Thursday 8 October 2015

PALAM SILKS FESTIVE COLLECTIONS 2015





ஸ்ரீபாலம் சில்க்சின் பண்டிகை கால பட்டுப் புடவைகள்
விழாக்களுக்கு கூடுதல் வண்ணம் கூட்டும் நவீன டிசைன்கள்
ஐந்து விதமான பட்டுப் புடவைகள் அறிமுகம்

மாறிவரும் கலாச்சாரத்திலும் இளம்பெண்களின் விருப்பத் தேர்வாக இருப்பவை பட்டுப் புடவைகள். கார்ப்பரேட் யுக பெண்களும் விரும்பி அணியும் வண்ணம் புத்தம் புது டிசைன்களை ஆண்டுதோறும் அறிமுகம் செய்து நவீனரக பட்டுப் புடவைகள் கடைகளில் தனித்து நிற்பது ஸ்ரீபாலம் சில்க்ஸ் நிறுவனம் ஆகும்.

ஒளிவிழாவான தீபாவளி திருநாளையொட்டி ஸ்ரீபாலம் சில்க்ஸ் 5 வண்ணமிகு டிசைன்களில் பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்துள்ளது. சென்னையின் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற கண்ணைக் கவரும் இந்த பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்து வைத்தார் ஸ்ரீபாலம் சில்ஸ் நிறுவனர் திருமதி.ஜெயஸ்ரீரவி. பாலம் ஹ்யூஸ், சில்வர்லைன், ப்ளெண்ட் இன் ட்ரெண்ட், எக்ஸ்-பிரஸ்ஸன் மற்றும் ஷோ ஸ்டாப்பர் என மொத்தம் ஐந்து விதமான பட்டுப் புடவைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 

விழிகளை விரியச் செய்யும், பார்ப்பவரை மயங்கச் செய்யும் இந்த ஐந்து விதமான பட்டுப் புடவைகளை அணிந்தபடி இந்தியாவின் முன்னணி மாடல் மங்கைகள் மேடையில் அணிவகுத்து வந்த காட்சி விழாவுக்கு கூடுதல் வண்ணம் சேர்த்தது. 

நவீன பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்து வைத்து பேசிய ஸ்ரீபாலம் சில்ஸ் நிறுவனர் திருமதி.ஜெயஸ்ரீ ரவி அவர்கள், தீபாவளி திருவிழாவுக்காக ஐந்து விதமான புடவைகளை அறிமுகம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். இன்றைய இளம் தலைமுறை பெண்களை கவரும் விதமாகவும், தொடர் வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் விதமாகவும் புத்தம்புது டிசைன்கள், விதவிதமான துணிகள், பலவிதமான வண்ணங்கள் போன்றவற்றின் சங்கமமாக ஐந்து பட்டுப் புடவைகளை இந்த விழாக்காலத்திற்காக உருவாக்கி உள்ளதாக கூறினார்.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நியான் பட்டுப் புடவைகளின் பிரமாண்ட வரவேற்புக்குப் பிறகு, இந்த ஆண்டி.ன் தீபாவளி அறிமுகம் பாலம் 
ஹ்யூஸ்.. இப்படிப்பட்ட வண்ணங்கள் உண்டா, இந்த வண்ணங்களில் பட்டுப் புடவையா என்று வியப்பின் உச்சிக்கு கொண்டு செல்லும் நிறங்களில் உருவாகி உள்ளது பாலம் ஹ்யூஸ் புடவைகள். பவழ வண்ணத்தில் அடர்சாம்பல் மற்றும் இளஊதா சேர்ந்து மனதை மயக்கச் செய்கிறது. வரும் 10-ந் தேதி முதல் ஸ்ரீபாலம் சில்க்சின் கிளைகள் அனைத்திலும் அலங்கரிக்க வருகிறது பாலம் ஹ்யூஸ் புடவைகள்.

பாரம்பரிய பட்டுப் புடவைகளில் உள்ள அசல் பட்டு ஜரிக்கு பதிலாக வெள்ளி ஜரிகையை இடம் பெறச் செய்து உருவாக்கப்பட்டுள்ள புடவைகள் தான் சில்வர்லைன் பட்டுப் புடவைகள். வெள்ளிச் சரிகையே இதன் தனித்துவம்.

வழக்கமாக ஒரே வகையான துணியில் தான் ஒட்டுமொத்த புடவையும் உருவாக்கப்படும். ஆனால் புடவைகள் வரலாற்றில் முதல்முறையாக 4 வகையான துணிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புடவைகள் தான் ப்ளெண்ட் இன் ட்ரெண்ட். அசல் பட்டு, பருத்தி, லினென் மற்றும் சணல் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள ஆறு கெஜ அதிசய புடவை. 
 
புடவையில் முந்தானை என்பது எப்படி இருக்கும், நீண்டு தொங்குவது மட்டுமே தான் நாம் வழக்கமாக பார்ப்பது. ஆனால் ஸ்ரீபாலம் சில்ஸ் அறிமுகப்படுத்தி உள்ள எக்ஸ்-பிரஸ்ஸன் பட்டுப் புடவைகளில் முந்தானையே ஒரு அழகான டிசைனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் யோசிக்காத ஒரு கோணத்தில் முந்தானையை ஒரு டிசைனாக்கி உருவாக்கப்பட்டுள்ளது இந்த எக்ஸ்-பிரஸ்ஸன்  பட்டுப் புடவை.

உங்களை விழாநாயகியாக்க ஸ்ரீபாலம் சில்க்ஸ்-ல் வடிவமைக்கப்பட்டுள்ள பட்டுப் புடவை தான் ஷோ ஸ்டாப்பர். பாரம்பரிய பட்டு நெசவினூடாக மட்டுப்படுத்தப்பட்ட ஒளிபுகும் பட்டு இழைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வண்ணமிகு ஆடைதான் இது. ஒளி ஊடுருவும் இந்த புடவைகளை பார்ப்போர் கண்களை ஊடுருவச் செய்து உங்களை விழா நாயகியாக்குவது உறுதி.
 

தீபாவளி பண்டிகைக்காக ஸ்ரீபாலம் சில்ஸ் அறிமுகம் செய்துள்ள இந்த ஐந்து வகையான பட்டுப் புடவைகள் அண்ணாநகர், லஸ் சர்ச்,பாண்டி பஜார் மற்றும் பெங்களுர் ஜெயநகரில் உள்ள ஸ்ரீபாலம் சில்க்ஸ் அவுட்லெட்டுகளில் கிடைக்கும். மேலும் www.palamsilks.com என்ற இணையம் மூலமாகவும் உலகெங்கும் வாழும் பட்டுப் புடவை ரசிகர்களுக்காக விற்பனையும் உண்டு. 


1 comment:

  1. Saree is the beautiful costume, every women looks beautiful in Sarees, try the traditional saree of Kanjivaram Sarees For Wedding for its fine texture and staple drape.

    ReplyDelete