Saturday, 30 July 2016

சுதந்திர போராட்ட வீரர்க்ளை நினைவு கூறும் விதமாக 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' என்னும் பெயரை தேர்ந்தெடுத்தோம்" என்கிறார் 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணியின் உரிமையாளர் 'ஆல்பர்ட்' முரளிதரன்


முத்துநகர்' என்னும் பெருமையை பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில், வெறும் முத்துக்களும், ஓங்கி உயர்ந்து நிற்கும் பனை மரங்களும்  மட்டும் பிரபலம் கிடையாது, கிரிக்கெட் விளையாட்டும் அந்த மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது தான். விரைவில் நடக்க  இருக்கும்  "தமிழ்நாடு பிரீமியர் லீக் - 2016"  கிரிக்கெட் போட்டியே அதற்கு சிறந்த உதாரணமாக விளங்கும். 'டியூட்டி பேட்ரியாட்ஸ்'  என பெயரிடப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் அணியை, சென்னை 'ஆல்பர்ட்' தியேட்டரின் உரிமையாளர் முரளிதரன் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணிக்கு வழிக்காட்டியாக ம்ருகாங் தேசாய்யும், அணியின் பயிற்சியாளராக முன்னாள் 'ரஞ்சி கோப்பை' விளையாட்டு  வீரர் ஜே. ஆர். மதனகோபாலும் பணியாற்றி வருகின்றனர்.

நாடெங்கும் கிரிக்கெட் ஜூரம் ஏறிக் கிடக்கும் சூழல் இது. வீடுகளின் முன்னால், தண்ணீர் இல்லாத குளங்களில், சாலை ஓரங்களில், பள்ளிக்கூட வளாகங்களில், சந்துகளில் என எல்லா இடங்களிலும் இந்த விளையாட்டை சிறுவர்களும்,  இளைஞர்களும் ஆர்வமுடன் விளையாடுவதைப் பார்க்கலாம். உலக அளவிலேயே இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு சற்று அதிகப்படியான ஆர்வத்துடன் ரசிக்கப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகிவிடாது.  "சென்னை மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள எல்லா  தென் மாவட்டங்களிலும், கிரிக்கெட் விளையாட்டு மீது உள்ள காதல், இளைஞர்கள் மத்தியில் பெருகி கொண்டே போகிறது. பொதுவாகவே தென் மாவட்டங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையில் இரண்டு விஷயங்கள் இன்றியமையாததாக திகழ்கிறது. ஒன்று சினிமா, மற்றொன்று கிரிக்கெட். அப்படிப்பட்ட கிரிக்கெட் விளையாட்டை விளமபரப்  படுத்தும்  பணியில் எங்களின் பங்கும் இருக்கிறது என்பதை நினைக்கும் போது, பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. கிரிக்கெட் விளையாட்டின் முக்கியதுவத்தை  மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த 'தமிழ்நாடு பிரீமியர் லீக் - 2016' போட்டியில் நாங்கள் இறங்கியுள்ளோம்..."

"நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய  பல சுதந்திர  போராட்ட வீரர்களின் பிறப்பிடமாக திகழ்வது தூத்துக்குடி மாவட்டம்.  வீரப்பாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ. வு. சிதம்பரனார், வாஞ்சிநாதன், புலித் தேவன், வீரன் சுந்தரலிங்கம் ஆகியோர் அந்த பட்டியலில் சிலர். இந்திய விடுதலைக்காக தங்கள் இரத்தம் சிந்தி போராடிய பல சுதந்திர  போராட்ட வீரர்களை நினைவுக்கூறும் விதமாக எங்கள் அணிக்கு 'பேட்ரியாட்ஸ்' என்னும் பெயர் சூட்டப்பட்டது. எங்களின்  'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டுமல்ல, நெல்லை மாவட்டத்துக்கும் பொதுவானது தான். இந்த மாவட்ட மக்கள், கிரிக்கெட் ரசிகர்கள் அவர்களது ஆதரவை எங்களுக்கு வழங்குவார்கள் என்பதில் எங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. எங்கள்  'டியூட்டி பேட்ரியாட்ஸ்'  அணியை பற்றிய செய்திகளுக்கும், மேலும் விவரங்களுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்       எங்களின் @TUTI_PATRIOTS என்னும்  டிவிட்டர் பக்கத்தை பின் தொடரலாம்." என்கிறார் 'டியூட்டி பேட்ரியாட்ஸ்'  அணியின் உரிமையாளர் 'ஆல்பர்ட்' முரளிதரன். 
கிரிக்கெட் ரசிகர்கள் 

பனை ஓலை, முத்து, மணல், கப்பல் மற்றும் கடல் ஆகியவற்றை கொண்டு வடிவமைக்கப்பட்ட  'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணியின்  சின்னமானது, ஒட்டுமொத்த தூத்துக்குடி - திருநெல்வேலி  மாவட்டத்தின் சிறப்பையும் உள்ளடக்கி இருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

No comments:

Post a Comment