Tuesday 22 December 2015

Actor Selvah

Popular actor Selvah who had done many successful films as a  Hero in his earlier days, has began his second innings very sharply. His performance in the role of a cop in the recently released  hit film 'Eetti' is well appreciated by the media as well as the audience. Not surprising since his father him self was a senior cop in the ranks and his brother Dr Rajasekar was the Hero of the epic 'Ithuthanda Police' . 

Selvah an entrepreneur and educationalist by his alternate profession says ' When director Ravi Arasu approached me for this role and described the importance of this character in determining the flow of the film, i was very happy. Not just because it was a come back sort of film for me but also because even in my prime days i never had an opportunity to play a senior cop a role which i wanted to play very badly. After all i grew seeing them. I take this opportunity  to thank Director Myskkin  for the opportunity he had provided in his films. I am now focusing on roles of content that are challenging and that gives me the satisfaction of performing. An actor irrespective of the market is born as an actor and will prefer dying as an actor, and will always keep trying to better his earlier records, and i am no exception  Selvah declares with a confidence level that is as sharp as his role in 'Eetti'. 

பல படங்களில் கதாநாயகனாக நடித்த செல்வா, சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றிப் பெற்ற 'ஈட்டி' படத்தில் ஒரு காவல் அதிகாரியாக நடித்து இருந்தார். அவரது வேடம் ரசிகர்கள் மத்தியிலும் , ஊடகங்கள் இடையேயும்,பெரும் வரவேற்ப்பை பெற்று உள்ளது.போலீஸ் வேடத்தில் இவர் கச்சிதமாக பொருந்தி உள்ளத்தில்  ஆச்சிரியம் இல்லை. காரணம்  இவரது தந்தை ஒரு ஓய்வுப் பெற்ற உயர் காவல்  அதிகாரி. அதைத் தவிர இவரது அண்ணன் தான் 'இதுதாண்டா போலீஸ்' படத்தில் மூலம் காவல் துறைக்கு பெரும் கெளரவம் ஈட்டித் தந்த டாக்டர்  ராஜசேகர்.
தொழில் அதிபராகவும், கல்வி   நிறுவனங்களின் நிறுவனராகவும் உள்ள செல்வா இதைப் பற்றிக்  கூறும் போது '  இந்த வேடத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் ரவி அரசு என்னை அணுகி ,  கதாபாத்திரத்தை விவரித்த போதே , எனக்கு இந்தப் படம் நான் மீண்டும் தமிழ் திரை உலகில் வர சரியான படம் என்றுத் தோன்றியது. அதை தவிர ஒருக் காவல் அதிகாரியின் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் கனவு. சின்ன வயதில் இருந்தே நான் காவல் அதிகாரிகளை பார்த்து வளர்ந்ததாலே   என்னுள் அந்த உணர்வு மேலோங்கியே இருக்கும்.நான் மீண்டும் நடிக்க உந்துதலாக இருந்த இயக்குனர் மிஷ்கினுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நான் தற்போது நல்ல குணசித்திர மற்றும் negative பாத்திரங்களில் கூட நடிக்கலாம் என்று இருக்கிறேன்.கனமான பாத்திரங்கள் இருந்தால் , நல்ல நடிப்பை வெளிபடுத்தும் கதாபாத்திரங்கள் அமைந்தால்  நிச்சயம் நடிக்க தயார்.ஒரு நடிகனாக பிறவி எடுத்து விட்டால் சாகும் வரை நடிகன்தான் . நாயகனோ ,  வில்லனோ,குணசித்திர  வேடமோ அதை பற்றிக் கவலை படக் கூடாது' என்றார்.



No comments:

Post a Comment