Tuesday, 19 July 2016

ஃபட்டிஸ் பிரைடல் எம்போரியோ' என்னும் பெண்களுக்கான பிரத்தியேக அழகு சாதன ஷோரூமை துவங்கி வைத்தார் நடிகை ரம்யா நம்பீசன்.





தன்னுடைய எதார்த்தமான பாவனைகளால், காதல் - கோபம் - பயம் என அனைத்து குணங்களையும் மிக அழகாக திரையில் பிரதிபலித்து, தமிழக ரசிகர்களின்  உள்ளங்களை கவர்ந்தவர் நடிகை ரம்யா நம்பீசன். நடிப்பு மட்டுமில்லாமல் ஆடை வடிவமைப்பு போன்ற பெண்களின் அழகு சாதன துறையில் அதிக ஆர்வம் கொண்ட ரம்யா, தற்போது 'ஃபட்டிஸ் பிரைடல் எம்போரியோ' வுடன் இணைந்து பெண்களுக்கான பிரத்தியேக  அழகு சாதன ஷோரூமை சென்னையில்  துவங்கி  இருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, சென்னையில் உள்ள ரெசிடன்சி டவர்சில் நடைபெற்ற  'ஃபட்டிஸ் பிரைடல் எம்போரியோ' வின் துவக்க விழாவில் நடிகை பாவனா, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, தொலைக்காட்சி புகழ் விஜய் ஆதிராஜ், பாடகியும், நடிகையுமான சுசித்ரா மற்றும் நடிகர் பாஸ்கி ஆகியோர் பங்குபெற்று விழாவை சிறப்பித்தனர். முற்றிலும் தனித்துவமான ஆடைகளை உள்ளடக்கிய 'ஃபட்டிஸ் பிரைடல் எம்போரியோ' ஷோரூமானது, சென்னை மந்தைவெளியில் உள்ள ஆர்.கே மட் ரோடில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment