வாதங்களும் தான் அந்த குறிக்கோளுக்கு சிறந்த உரமாக இருக்கும் என பெரிதும் நம்புகிறேன்...' என்று நம்பிக்கையுடன்  கூறுகிறார் ஜெயம் ரவி.⁠⁠⁠⁠


வெற்றிக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை உணர்த்தி இருக்கிறது 'சென்னை மாவட்ட மூத்தோர் தடகள கழகம்' நடத்திய தடகள போட்டி


அடுத்த தெருவில் இருக்கும் கடைக்கு செல்ல வேண்டுமென்றால் இரு சக்கர வாகனம்..., நூறடி தொலைவில் இருக்கும் ஆலயத்திற்கு செல்ல வேண்டுமென்றால் நான்கு சக்கர வாகனம்...இப்படி தான்  உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தராமல்  நாம் இன்றைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த கணினி உலகிலும், சென்னையை சார்ந்த  86 வயதான பெண்மணி ஒருவர், உலகளவில் நடைபெற இருக்கும் தடகள போட்டியில் கலந்து  கொள்ள இருப்பது, நம்மை உடல் ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்க வைக்கிறது...

'சென்னை மாவட்ட மூத்தோர் தடகள கழகம்' சார்பில் செண்பக மூர்த்தி (தலைவர்), ருக்மணி தேவி (பொருளாளர் - சிறந்த 'தடியூன்றி தாண்டுதல்' வீராங்கனை) மற்றும் சசிகலா (செயலாளர்) ஆகியோரால் 14 ஆம் முறை நடத்தப்பட்ட   தடகள போட்டியானது, நேற்று சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 100 மீட்டர், 200 மீட்டர் என ஆரம்பித்து 10000 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டம் எறிதல், 5 கிலோமீட்டர் நடக்கும் போட்டி என நடைபெற்ற  வெவ்வேறு போட்டிகளில்  35 வயதை கடந்த ஆண்களும், பெண்களும் மிகுந்த ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். இந்த மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் அனைவரும் தேசிய மற்றும் உலகளவில் நடைபெற இருக்கும்  தடகள போட்டியில் கலந்த கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

டெய்சி விக்டர் என்கின்ற 86 வயதான பெண்மணி ஒருவர் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்திலும், நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டியிலும் வெற்றி பெற்று, விரைவில் ஆஸ்திரேலியா நாட்டின்  சிட்னி நகரில் உலகளவில்  நடைபெற இருக்கும்   தடகள போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். "35 வயதில் தான் மனிதனுக்கு சர்க்கரை நோயும், மன அழுத்தமும் உண்டாகுகிறது. ஆனால் முறையான உடற் பயிற்சி மூலம் அவற்றில் இருந்து நாம் நம்மை எளிதாக பாதுகாத்து கொள்ளலாம்.  35 வயதில் இருந்து 100 வயது வரை உள்ள ஆண்களும் பெண்களும் பங்கேற்ற இந்த போட்டியில், 86 வயதானாலும் சிறந்த ஆற்றலோடு திகழும் டெய்சி விக்டர் உலகளவில் நடைபெற இருக்கும்  தடகள போட்டிக்கு முன்னேறி இருப்பது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கின்றது. அவர்களை போல் இன்னும் பல திறமையான வீரர்களை வெளி கொண்டு வருவது தான் எங்களின் முக்கிய குறிக்கோள்...நிச்சயமாக அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்...." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'சென்னை மாவட்ட மூத்தோர் தடகள கழகத்தின்' தலைவர் செண்பக மூர்த்தி.

XIV Chennai District Masters Athletic Meet 2016

A person who is fit is capable of living life to its fullest extent…” The Modern Society has upgraded us to technology mode, but at the same time we are losing the importance of being fit. What, if an 86 year old women wins in National athlete meet and selected for International meet… 

The XIV CHENNAI DISTRICT MASTERS ATHLETIC MEET 2016 organized by Shenbaga Moorthy (President - CHENNAI DISTRICT MASTERS ATHLETIC MEET), Rukmani Devi (Treasurer and a Pole Vault Champion) and Sasikala (Secretary) was held on 28th August, 2016 (Sunday) at Jawaharlal Nehru Stadium, Chennai.  Men & Women above the age of 35 yrs have actively participated in 100 M, 500 M…., 10000 M, Long Jump, High Jump, Triple Jump, Pole Vault, Javelin Throw, Discus Throw, Shot-put, Hammer Throw and 5 KM Walk. Athletes those who are selected in this District meet will be participating in State, National, Asian and World meet. 

Daisy Victor, an 86 year old energetic Woman has selected for World level Meet for her topping performance in 100 M Dash, Long Jump and Triple Jump. “35 is the starting age for Sugar, Blood Pressure and so on, but keeping our body fit will overcome those hurdles. We have participants from the age group of 35 and our senior most athlete is 100 years old. We are very much glad to see our most energetic Daisy has been selected for the 2016 World meet that is going to happen in Sydney…We still want to explore more talented elders from our Society and we are pretty sure that it will happen in the coming days…" says Shenbaga Moorthy, the President of CHENNAI DISTRICT MASTERS ATHLETIC MEET in a positive tone.

Sunday, 28 August 2016

நல்ல காரியங்களை முன் நிறுத்தி தொடங்க பட்டிருக்கிறது 'கணேஷ் 365' ஓவிய கண்காட்சி


கிறிஸ்தவம், முஸ்லீம் , இந்து, ஏன் நாத்திகம் பேசும் மக்களால் கூட நேசிக்க படும் ஒரு தெய்வம் விநாயகர். மிக விரைவில் வர இருக்கும் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாட மக்கள் அனைவரும்  தங்களை தயார் செய்து வருகின்றனர். அதற்கு ஓர் உதாரணம் தான் 'ஆர்ட் ஹவுஸ்' சார்பில், விரைவில் வெளியாக இருக்கும் 'மியாவ்' படத்தின் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜ் தொடங்கி இருக்கும் 'கணேஷ் 365' என்னும் ஓவிய கண்காட்சி. சென்னையில் நேற்று தொடங்கிய இந்த அற்புதமான 'கணேஷ் 365' ஓவிய கண்காட்சியை, தேசிய விருது பெற்ற நடிகரும், விரைவில் வெளியாக இருக்கும் 'வல்லவனுக்கும் வல்லவன்' படத்தின் கதாநாயகனுமான பாபி சிம்ஹா தொடங்கி வைத்தார். அவருடன் இணைந்து சன் மியூசிக் தொகுப்பாளர் ஆடம்ஸ்சும் இந்த கண்காட்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. சக்தி விநாயகர், கண் திருஷ்டி விநாயகர், பால விநாயகர், பக்தி விநாயகர் என விநாயகரின்  365 அவதாரங்கள்  இந்த கண்காட்சியில் இடம் பெற்று இருக்கிறது. இந்த ஓவியங்கள் அனைத்தும் குழந்தைகளாலும், பள்ளி மாணவர்களாலும் வரைய பட்டிருப்பது மேலும் சிறப்பு.


"எல்லா மதத்திலும் பொதுவாக போதிக்கப்படுவது ஒன்று தான்...அது தான் 'அன்பு'. நாம் எந்த மதத்தினராக இருந்தாலும் சரி, நம்முடைய சக மக்களின் மதத்திற்கும் உரிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும். அது தான் ஒரு உண்மையான இந்திய குடிமகனுக்கு அழகு. எனது சிறு  வயது முதலே விநாயகர் மீது எனக்கு ஒரு தனி அன்பு உண்டு.அந்த அன்பை வெளிப்படுத்தும் வண்ணமாக தான் நாங்கள் இந்த 'கணேஷ் 365' ஓவிய கண்காட்சியை தொடங்கி இருக்கிறோம். விரைவில் வர இருக்கும் விநாயகர் சதூர்த்தியை நாம் அனைவரும் அன்போடு கொண்டாட வேண்டும் என்பது தான் இந்த கண்காட்சியின் மைய கருத்து...இன்று தொடங்கி இந்த காண்காட்சியானது வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்து நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான 'விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்..." என்கிறார் 'மியாவ்' படத்தின் தயாரிப்பாளரும், 'ஆர்ட் ஹவுஸ்' கலை கூடத்தின் உரிமையாளருமான வின்சென்ட் அடைக்கலராஜ்.

"விநாயகரின் 365 அவதாரங்களை வரைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதுவும் இந்த ஓவியங்கள் அனைத்தும் குழந்தைகளால் வரைய பட்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது எனக்கு மிக பெரிய வியப்பாக இருக்கிறது. இத்தகைய அற்புதமான ஓவிய  கண்காட்சியை திறந்து வைப்பதில் நான் எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். இப்படி ஒரு உன்னதமான முயற்சியை மேற்கொண்டு இருக்கும் வின்சென்ட் அடைக்கலராஜ் சாருக்கு எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்..." என்று கூறினார் 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தின் கதாநாயகன் பாபி சிம்ஹா. இந்த கணேஷ் 365 ஓவிய கண்காட்சியின் மூலம் திரட்டப்படும் நிதியானது, கௌதமியின் 'லைப் அகைன்' என்னும் புற்று நோயாளிகளுக்கான தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.⁠⁠⁠⁠

'GANESH 365' Art Exhibition for a Good Cause


Whether it may be a Christian or a Hindu or a Muslim or even a Atheist, Lord Ganesh will be loved by every human being on this earth. As we know that Vinayakar Chaturthi is fast approaching, the whole of India is eagerly elevating high in welcoming Lord Ganesh. Producer Vincent Adaikalaraj of the upcoming Comedy-Thriller 'Meow' is one among them. The artistic Producer has organised an Art exhibition named 'Ganesh 365' at Art Houz in chennai today. The exhibition was inaugurated by the national award winning actor and 'Vallavanukum Vallavan' lead Bobby Simha and also the exhibition has witnessed the presence of Sun Music VJ Adams. It is to be noted that the exhibition was filled by tremendous Art works drawn by numerous child artists and in total there were 365 different avatars of Lord Ganesh. 

"Whatever the religion may be, as Indians we must have Mutual respect to all religion. I love Lord Ganesh and as a tribute to him we have organised this 'Ganesh 365' art exhibition. The main motive of this exhibition is to spread love of Ganesh on the fast approaching Vinayakar Chaturthi... This art gallery will be opened to all from today to September 5th. Happy Vinayakar Chaturthi to all..." Says Vincent Adaikalaraj, the Producer of Meow and the founder of Art Houz.

"It is quite a difficult job to paint 365 avatars of Lord Ganesh and that too by Children. I am very much delighted to inaugurate this 'Ganesh 365' art exhibition. Thanks to Vincent Adaikalaraj raj Sir for taking such a valuable initiative. Happy Vinayakar Chaturthi to everyone..." Says and signs off Bobby, the lead of Vallavanukum Vallavan.

Actor Soori celebrates his birthday in the sets of Udhayanidhi Stalin's next project.
Making the audience  happy is the priority of an actor and actor Soori  basking on the glory of his continuous  success in the recent past had a reason to be personally happy. The popular comedy actor's birthday was celebrated in a grand manner in the sets of the untitled film starring Udhayanidhi Stalin and directed by Director Ezhil.

"Celebrating his birthday in our sets was just a gesture to honour the talented comedian of our times. I have become a fan of his rib tickling comedy and I am sure with the choice of films he has in his kitty including this film with me will elevate him to next level..." said Udhaynidhi Stalin.

Soori  meanwhile turned emotional on his birthday being celebrated in a grand way says, "it needs a big heart to recognize somebody's birthday as your own birthday. The amount of effort taken to celebrate my birthday by Udhay sir will be imprinted in my heart forever. No words will be good enough to thank him and Director Ezhil for this gesture. I am moved and realize my responsibility as an actor to achieve more to justify this gesture" concluded Soori.

நடிகர் விஷால் பிறந்த நாளை முன்னிட்டு

சென்னை திருவல்லிக்கேணி அரிமா சங்கம் மற்றும் M.P.S.பாலி கிளினிக் இனைந்து நடத்தும் மாபெரும் இலவச குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாமை நடிகர் விஷால் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்


      நடிகர் விஷால் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி அரிமா சங்கம் மற்றும் M.P.S.பாலி கிளினிக் இனைந்து நடத்தும் மாபெரும் இலவச குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து நடிகர் விஷால் பேசியது :- இது குழந்தைகளுக்காக நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாம் தாங்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை இங்கே அழைத்து வந்து பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறேன். இது மிகச்சிறந்த மருத்துவ முகாமாகும் தாங்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை இங்கே உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு அழைத்து வருமாறு கேட்டு கொள்கிறேன் என்றார் விஷால்.


 நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மருத்துவ முகாமில் ஒரு குழந்தைக்கு விஷால் தேவி என பெயரிட்டார்.


நடிகர் சங்கத்தை பற்றி குறை கூறுபவர்கள் ஆதாரம் இருந்தால் நிருபிக்கட்டும் பழைய முறைகேடுகள் பற்றிய எல்லா தகவல்களையும் இன்னும் 10 நாட்களில் நாங்கள் வெளியிடுவோம். வாராஹியிடம் ஏதாவது ஆதாரம் இருப்பின் அவர் என்னை வந்து நேரடியாக சந்திக்கட்டும். யார் வேண்டுமானாலும் என்ன குற்றசாட்டுகளை வேண்டுமானாலும் கூறலாம் அதை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். நாங்கள் இன்னும் டெண்டரை விடவில்லை எங்களுக்கு இன்னும் சி.எம்.டி.ஏ approval வரவில்லை. வாராஹி சொல்வதில் உண்மை இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இதுவரை எந்த கடிதமும் எனக்கு வரவில்லை , நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. என்றார் விஷால்.
கடலை போட பொண்ணு தேடி சென்னை வரும் ஹீரோ
   இந்த உலகத்தின் ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் காரணம் இரண்டே விஷயங்கள்
தான். ஒண்ணு மண்ணு. இன்னொண்ணு பொண்ணு. மண்ணுக்காக நடந்த சண்டைகளை விட
பொண்ணுக்காக நடந்த சண்டைகள் தான் இங்கே அதிகம். மதுரையில இருக்கற பையன்
ஒருத்தனுக்கு மத்த பசங்க மாதிரி ஒரு பொண்ணுகூட கடலை போட ஆசை. சென்னை போனா
தன்னோட ஆசை நிறைவேறிடும்னு கிளம்பி வர்றான். சென்னை அவனோட ஆசையை பூர்த்தி
செய்ததா?என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையோடும் யதார்த்தத்தோடும் சொல்ல
வருகிறது ‘கடலைபோட பொண்ணு வேணும்’ படம்.
      முதல் படம் ’ரீங்காரம்’ ரிலீஸ் ஆவதற்குள்ளாகவே ’கடலை போட பொண்ணு
வேணும்’ என்ற படத்தை முடித்துவிட்டு அடுத்து பலசாலி என்னும் படத்தை
இயக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் சிவகார்த்திக்.  இவர் சமுத்திரகனி,
சிஜே.பாஸ்கர், சுரேஷ், மூர்த்தி ஆகிய இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர்.
ரீங்காரம் படத்தின் படப்பிடிப்பைப் பார்க்க வந்த தயாரிப்பாளர் தான்
’கடலைபோட பொண்ணு வேணும்’ படத்தின் தயாரிப்பாளர். அந்த படப்பிடிப்பில்
இயக்குனரின் திறமையைப் பார்த்து அமைந்த படம் தான் ’கடலை போட பொண்ணு
வேணும்’.
ஆதித்யா டிவி தொகுப்பாளர் அஸார் ஹீரோ. ஹீரோயின்  மனீஷா. இவர்களைத் தவிர
படவா கோபி, லொள்ளுசபா சுவாமிநாதன், லொள்ளுசபா மனோகர், ஃபைட்டர் தினா
இப்படி ஒரு காமெடி பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு இஎன்ஜே ஹரீஷ். பர்மா படத்தோட இசையமைப்பாளர் சுதர்சன் தான்
இசை. படத்தொகுப்பு வில்சி. ஆர்ஜி மீடியா சார்பில் ராபின்சன்
தயாரித்திருக்கிறார்.
  இயக்குனரின்  அடுத்த படமான பலசாலி ஷூட்டிங்கும் பரபரப்பாக
சென்றுகொண்டிருக்கிறது. பலமே இல்லாத ஒருத்தன் எப்படி பலசாலி ஆகிறான்
என்பது தான் கதை. இது சூது கவ்வும் பாணியிலான பிளாக் ஹியூமர்.
எல்லா தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக
உருவாகி இருக்கிறது ’கடலைபோட பொண்ணு வேணும்’ படம்.

Sonarika Bhadoria goes beyond bikini

For all those who took offence in Sonarika Bhadoria donnig a bikini, not knowing that it was for her upcoming movie - SAANSEIN the Last breath, would be excited to see her in this simple yet beautiful bridal saree. 

The still released by the production house makes the point clear that Sonarika's character is not limited to just donning a bikini but seems to have various shades to it. Where actresses are mere eye-candy and added attraction, either grabbing attention with their hot bods & donning skimpy clothes or dancing around trees, it looks like Sonarika is set to surprise us with her different avatars. With so much of stark variation in a character's presentation, one will have to wait and watch what all is in store in this (horrance) Horror Romance. 

Sonarika, “I am playing a different off beat character. The reason I took the role is because I loved the script. There are various shades to my role and I am sure my fans will love me in this avatar.”

Also starring Rajniesh Duggall, Hiten Tejwani, Neetha Shetty, Sachi Ruia, Amir Dalvi and Vishal Malhotra, shot in the exquisite locales of Mauritius, the film is directed by Rajiv S Ruia and produced by GPA productions. 

The spooky romantic fare SAANSEIN the Last breath is arriving on November 11, 2016 to send the chill down your spine.

அதிரடி ஆக்ஷன் படம் "போங்கு "

          
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு , ராஜரத்தினம்ஸ்ரீதரன் மூவரும்  இணைத்து தயாரிக்கும் படம் “ போங்கு “ சதுரங்க வேட்டை வெற்றி படத்தில் நடித்த நட்ராஜ் சுப்ரமணியன்  (  நட்டி ) இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்கதாநாயகியாக ருஹி சிங் நடிக்கிறார்மற்றும் அதுல் குல்கர்னிமுண்டாசு பட்டி ராம்தாஸ்அர்ஜுன்வில்லன் ஷரத் லோகித்தஷ்வாராஜன்மனிஷா, பாவா லட்சுமணன்மயில்சாமிசாம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவு     -  மகேஷ் முத்துசாமி                                                                                                                     
இசை  - ஸ்ரீகாந்த் தேவா  /   பாடல்கள்    -  கபிலன்தாமரைமதன்கார்க்கி                                 
எடிட்டிங்    -        கோபிகிருஷ்ணா /   கலை         -        ராஜமோகன்                                         
ஸ்டன்ட்      -        சுப்ரீம் சுந்தர் /  நடனம்            -        கல்யாண் , பாப்பி                   
தயாரிப்பு  மேற்பார்வை -       .பி.ரவி                                                                         
தயாரிப்பு          -       ரகுகுமார் என்கிற திருராஜரத்தினம்ஸ்ரீதரன்                                       
கதைதிரைக்கதைவசனம்இயக்கம்         -       தாஜ்இவர் பிரபல கலை இயக்குனர் சாபுசிரில் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.                                                                      
படம் பற்றி இயக்குனர் தாஜ் கூறியதாவது...
எந்த ஒரு குற்றமும் புதிதாக உருவாகிறது இல்லைஎல்லா குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்தந்த காலகட்டத்திற்கேற்ப மாதிரி நவீனமாக்கப் பட்டு குற்றம் நடந்து கொண்டிருக்கிறது.
குற்றங்களுக்கான  ஆனிவேர் எது ? யார்  என்று பார்த்தல் வெளியிலிருந்து யாரும் காரணமாக இருக்க மாட்டார்கள்உள்ளேயே இருந்து கொண்டு வெளியாட்களை கொண்டு அந்த குற்றத்தை நிகழ்த்தி இருப்பார்கள்.
அப்படித்தான் ரோல்ஸ் ராய்ஸ் காரின்  திருட்டும்.  யார் ? யாரால் ? எப்படி திருடப் படுகிறது என்பது பரபரப்பான திரைக்கதையாக இருக்கும்.
காஸ்ட் லியான கார் பற்றிய கதையை காஸ்ட்லி செலவு செய்து படமாக்கி இருக்கிறோம்ஒரு புதிய இயக்குனருக்கு இவ்வளவு செலவு செய்து படமாக்க ஒத்துக் கொண்ட தாயாரிப் பாளர்களுக்கு நான் ரொம்ப கடமைப் பட்டுளேன் என்றார் இயக்குனர் தாஜ்.

Tuesday, 23 August 2016

joker tamil movie success meet


Chennaiyin FC announcing PUMA as the club's official kit partner.


Also attached are photos of Chennaiyin FC players Jeje Lalpekhlua and Dhanpal Ganesh at a PUMA store in Mumbai.
Chennaiyin FC announce PUMA as official kit partner
Chennai, August 23 2016 – Indian Super League champions Chennaiyin FC is delighted to announce PUMA as the club’s official kit partner.
PUMA will be providing the match and training kit to Chennaiyin FC’s first team squad and staff during the 2016 ISL. In addition, the German multinational company will also provide a one-year PUMA sponsorship contract to five players from Chennaiyin FC’s grassroots program.
PUMA is currently the leading sportswear brand in India and associated with several leading teams and athletes from different sport around the world. Some of the biggest football teams that are associated with PUMA currently are the Italian national football team, Borussia Dortmund and Arsenal.
“We are very happy to have PUMA as our official kit partner. This association with one of the world’s leading football brands is another step forward in our growth as a club,” said Chennaiyin FC co-owner Mrs Vita Dani.
Abhishek Ganguly, MD-PUMA India, stated, “We are really excited about our association with Chennaiyin Football Club. PUMA since its inception in 1948 has had a key focus on football and the brand has a rich legacy with the sport. Through our association with the 2015 ISL Champions, we aim to further strengthen our position in football and we are looking forward to connecting with the football fans in Tamil Nadu.”

'ரெமோ' படத்தின் பாதுகாப்பிற்காக புதிய யுக்தியை கையாண்டு இருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா


திரைப்பட தயாரிப்பு துறையில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் மூலம், ஒரு படத்தை எப்படி  விளம்பர படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் 24 ஏ.எம் ஸ்டுடியோஸின் உரிமையாளர் ஆர்.டி.ராஜா. நாள்தோறும்  வித்தியாசமான அதுவும் வெற்றிகரமான யோசனைகளோடு களம் இறங்கும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, தற்போது   எப்படி படத்தை திரையரங்கை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாக்கலாம் என்பதற்காக புதியதொரு யுக்தியை கையாண்டு இருக்கிறார். இந்த புத்தம் புதிய யோசனையை திரையுலகினர் அனைவரும் முழு மனதோடு வரவேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 


சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கும் ரெமோ திரைப்படம், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிரூத் என தமிழ் திரையுலகின் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருக்கிறது. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணனின் வலுவான கதையம்சத்தில் உருவாகி இருக்கும் இந்த 'ரெமோ' திரைப்படமானது  அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்தே ரசிகர்களின் உள்ளத்தில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கிறது.  24 ஏ.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து இருக்கும் முதல் படமான 'ரெமோ', வியாபார ரீதியாக மிக பெரிய வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

தசரா விடுமுறை நாட்களில் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை தரும் வண்ணமாக அக்டோபர் ஏழாம் தேதி வெளியாக இருக்கிறது ரெமோ. பொதுவாகவே ஒரு திரைப்படமானது அதன் வெளியீட்டு தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே வெளி நாடுகளில் வெளியிடப்படும். ஆனால் தற்போது ரெமோ படத்தின் பாதுகாப்பு கருதி அதை சற்றே மாற்றி இருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. "ஒரு நாள் முன்னதாக நாம் வெளிநாடுகளில் திரைப்படத்தை வெளியிடுவதால், வெகு சுலபமாக அந்த படமானது வெளியே கசிந்து விடுகிறது. ஆனால் ஒரே நாளில், ஒரே சமயத்தில் இந்தியா உட்பட மற்ற வெளி நாடுகளிலும் திரைப்படத்தை வெளியிட்டால், அப்படி நடக்க வாய்ப்புகள் குறைவு. பிரபலங்கள் பலர் திருட்டு வி.சி.டியை ஒழிக்க  வழங்கி இருக்கும் பல சிறப்பான முயற்சிகளில்  இந்த யோசனையும் சேர்க்கப்பட்டுள்ளது.  இது நம்முடைய வாழ்க்கை !! எந்தவித அச்சமும் இன்றி இதை பாதுகாக்க தேவையான அனைத்து வழி வகைகளையும் நாம் உருவாக்க வேண்டும்...' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

Producer RD Raja has come up with a new strategy to stop Piracy

Producer RD Raja of 24 AM Studios accumulating his experience in the industry is bringing certain changes into the system of promotions and marketing that goes a long way in improvising the general standards of promotions. The young producer ever vibrant and innovative brings in another practice that is welcomed by the industry whole heartedly.

"Remo" starring Sivakarthikeyan and Keerthi Suresh in the lead with the amalgamation of the brand names of the industry such as Anirudh for music, PC Sreeram for Camera on board and Directed by debutant Bakkiyaraj Kannan is creating waves in the trade circles, thanks to the content and marketing. Remo is the maiden production of 24 AM Studios ably headed by RD Raja. Remo is all set to hit the screens on 7th of October coinciding with the pooja holidays. RD Raja while re affirming the release date ruled out the traditional practice of the film being released the previous day in overseas countries for Remo. "Various methods are practiced to curtail piracy by the stalwarts of the industry and we are contemplating and putting into practice this idea of a simultaneous release to bring the system back to normalcy. After all this is our trade of life, and we shall be brave to bring in systems which will benefit the industry on a longer run "says RD Raja.

தேசிய விருது பெற்ற இயக்குனர் மணிகண்டனின் அடுத்த படைப்பு 'கடைசி விவசாயி'


"கலப்பையின் உழைப்பே அகப்பையில் சோறு..." என்ற கருத்தை  நாம் யாரும் என்றுமே மறந்து விட கூடாது. என்ன தான் தமிழ் ரசிகர்கள் சினிமாவில்  காதல், அதிரடி, நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் ஆகிய குணங்களை விரும்பினாலும், சமூதாய அக்கறை கொண்ட திரைப்படங்களுக்கு மட்டும் அவர்களிடம் என்றுமே நல்ல வரவேற்பு உண்டு. இயக்குனர் மணிகண்டன் இயக்கிய 'காக்கா முட்டை' திரைப்படமே அதற்கு சிறந்த உதாரணம். காக்க முட்டை படத்தை  தொடர்ந்து 'குற்றமே தண்டனை' மற்றும் 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களை இயக்கி இருக்கும் இயக்குனர் மணிகண்டன், தற்போது தன்னுடைய அடுத்த படைப்பான  'கடைசி விவசாயி' படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்க இருக்கிறார். 'ஈரோஸ் இன்டர்நேஷனல்' தயாரிக்க இருக்கும் இந்த 'கடைசி விவசாயி' படத்தில்  70 வயது நிரம்பிய முதியவர் தான் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த வேடத்திற்கு கனக்கட்சிதமாக பொருந்தும் நபரை தற்போது  படக்குழுவினர் தேடி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் ரசிகர்களிடையே நன்கு பழக்கப்பட்ட முகங்கள் இந்த 'கடைசி விவசாயி' படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பது மேலும்  சிறப்பு.  

" ஒருபுறம்  கோலா தொழிற்சாலைகளும், கார்ப்பரேட்  நிறுவனங்களும் நம் நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து கொண்டு  இருக்க, மறுபுறம் விவசாயி  தற்கொலை செய்து கொள்வது நம் நாட்டில் அதிகரித்து கொண்டே போகிறது. நம்முடைய அன்றாட வாழக்கைக்கு தேவையான உணவை வழங்கும் விவசாயிகள் தற்போது வாழ்க்கையிலும் சரி, விவசாயத்திலும் சரி, சரிந்து கொண்டே போகிறார்கள். 'கடைசி விவசாயி படத்தின் கதையை இயக்குனர் மணிகண்டன் எங்களிடம்  சொன்ன அடுத்த கணமே, இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம். சமூதாய அக்கறையோடு உருவாக இருக்கும் இந்த  'கடைசி விவசாயி' படத்தில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற காமெடி, காதல் என பல சிறப்பம்சங்களையும் நாங்கள் சேர்க்க இருக்கிறோம். எனவே  'கடைசி விவசாயி' படமானது அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பக் கூடியதாக இருக்கும். சட்டத்தின் சிக்கலான விதி முறைகளால் குழம்பி போன ஒரு சராசரி விவசாயி,  எப்படி அந்த சிக்கல்களை புரிந்து கொண்டு அதில் இருந்து வெளியே வருகிறார் என்பது தான் எங்களின் 'கடைசி விவசாயி' படத்தின் கதை கரு. நம்முடைய பசியை போக்க தங்களின் வியர்வையை சிந்தும் விவசாயிகளுக்கு இந்த  'கடைசி விவசாயி' திரைப்படம் ஒரு சமர்ப்பணம்..." 

"லிங்கா மற்றும் கோச்சடையான் திரைப்படங்களுக்கு பிறகு எங்களின் வரிசையில் இருக்கும் படங்கள் யாவும் முற்றிலும் வலுவான கதை களத்தை கொண்டு இருக்கிறது. தங்களின் தனித்துவமான கதையம்சத்தினால் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற அனுபவம் வாய்ந்த  இயக்குனர்கள் வெங்கட் பிரபு, பிரபு சாலமன், மணிகண்டன் மற்றும் அறிமுக இயக்குனர்கள் பரத் கிருஷ்ணமாச்சாரி, சுரேஷ் சங்கையா ஆகியோருடன் நாங்கள் பணிபுரிந்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது...என்கிறார் 'ஈரோஸ் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின்  சாகர் சத்வானி.

National Award winning Director Manikandan's next is 'Kadaisi Vivasayi'

“God looked down on his paradise and said I need a caretaker. They are the Farmers…” Though Tamil audience loves to see a film that is built with Love, Action, Sentiment and comedy, they also have a very special respect towards Social - Responsibility movies too. Director Mainkandan’s ‘Kakka Muttai’ is a best example for that. While his ‘Kutramey Dhandanai’ and ‘Aandavan Kattalai’ are ready to hit the screens soon, Director Manikandan has announced his next project ‘Kadaisi Vivasayi’ which is going to roll from the end of this year. Produced by ‘Eros International Media Ltd’, the film ‘Kadaisi Vivasayi’ has a 70 year old Man in the lead role and the entire team is in search for the apt character. It is also to be noted that well known familiar faces in Tamil cinema are roped in to play the pivotal roles.

“It is really sad to know that Cola factories and corporate industries are playing hide and seek in each and every farmer’s life.  Farmer suicides are most rampant in India. They are the starting point of our entire food chain but the occupation in itself is on the verge of becoming obsolete. When Manikandan narrated "Kadaisi Vivasayi" to us, we knew that the film will hit the right chords with all audiences, regardless of any age, gender or class. The film is also in line with our strategy of backing content oriented films which will also be a commercial treat for the audience. The story of ‘Kadaisi Vivasayi’ revolves around the life of a 70 year old farmer who does not understand the legal rules, laws and procedures …As a layman, how he comes out of the whole issue will be the rest of ‘Kadaisi Vivasayi’. The only human being who works for our hunger is... Farmer. We completely dedicate this ‘Kadaisi Vivasayi’ film to all the real heroes (farmers)…”

“After Lingaa and Kochadaiyaan, our upcoming lineup is equally powerful and diverse. We have signed Directors like Venkat Prabhu, Prabhu Solomon, Manikandan and debut Directors Bharat Krishnamachari and Suresh Sangaiah who also depict an innovative school of thought through their scripts, thereby showcasing our range of experienced directors as well as debut directors” says Sagar Sadhwani of ‘Eros International Media Ltd’.