Wednesday 4 November 2015

ஒரே இரவில் நடக்கும் கதை! எட்டே நாட்களில் எடுக்கப்பட்ட படம்!


 அன்புள்ள பத்திரிக்கையாளர்களுக்கு கிரிங் கிரிங் படத்தின் செய்தியை அனுப்பியிருக்கிறேன், இதை உங்களது மேலான பத்திரிக்கை மற்றும் இணையதளங்களில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


                          எட்டே நாட்களில் எடுக்கப்பட்டுள்ள க்ரைம் திரில்லர் படம் 'கிரிங் கிரிங்'.

செய்யாத கொலைக் குற்றத்தில் சிக்கிக் கொள்கிற நாயகன் அதிலிருந்து மீளப்போராடுகிறான்.அதிலிருந்து வெளியே வரஅவன் தவிக்கிற தவிப்பும்  பதைபதைக்கிற பதற்றமும் . போராட்டமும்தான் கதை.

இது ஒரு முழுநீள க்ரைம் த்ரில்லர். இது ஒரே இரவில் நடக்கும் கதை.

நாயகனாக ரோஹன் நடித்திருக்கிறார் இவர் ஏற்கெனவே சிலபடங்களில் தோன்றியவர். நாயகியாக காவ்யாநடித்துள்ளார்.

படத்தை எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் ராகுல். இவர் வின்சென்ட் செல்வாவின் மாணவர்.

படத்தில் நடித்துள்ள நாயகன் ரோஹன் உள்பட பெரும்பாலான நடிகர்கள் கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள்.

படத்தின் பரபரப்புக்கு வேகத்தடையாக இருக்குமென்று பாடல்கள் படத்தில் இடம் பெறவில்லை.

சென்னை, தூத்துக்குடி போன்ற இடங்களில் எண்ணி எட்டே நாட்களில் படப்பிடிப்பை முடித்து வந்திருக்கிறார் இயக்குநர்ராகுல்.

படத்துக்கு ஒளிப்பதிவு துவாரகேஷ், இசை ஜூடு, படத்தொகுப்பு சிவதர்மா.

நிறைய குற்றங்களில் துப்பு துலங்கி குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க உதவியாக இருப்பது மொபைல் போன்தான்.படத்தில் மொபைல் போனின் 'கிரிங் கிரிங்' ஒலி பெரிய திருப்பங்களுக்கு வழிவகுப்பதால்  படத்துக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எட்டே நாளில் ஒரு படமா? அவசரக் கோலமாக இருந்து விடாதா என்று இயக்குநர் ராகுலிடம் கேட்டபோது " நன்றாகத்திட்டமிட்டால் எதையும் செய்ய முடியும். இது ஒரே இரவில் நடக்கும் கதை. அதனால் எட்டே நாட்களில் எடுத்துமுடித்தோம். இதன் பின்னால் சரியான திட்ட மிடலும் பலரது உழைப்பும் இருந்தது. இது அவசரமாக எடுக்கப்பட்டபடமல்ல. விறுவிறுப்பான திரைக்கதை. இருக்கும்.எனவே பரபரப்புக்குப்  பஞ்சமிருக்காது.

இன்று 2 கோடி 10 கோடி பணம் இல்லாமல் படம் எடுக்க முடியாது என்று பேசுகிறார்கள்.. ஆனால் படத்தின் தயாரிப்பு ச்செலவைக் காட்டி வியாபாரம் செய்ய முடியாது. படத்தில் புதுமை, இருக்க வேண்டும். கதை சொல்லும் விதத்தில்வித்தியாசம் காட்ட வேண்டும். அப்படி எடுக்கப் படுகிற படத்துக்கு வியாபாரிகள் வருவார்கள். வியாபாரம் நடக்கும்."என்கிற இயக்குநர் ,தனக்கு இயக்கத்துடன் தயாரிப்புத் திறமையும் இருப்பதால் 'ஆர்பி எம் சினிமாஸ் 'சார்பில் படத்தைத்துணிந்து தயாரித்ததாகக் கூறுகிறார். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

No comments:

Post a Comment