

“ ப்ரூஸ் லீ “ படத்தின் படத்தின் படபிடிப்பு வருகிற நவம்பர் மாதம் முதல் துவங்க உள்ளது. குழந்தைகளை கவர வரும் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ப்ரூஸ் லீ !

ப்ரூஸ் லீ படத்தின் இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அந்த சீசனில் நடுவர்களில் ஒருவராக இருந்த இயக்குநர் பாண்டிராஜ் அவர்களிடம் “ இது நம்ம ஆளு” “ ஹைக்கூ “ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் பாண்டி ராஜ். குழந்தைகளை மையமாக கொண்டு படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குநர் பாண்டிராஜிடம் இருந்து வந்துள்ள பிரஷாந்த் பாண்டிராஜு தற்போது இயக்கவுள்ள “ ப்ரூஸ் லீ “ திரைப்படமும் குழந்தைகளை கவரும் வகையில் எடுக்கபடவுள்ள லாப்ஸ்டர் வகையிலான ஆக்ஷன் திரைப்படம்.
ஹாரர் , கல்ட் என்று வெவ்வேறு வகையிலான களங்களில் பயணித்து கொண்டு இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களுக்கு இந்த படம் மிகவும் புதுமையான ஒரு படமாக இருக்கும் என்றும். ஆக்ஷன் கலந்த காமெடி கதையில் முதன்முறையாக நாம் இந்த படத்தில் அவரை பார்க்கலாம் என்றும் கூறுகிறார் இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ்.
“ ப்ரூஸ் லீ “ படத்தின் படத்தின் படபிடிப்பு வருகிற நவம்பர் மாதம் முதல் துவங்க உள்ளது.
No comments:
Post a Comment