![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhILiDD7ikPMVJLYAKly4proqBbw5lShcXJHfPIQPyvlG6w1quSs1csvDbGR1MgYj7qm7QgZPIUTgk_kGhZ6ULGUOlSJLM_3kPAiwz7aLEmkh0_k8or1WuNe-HLMVjd1nmoiqRIRA6FP5E/s320/The+Jungle+Book+Movie+Still+%25283%2529.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhP3i2Lgyv2DKCLwygHL4L5RdJHu9mdYEOtLp-0KoyBwOiDnt6_36Jyr8ouu2gUmcbMJ69YLwR_8kED3TCLApoobGf_ClSbR4cUN4DOnG8lON2Gx0snTZm14Ei_GQ6ByUQbLM_vg1y08eQ/s320/The+Jungle+Book+Movie+Still+%25289%2529.jpg)
த ஜங்கிள் புக்' படம் வெளியான முதல்நாளில் சுமார்
10
கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ஒரு காலத்தில் கார்ட்டூன் வடிவில் டிவியில் வெளியான கதை, 'த ஜங்கிள் புக்'.இப்போது அதை மாடர்ன் வடிவில் படமாக்கியுள்ளனர். இந்தப்படம்,உலகம் முழுவதும் வரும் 16ம் தேதி தான் ரிலீசாக இருக்கிறது. இந்திய காடுகளில் கதை நடப்பதாலும் படத்தில் மோக்லி கேரக்டரில் நடித்துள்ள சிறுவன் நீல்சேத்தி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன் என்பதாலும்,
ஒரு
வாரத்துக்கு முன்னதாகவே இங்கு ரிலீஸ் ஆனது.
ஒரு காட்டுக்குள் தனியாக விடப்பட்ட சிறுவனை,விலங்குகள் எடுத்து வளர்க்கிறது. அவனை புலி ஒன்று கொல்ல முயல,மற்ற விலங்குகள் அவனைக் காப்பாற்றுவது தான் படம். ஆங்கிலம் மற்றும் தமிழ், தெலுங்கு,இந்தி மொழிகளில் ரிலீசாகியுள்ள இப்படம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் கவர்ந்திருப்பதால்,வெளியான முதல் நாளில் ₹9.76 கோடியை வசூலித்துள்ளது. இப்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இன்னும் அதிக வசூலைக் குவிக்கும் என்று சினிமா வர்த்தகர்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment