என்னதான் இந்தியாவில் வெவ்வேறு மொழி பேசும் மக்கள் பல்வேறு கலாச்சாரத்தையும், மரபையும் கடைப்பிடித்து வந்தாலும், 'கல்யாணம்' என்று வரும் போது அனைத்து தரப்பு பெற்றோர்களும் உணர்ச்சிகளால் தான் கட்டப்படுகின்றனர். இந்த கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது தான் 'கல்ச்சர் மிஷின் - புட் சட்னி' இணையத்தள சேனலின் புதிய படைப்பு 'கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட்' .
எட்டு பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ள 'கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட்' தொடரானது, 27 வயதான கௌதம் என்னும் 'ஐ டி' ஊழியரின் வாழ்க்கையை மையமாக கொண்டு நகரும். பொதுவாகவே நமது நாட்டில் 27 வயது வந்து விட்டாலே, "என்னடா தம்பி, எப்போ கல்யாணம்" என்று கேட்டு சுற்றி திரியும் சொந்தக்காரர்களும், அக்கம்பக்கத்தினரும் பலர் உண்டு. அதே போல் தான் கௌதமின் வாழ்க்கையிலும் 'கல்யாணம்' என்ற சொல் கபடி விளையாடுகிறது.
ஆனால் 'தன் சொந்த காலில் நின்று சாதித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன், அதுவும் காதல் திருமணம் தான்' என்று வைராக்கியத்துடன் இருக்கும் கௌதம், எப்படி இந்த பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என்பது தான் 'கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட்' தொடரின் கதை. நகைச்சுவை சரவெடியாக உருவெடுத்திருக்கும் இந்த 'கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட்' என்னும் இணையத்தள தொடரானது, வெகு விரைவில் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்து இழுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
No comments:
Post a Comment