Friday 15 April 2016

தல அஜித்தின் உண்மையான விசுவாசி நான்," என்கிறார் அர்த்தநாரி ராம்குமார்

தனது 'அர்த்தநாரி' திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அடி எடுத்து வைக்கிறார் வசீகரமான ராம்குமார். சராசரி சென்னை இளைஞர்களை போல இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் ராம்குமார். எனினும், நடிப்பின் மேல் இவர் கொண்ட காதல், இவரை சில விளம்பர படங்களில் நடிக்க வைத்தது. "நான் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும், அந்த வேலையில் நான் முழு மன திருப்தி அடையவில்லை. எனக்குள் இருந்த அந்த ஒரே தேடல் நடிப்பை நோக்கி பயணித்தது தான். அப்போது தான் சில விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினேன். அப்படி நான் நடித்து, திரை அரங்கங்களில் திரையிடப்பட்ட ஓர் விளம்பர படம் மூலமாக தான் எனக்கு அர்த்தநாரி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது". என்கிறார் ஸ்மார்டான ராம்குமார்.
பாலாவின் இணை இயுக்குனராக பணிபுரிந்த சுந்தர இளங்கோவன் இந்த திரைப்படத்தை இயக்க, வெண்ணிலா கபடி குழு புகழ் செல்வ கணேஷ் இசை அமைத்துள்ளார். மேலும், நாய்கள் ஜாக்கிரதை படத்தின் கதாநாயகி அருந்ததி, நாசர், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் முக்க்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை பற்றி ராம் கூறுகையில், "அர்த்தநாரி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு இந்த படத்தின் கதையும் கண்டிப்பாக வலிமை உள்ளதாக இருக்கும். முற்றிலும் வித்யாசமான இந்த கதை அம்சத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு தந்த இயக்குனர் சுந்தர இளங்கோவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். என் முதல் படத்திலேயே அனுபவமிக்க நாசர் சாருடன் இணைந்து நடித்ததில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.  நான் கடவுள்  ராஜேந்திரன் உண்மையாகவே ஓர் எளிமையான மனிதர்; படப்பிடிப்பில் அவருடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது. என்னுடன் இணைந்து நடிக்கும் அருந்ததி தங்களின் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது," என்கிறார். மேலும் தல அஜித்தின் தீவர ரசிகரான இவர் , "நான் தலையின் உண்மையான விசுவாசி, வெறி பிடித்த ரசிகன் என்று சொல்லி கொண்டே போகலாம். எந்தவித பின்பலமுமின்றி தமிழ் சினிமாவில் காலூன்றி நின்ற அவரை தான் என்னுடைய முன்மாதிரியாக பார்கிறேன்!" என்று நெஞ்சம் மகிழ்கிறார் ராம்குமார்.  
         CAST AND CREW

TITLE                  : ARTHANAARI    

COMPANY           : KIRUTHIKAA FILM CREATION

PRODUCER        : A.S.MUTHAMIZH

DIRECTOR          : SUNDARRA ELANGOVAN

CAMERAMAN     : SRI RANJAN RAO

MUSIC                 : V.SELVA GANESH

LYRIC                  : KABILAN

ART DIRECTOR  : SREEMAN BALAJI

STUNT MASTER : ‘DANGER’ MANI

DANCE MASTER : I.RATHIKA

P R O                    : SURESH CHANDRA

DESIGNER           : SIVA ( 3D MEDIA )      

CO- PRODUCER :  G. K. MURUGAN

PRODUCTION EXCUTIVE : J. ARUL SELVAN


ARTISTS

HERO - RAMKUMAAR ( INTRODUCING)

HEROINE – ARUNTHATHI(‘Naaigal Jakkiradhai’ heroine)

NASSAR

‘NAAN KADAVUAL’ RAJAENDRAN

RAJENDRA NATH

SAMBATH RAM






No comments:

Post a Comment