Saturday 18 June 2016

​தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் கொண்டாடும் வெற்றி படைப்பு “ ஒரு நாள் கூத்து “ !!


கடந்த வாரம் வெளிவந்து மக்களின் அமோக ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “ ஒரு நாள் கூத்து “. இப்படத்தை படக்குழுவினர் சமீபத்தில் தமிழ் சினிமாவின் ஜாம்பாவான்கள் பலருக்கு திரையிட்டனர் , படத்தை பார்த்துவிட்டு அவர்கள் பேசியது இதோ ; 

படத்தை பற்றி இயக்குநர் சேரன் பேசியது ; இப்போது தான் தமிழ் சினிமாவில் உள்ள இயக்குநர்களுக்கு பெண்களின் மன உணர்வு சமந்தப்பட்ட படைப்புகளை எடுக்க வேண்டும் என்று தோன்றி இருக்கிறது. இதை நான் சமூகத்தில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய மாற்றமாக நான் பார்க்கிறேன். ஒரு நாள் கூத்து , இறைவி போன்ற படங்கள் எல்லாம் பெண்களின் மன உணர்வுகளை , பெண்களின் மனதில் உள்ள அழுத்தங்களை பெண்களின் கோணத்தில் இருந்து ஒரு ஆண் இயக்குநர் இயக்கியுள்ளார் என்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும். வாழ்க்கையில் நடக்கும் யதார்த்தமான விஷயங்களை , மாற்றங்களை மிகவும் அழகாக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பதிவு செய்துள்ளார். இப்படத்தை ஒரு பெண்ணின் கோணத்தில் இருந்து அதாவது ஒரு பெண்ணின் அண்ணனாக , அல்லது ஒரு பெண்ணை பெற்ற தகப்பனாக , அல்லது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகும் ஒரு ஆணாக இப்படத்தை பார்க்கும் போது நம்மால் பெரிதும் இப்படத்தோடு ஒன்றிபோக முடியும். நீங்கள் ஏதாவது இன்று நல்ல படம் பார்க்க வேண்டும் , குடும்பத்தோடு ஒரு படம் பார்க்க வேண்டும் அல்லது தங்கையோடு ஒரு படம் பார்க்கவேண்டும் என்று நினைத்தால் இப்படத்திற்கு கண்டிப்பாக செல்லலாம் என்றார் இயக்குநர் சேரன்.

படத்தை பற்றி இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசியது ; ஒரு நாள் கூத்து மிகவும் அருமையான ஒரு படைப்பு , சமகால விஷயங்களை மிக அழகாக இயக்குநர் கையாண்டுள்ளார். இதில் அற்புதமான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். நாம் ஏற்கனவே பார்த்து பழகிய முகங்களை இயக்குநர் இப்படத்தில் வித்யாசமாக காட்டியுள்ளது நம்மை வியக்க வைக்கிறது. படத்தின் இசை மிகவும் அருமையாக உள்ளது. படத்தை நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். இப்படம் நிச்சயம் மகிழ்ச்சியான மற்றும் மெசேஜ் சொல்லும் ஒரு அருமையான படைப்பாக இருக்கும். படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் கல்யாணத்தை பற்றிய ஒரு விமர்சனமாகவும் , ஒரு பார்வையாகவும் கொடுத்துள்ளார் என்றார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.


படத்தை பற்றி இயக்குநர் சசி பேசியது ; தமிழ் சினிமாவில் வெளிவந்து முதல் பெண்ணிய படம் ஒரு நாள் கூத்து என்று நான் இங்கு உறுதியாக கூறுவேன். மூன்று பெண்களின் வாழ்க்கையை மிக அழகாக ஒரு இயக்குநர் வெளிப்படுத்துகிறார் என்றால் அவரிடம் மிகப்பெரிய விஷயம் உள்ளது என்று ஆர்த்தம். நிஜமாகவே மிகப்பெரிய இயக்குநரால் மட்டுமே இதை உருவாக்க முடியும். படத்தில் வரும் பெண்களின் கதாபாத்திரத்தை மிகவும் நுணுக்கமாக வெளிபடுத்தி நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் , அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பெண்களுடைய வாழ்க்கையை அவர்களுடைய மனதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஒரு கூத்து திரைப்படத்தை பாருங்கள் என்றார் இயக்குநர் சசி.

படத்தை பற்றி தயாரிப்பளார் தனநெஞ்ஜெயன் பேசியது , ஒரு நாள் கூத்து என் மனதுக்கு பிடித்த நிறைவான திரைப்படம். திருமனகள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று நாம் கேள்விபட்டிருப்போம் அதை படத்தில் இயக்குநர் நெல்சன் மிக அழகாக காட்டியுள்ளார். இப்படத்தில் அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். அருமையான இசை , பிரம்மாதமான ஒளிப்பதிவு எல்லாம் சேர்ந்த ஓர் புதுமையான படமாக இருந்தது. 2016 ஆம் வருடத்தின் மிகச்சிறந்த படம் என்று எடுத்தால் நிச்சயம் அதில் ஒரு நாள் கூத்து இருக்கும் என்று கூறினார்.

No comments:

Post a Comment