சக்ரவ்யுஹா தனித்துவமான சண்டை காட்சிகள் நிறைந்தவையாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம். படத்தை சண்டைக் காட்சிகளையும் , நடிப்பையும் புகழ்ந்து பாராட்டுகிறார்கள். ஒவ்வொரு படத்திலும் அருண் விஜய் தன்னையே அர்ப்பணித்து கொள்கிறார் என்பதற்கு இதுவே உதாரணம். "கன்னட சினிமா மீது எனக்கொரு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு. எனக்கு சில வாய்புகள் நடிக்க வந்திருந்தாலும், சரியான கதாப்பாத்திரத்திற்காக நான் காத்து கொண்டிருந்தேன். அதன் பலனாக எனக்கு கிடைத்த திரைப்படம் தான் 'சக்ரவ்யுஹா'." என்கிறார் அருண் விஜய்.
"இயக்குனர் சரவணன் படத்தில் நடிப்பது, ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிப்பதற்கு சமம். அந்த அளவிற்கு அவரின் கதையும், வேடங்களும் வலிமை வாய்ந்ததாக இருக்கும். அதே போல் புனீத் சாருடன் இணைந்து நடிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். நாங்கள் இருவருமே சினிமா பின்னணியில் இருந்து உதயமாகி உள்ளதால் எங்கள் இருவரிடையே நல்ல நட்பும், மரியாதையும் உண்டு. பொதுவாக சண்டை காட்சிகளை அவ்வளவு எளிதில் பதிவு செய்ய முடியாது. ஆனால் எங்களுக்குள் இருந்த புரிதலும், ஒருங்கிணைப்பும் படத்தின் காட்சிகளை தத்ரூபமாக உருவாக்க உதவியது. ஹீரோ - வில்லன், இருவரின் கதாப்பாத்திரங்களும் சமமாக அமைந்திருப்பது படத்தின் மிக பெரிய பிளஸ்! அது மட்டுமில்லாது, கன்னட சினிமா தங்களின் தரமான படைப்புகளால் சக மொழி திரைப்படங்களோடு போட்டியிட்டு கொண்டிருக்கும் காலமிது. இதற்கு சான்றாக விரைவில் வெளியாகும் 'சக்ரவ்யுஹா' திரைப்படம் அமையும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அருண் விஜய்.
No comments:
Post a Comment