Tuesday, 26 July 2016

குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் S.முத்துகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி


கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் மக்களை திசை திருப்பி போராட்டம் என்ற பெயரில் மாவட்டத்தை சீரழிக்கத்துடிக்கும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை  வன்மையாக கண்டிக்கிறேன். 
சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஆணையிட்டது காங்கிரஸ் அரசு. அன்றைய தினம் இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டுமென்று ஏதாவது ஒரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ குரல் கொடுத்தது உண்டா. மதத்தின் ரீதியால் மாணவ சமுதாயத்தை பிரித்தாழும் சூழ்;ட்சியை செய்த காங்கிரஸ் கட்சி இன்று இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டுமென்று போராட்டம் நடத்துவோம்; என்பது வெட்கக்கேடாக இல்லையா.
இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதற்காக முன்னாள் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு ஸ்மிருதி இராணி அவர்களை சந்தித்து மாண்புமிகு மத்திய சாலைபோக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் இது சம்மந்தமாக பலமுறை பேசி விரைவில் இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கக்கூடிய இந்த தருணத்தில் மக்களை திசை திருப்பி நாங்கள் போராடியதால் தான் கல்வி உதவித்தொகை கிடைத்தது என்று சொல்லி இரண்டாம் தர அரசியல் நடத்த காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் துணிந்;திருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்பதை அனைவரும் அறிந்ததே.  
 இது சம்மந்தமாக சட்டமன்றத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க தயாரா?. அதேபோல் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க தயாரா?. மக்களை ஏமாற்றி மத்திய அமைச்சர் கொண்டுவந்த திட்டங்களையெல்லாம் தாங்கள் கொண்டுவந்தது போல ஒரு மாயயை உருவாக்கி ஆதயம் தேடத்துடிக்கிறார்கள்.
குமரி மாவட்டத்தில் பழுதடைந்த மாநில சாலைகளை ரூ.212.30 கோடி மதிப்பில் செப்பனிட மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் ஒதுக்கீடு செய்து இன்று குமரி மாவட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கன்னியாகுமரி முதல் பழைய உச்சகடை வரை உள்ள மாநில சாலையை ரூ.69.5 கோடியில் மத்திய சாலை நிதியிலிருந்து மாண்புமிகு மத்திய சாலைபோக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் ஒதுக்கீடு செய்து 01-06-2016 முதல் பணித்துடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணியை கருங்கல் பகுதியில்  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜேஸ்குமார் அவர்கள்; தன்னிச்சையாக  22-07-2016 அன்று தொடங்கி வைப்பது போல பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்து விளம்பரம் தேடுவது அவருக்கு வாக்களித்த வாக்காளர்களை ஏமாற்றும் செயல்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வளர்ச்சி பணிகளால் குமரி மாவட்ட மக்களிடையே பாரதிய ஜனதா கட்சிக்கும் மாண்புமிகு மத்திய சாலைபோக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் ஏற்படும் நற்பெயரை எப்படியாவது களங்கப்படுத்த வேண்டும் என்று கங்கனம் கட்டி வேலை செய்யும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களால் இந்த மாவட்டத்திற்கு இழிவைத்;தேடி தருமே தவிர வேறொன்றும் இல்லை.
குமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார மேம்பாட்டிற்காகவும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்திற்காகவும் கொண்டுவரப்பட்ட குளச்சல் துறைமுகத் திட்டத்தை எதிர்க்கும் இந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்த குமரி மாவட்ட வாக்காளர்களை ஏமாற்றும் செயலாகும்.
குமரி மாவட்டத்தில் இரட்டை இரயில் பாதை, நான்கு வழிச்சாலை, மேம்பாலங்கள், துறைமுகம் என குமரி மாவட்ட வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது என்பது சூரியனைப்பார்த்து நாய்குரைப்பது போன்றதாகும்.
இந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் மக்கள் விரோத போக்கை குமரி மாவட்ட மக்களும், மாவட்ட வளர்ச்சியில் அக்கறை கொண்ட எவரும் மன்னிக்க மாட்டார்கள் என்பது உறுதி.
கன்னியாகுமரி மாவட்டத்தினுடைய 60 ஆண்டுகால கனவுத்திட்டமான குளச்சல் துறைமுகத்திட்டத்தை எதிர்க்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களையும், அவர்களின் வீடுகளையும் பாரதிய ஜனதா கட்சி முற்றுகை போராட்டம் நடத்தும். மேலும் குமரி மாவட்ட வளர்ச்சிக்காக எதிராக செயல்படும் குமரி மாவட்டத்தினுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் அவர்களை எதிர்த்து போராடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் தாயகப்பணியில்

No comments:

Post a Comment