Saturday 7 November 2015

Ulkuthu


"Ulkuthu" is tipped to be a film that carries lot of punch in terms of content, costing and casting. Produced by Kenanya Films Selvakumar J, Starring Attakathi Dinesh and Directed by Caarthick Raju, the trio behind the success of the block buster Thirudan Police, Ulkuthu has created interest in the trade circles with it's sheer content strength. The film is Co-Produced by G. Vittal Kumar.

Nandita is paired opposite Dinesh and the cast includes Bala Saravanan, John Vijay, Chaya Singh, Sriman, Sharat (pandia nadu fame), Dilip Subburayan and Chef Damodharan etc

After an intensified shooting schedule, Ulkuthu is on the verge of completion and the post productions work are in full swing. 

Ulkuthu will be a visual treat to all. The coral blue and the green pastures are the mood and feel of the film. I assure the audience thatUlkuthu will definitely fulfil the expectation that is created over my earlier film. The first look of Ulkuthu will be revealed with the release of "Oru Naal Kuthu" and the breezy audio will be released in the month of December. 

Ulkuthu will be delivering the punches from Pongal" sums up Director Caarthick Raju. 


உள்குத்து

தயாராகி வரும் படங்களில் 'உள்குத்து' பெரிதும் எதிர்ப்பார்ப்புக் குரிய படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது. 'அட்டகத்தி' தினேஷ் கதாநாயகனாக நடிக்க , கார்த்திக் ராஜு  இயக்க,kenanya films ஜே .செல்வகுமார் தயாரிக்க 'திருடன் போலீஸ்' படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறது. ஜி .விட்டல் குமார் இணை தயாரிப்பில் உருவாகும் 'உள்குத்து'  வர்த்தக ரீதியாக, எல்லா தரப்பு மக்களையும் கவரும் படமாக இருக்கும் என்றுக் கணிக்க படுகிறது.
தினேஷுக்கு இணையாக நந்திதா நாயகியாக நடிக்கும் 'உள்குத்து' படத்தில் அவர்களோடு  பால சரவணன்,ஜான் விஜய்,சாயா சிங்,ஸ்ரீமன்,'பாண்டிய நாடு' சரத்,திலிப் சுப்புராயன்,மற்றும் சமையல் கலை தாமோதரன் ஆகியோர் நடித்து உள்ளனர். இடைவிடாத படப்பிடிப்பை தொடர்ந்து 'உள்குத்து' இறுதிக் கட்ட பணிகளை எட்டிக் கொண்டு இருக்கிறது.
'உள்குத்து'  கண்களை மட்டுமல்ல , கருத்தையும் கவரும் வண்ணம் படமாக்கப் பட்டு உள்ளது. கடலின் வண்ணமும், கடல் பாசியின் வண்ணமும் படத்தின் வண்ணத்தையும், கடலை சார்ந்த மனிதர்களின் எண்ணத்தையும் பிரதிபலிக்கும் படமாக இருக்கும் . எனது முந்திய படமான 'திருடன் போலீஸ்' ஏற்படுத்தி உள்ள அபிப்ராயத்தை இந்தப் படமும் காப்பாற்றும்.'உள்குத்து' படத்தின் First look 'ஒரு நாள் கூத்து'  திரைப்படம் வெளி வரும்  நாளில் வெளி ஆகிறது. 'உள்குத்து' இசை டிசம்பர் மாதம் வெளி வர உள்ளது. 2016 ஆம் பொங்கல் அன்று ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது 'உள்குத்து' என்று தெரிவித்தார் இயக்குனர் கார்த்திக் ராஜு. 


No comments:

Post a Comment