கெயில் எரிவாயுக் குழாய் பாதையை நெடுஞ்சாலை ஓரமாக அமைக்க முடியாது எனப் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு என்ன செய்யப்போகிறது எனத் திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொச்சியில் இருந்து பெங்களூருக்கு அமைக்கப்படும் எரிவாயுக் குழாய் பாதையைத் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக அமைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். தமிழக விவசாயிகளுக்குப் பாதகம் இல்லாமல் நெடுஞ்சாலை ஓரமாகக் குழாய்ப்பாதை அமைக்க வேண்டும் என்று திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியதையும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக அரசும், விவசாயிகளும் விரும்புவதைப் போல நெடுஞ்சாலைகள் வழியாக உயர் அழுத்தக் குழாய்களைப் பதிப்பது சாத்தியமில்லை என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடாளுமன்றத்தில் பேசியிருப்பதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் விவசாயிகளின் அச்சத்தைப் போக்கத் தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்றும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment