பிரேமம் புகழ் நிவின் பாலியும், இயக்குனர் வினீத் ஸ்ரீநிவாசனும் இரண்டாவது முறையாக கைகோர்த்து வெற்றி பெற்றுள்ள திரைப்படம் 'ஜேகப்ன் டே சுவர்க்க ராஜ்ஜியம்'. மலையாள சினி உலகை கலக்கி கொண்டிருக்கின்ற இந்த குடும்ப களஞ்சியம், சென்னையில் உள்ள லி மேஜிக் லேண்டர்ன் (4 ப்ரேம்ஸ்) திரையரங்கில் சினிமா பிரபலங்களுக்கு கடந்த சனிகிழமை அன்று பிரத்யோகமாக திரையிடப்பட்டது. திரைக்கதையின் ஜாம்பாவான் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சுஹாசினி மணிரத்தினம்,நடிகர் மோகன், இயக்குனர் விக்னேஷ் சிவன், இயக்குனர் கோகுல், ரூபா மஞ்சரி, ஜனனி ஐயர் மற்றும் சின்னத்திரை புகழ் திவ்யதர்ஷினி (டிடி), ராஜதந்திரம் நாயகன் வீரா,இசையமைப்பாளர் சித்தார்த் விபின் , ராஜேஷ் திலக் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர். "இதுவரைக்கும் நான் கண்டிறாத ஒரு கதையம்சத்தை இந்த திரைப்படத்தில் பார்த்து வியந்துபோய் நிற்கிறேன். அவ்வளவு வலிமை பெற்ற இந்த 'ஜேகப்ன்டே சுவர்க்க ராஜ்ஜியம்' என்னை கண் கலங்க வைத்துவிட்டது!" என்கிறார் நடிகர்-இயக்குனர் பாக்யராஜ். மேலும் நடிகை லிஸ்ஸி கூறுகையில், "இனி வரும் நாட்களில் இது போன்ற தரம் வாய்ந்த பிற மொழி படங்கள் நிச்சயமாக இங்கு திரையிடப்படும். அப்போது தான் சக கலைஞர்களின் திறமைகளை வெளி கொண்டு வர முடியும். இந்த முதல் முயற்சி, பிற மொழி சினிமாவின் வளர்ச்சி பாதைக்கு வித்தாக அமையும் என்பதை முழு மனதுடன் நம்புகிறேன்" என்கிறார் லிஸ்ஸி.
No comments:
Post a Comment