கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூரை நோக்கி 45 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே போல் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரியை நோக்கி கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி அருகே சூளகிரி என்கிற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது எதிரே உள்ள சாலையில் நிறுத்துவதற்காக லாரி திரும்பியது அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து லாரியின் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த, 8 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் கதிரவன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஸ்னா ஆகியோரும் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்து குறித்து நேரில் விசாரணை நடத்தினர்.

No comments:
Post a Comment