'ரிக்ஷாக்காரன்' படத்தின் அனைத்து பாடல்களும் இன்றளவும் எல்லா தலைமுறையினராலும் ரசிக்க கூடியதாகஇருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் 'ரிக்ஷாக் காரன்' படத்தின் இசையமைப்பாளர் 'மெல்லிசை மன்னர்'எம்.எஸ்.விஸ்வநாதன். அதுமட்டுமின்றி இந்த படத்தில் தான் மஞ்சுளா கதா நாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
"எம்.ஜி.ஆரின் படமானது வெளி வர போகிறது என்று தெரிந்தால் போதும், எப்படியாவது முதல் நாளுக்குரியடிக்கெட்டை நான் வாங்கி விடுவேன். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரின் தீவிர பக்தன் நான். அந்த வகையில் அவர் நடிப்பில்வெளியான 'ரிக்ஷாக்காரன்' இன்றளவும் என் மனதில் ஒன்றி இருக்கிறது. விரைவில் நாம் அனைவரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளோம். அந்த விழாவின் முதற் கட்டமாக இந்த 'ரிக்ஷாக்காரன்' படத்தை தற்போதைய நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கேற்ப மேலும் மெருகேற்றி, எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்க இருக்கிறோம். இந்த நவீன டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட 'ரிக்ஷாக்காரன்'திரைப்படம், எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்..." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'குவாலிட்டி சினிமாவின்' டி.கே. கிருஷ்ணகுமார்.
No comments:
Post a Comment