Wednesday, 27 July 2016

காதலும் கடந்து போகும்(காககபோ) ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களிடம்எந்தவித அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்டது




புதுக்கோட்டை மாவட்டம், காரைக்குடியில், FUN என்ற லோக்கல்  கேபிள்TV சேனலில் கதகளி, காதலும் கடந்து போகும்(காககபோ) ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களிடம் எந்தவித அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்டது , இதுக்குறித்து நடிகர் சங்க  செயற்குழு உறுப்பினர்கள் திரு.ஸ்ரீமன், திரு.நந்தா ஆகியோர்களுக்கு
தகவல் வந்தது, இந்தத் தகவலை உடனே நடிகர் சங்க பொதுச்செயலாளர் திரு.விஷால் அவர்கள் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் திருமதி. ஜெயலட்சுமி IPS அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டு ,அவரது உத்திரவின் படி தனிப்படை ஆய்வாளர்கள் திரு.பாலமுருகன், திருமதி.ராஜேஸ்வரி, திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு.சதீஷ்குமார் ஆகியோர்கள், மேற்கண்ட லோக்கல் சேனலின் ஒளிபரப்பிற்கு தேவைப்படும் உபகரணங்களை பறிமுதல் செய்து, அந்தசேனலின் உரிமையாளர் மற்றும் ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்களென நடிகர் சங்க செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment