Tuesday, 13 October 2015

Pugazh





A play ground plays an important cultural role in many boys life. Even though technology has evolved so much we still find ourselves,friends, brothers, nephews still hitting the playground for a good game of sport or may be even just to hang out. They earn many friendships, get into silly fight over a game, develop team spirits and many other important character straits that is required. A play ground does play an essential role in making boys into men. Pugazh story is about when some local politicians try to land grab such a play ground and how the boys who play in that particular play ground try and stop them. Jai has done a boy next door role, which he has pulled it off with such ease. he has done a good job with the action sequences too.Karunas has done a very good performance, he plays jai's elder brother. There's a particular scene done by karunas with jai which will be an emotional highlight in the film.All the actors have done a very good job by delivering a performance which is so realistic.The shoot of "Pugazh" starring Jai and Surabhi has been completed fully in around Chennai and Walajapet and the post production is in swift motion to prepare the film for release as soon as possible. We would be releasing one full video song from the film too in the next few days.The audio and trailer of the film has been well received by many critics and audiences. We as a team would like to thank you for all the support you have given us till now and we would be grateful to have your support during the release of the film too.

புகழ்

'புகழ்'  ஒரு விளையாட்டு மைதானத்தை மையமாக கொண்டு உருவானக் கதை.தொழில் நுட்பம் எவ்வளவுதான் வளர்ந்து இருந்தாலும் நமக்கு விளையாட்டும் , விளையாட்டு மைதானமும் மனதுக்கு நெருங்கிய விஷயமாக இருக்கிறது.விளையாட போகிறார்களோ இல்லையோ , விளையாட்டு மைதானம் பயிற்சி செய்யவும், அரட்டை அடிக்கவும் தோதான இடமாக இருந்துக் கொண்டே தான் இருக்கும்.பல் வேறு உறவுகள் உருவாகும் இடமாக   விளையாட்டு மைதானம் இருக்கும்.அத்தகைய ஒரு விளையாட்டு மைதானத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல் வாதிகளுக்கும் அதைக் காப்பாற்ற நினைக்கும் அங்கே நித்தமும்  விளையாடும் இளைஞர்கள் இடையே நடக்கும் இழுபறிதான் 'புகழ்'.
ஜெய்,நாம் அன்றாடம் சந்திக்கும் இளைஞர்களில் ஒருவரை 'புகழ்' படத்தில் பிரதிபலிக்கிறார்.குறிப்பாக சண்டைக் காட்சிகளில்  அமர்க்களப் படுத்தி இருக்கிறார்.அவருக்கு அண்ணனாக நடிக்கும் கருணாஸ் ஒரு உண்மையான அண்ணனை பிரதிபலிக்கிறார். கதாநாயகி சுரபி இந்தப் படத்துக்கு பிறகு ரசிகர்களிடம் மிகவும் பரிச்சயம் ஆனவர் ஆக இருப்பார்.இயக்குனர் மணிமாறன் மிகவும்  தெளிவான முறையில் இந்தப் படத்தை படமாக்கி உள்ளார் விவேக் மெர்லின் இரட்டை இசை அமைப்பாளர்கள் இந்தப் படத்தின் பாடல்கள் மூலம் தமிழ் திரை உலகில் நிரந்தர இடம் இருப்பவர்கள்.வேல்ராஜின்
ஒளிப்பதிவில், ராமலிங்கத்தின் கலை வண்ணத்தில், வெங்கடேஷின் பட தொகுப்பில், திலிப் சுப்புரயனின் சண்டைக் காட்சிகளில் , வனிதாவின் உடை அலங்காரத்தில் , radiance மீடியா வருண் மணியன் வழங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் வாலாஜா பெட் அருகே உள்ள இடங்களில் நடைப்பெற்றது. 
இறுதிக் கட்ட தொழில் நுட்ப பணிகள் நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது.  ஏற்கனவே வெளி வந்த 'புகழ்' படத்தின் பாடல்களும் ,முன்னோட்டமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. வெகு விரைவில்  படத்தை வெளி இட உள்ளோம்.பெயருக்கு ஏற்ப 'புகழ்' படம் இருக்கும்' என நம்பிக்கையோடு தெரிவித்தார் தயாரிப்பாளர் சுஷாந்த் பிரசாத்.

No comments:

Post a Comment