Tuesday 28 July 2015

Aagam






'Aagam' to pay a rich tribute to the departed 'Visionary' Dr Abdul Kalam


'Aagam' produced by Koteswara Raju (An NRI from London) of Jyostar Enterprises will pay a rich tribute to the departed 'Visionary' Dr Abdul Kalam says the Director Dr. V. Vijay Anand Sriram .

‘Aagam’ directed by Dr. V. Vijay Anand Sriram is a well-defined film on today's educational system that leads to career and job scenario existing in the country

 'There are few multi million dollar scams in HRD market  that are rocking the country currently and the pinnacle of that are originated from the problem 'Job Hunt'. Every body and any body want to settle down especially in abroad. The term settling down in my opinion is the most abused  term as far as the our society is concerned. In today's economic and social situation, job security is a matter of concern. The export of quality Indian brains in search of green pastures all over the world compounds the problem. If the Quit India movement was the need of the hour in pre independence era,  Don't quit India is the need of the hour today. 'Aagam' is a script webbed around these factors and a possible proven solution will be the climax.

Who better than Dr. Abdul Kalamji would be the brand ambassador for this progressive idea we thought and we have recorded a song on him and we were about to seek his audience for the same. But the fate decided otherwise and here we stand in loss of words as the rest of the nation does. We have decided to go ahead with the song and we will pay homage to the departed leader with a special song on him , which i am sure will show class the man whom we loved and adored'  concluded Director Dr.Sriram with moisture and pain in his eyes.  

‘ஆகம்’

முனைவர் V விஜய் ஆனந்த் ஸ்ரீ ராம் இயக்கத்த்தில் ஜோஸ்டார் எண்டெர்ப்ரைசஸ் நிறுவனம் சார்பாக கோடீஸ்வர ராஜு தயாரிக்கும் திரைப்படம் ‘ஆகம்’. இத்திரைப்படக்குழு மறைந்த மாமேதை அப்துல்கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு பாடலை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது.
இன்றைய கல்வியின் நிலையை பற்றியும், கற்ற கல்விக்கான வேலை வாய்ப்புகள் தரத்தை பற்றியும்  நேரடியாக சொல்லும் கதை தான் ‘ஆகம்’.

ஒவ்வொரு தனி மனித தேவையும், சமூதாய நிலையும் இன்றைய காலக்கட்டத்தில் வேலை வாய்ப்புக்கான தேடலை அதிகப் படுத்தியுள்ளது. உலகெங்கும் கொட்டி கிடக்கும் வாய்ப்புகளை எட்டிபிடிக்க நினைக்கும் இன்றைய சமூதாயத்தின் வெளிநாட்டு மோகமும், தான் நிலை பெற வேண்டும் என்ற எண்ணமும் இன்று பல இளைஞர்களை உலுக்கி வருகிறது. இதனால் பல்லாயிரக் கணக்கான கோடி டாலர் ஊழலும் மனித வளத் துறையில் நிகழ்ந்து வருகிறது. 
சுதந்திரத்துக்கு  முன் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கங்கள் ஓங்கி ஒலித்திருந்தன. அதேபோல் இன்று இந்தியாவை வளர்ச்சி பாதையில் இட்டுசெல்ல ‘இந்தியனே வெளியேறாதே’ என்ற முழக்கம் ஒவ்வோரு மாணவனுக்கும் எட்டும் வகையில் ஒலிக்க செய்ய வேண்டியிருக்கிறது. இத்தகைய சிக்கல்களும் அதனை நிவர்த்தி செய்யும் வழி வகைகளையும் ஆராயும் படம்தான் ‘ஆகம்’. 
“ நாட்டின் முன்னேற்றத்தை தன் முழு மூச்சாக கொண்டிருந்த திருஅப்துல் கலாம் அவர்களைப் பற்றி ஒரு பாட்டு எங்கள் படத்தில் அமைத்துள்ளோம் அதை அவருக்குக் திரையிட்டு காட்டவும்  திட்டமிட்டுமிருந்தோம். காலத்தின் கட்டளையால் இந்த நாடே அவரை இன்று இழந்து தவிக்கிறது. நாட்டு மக்களின் அன்பையும் , ஆதர்ஷத்தையும் பெற்ற திரு.கலாம் அவர்களை பற்றி இயற்றிய பாடல் கொண்டே அந்த மாமேதைக்கு, உன்னத ஆன்மாவிற்கு அஞ்சலி செய்ய எங்கள் படக் குழு திட்டமிட்டுள்ளது.” தன் கண்கள் கலங்க கூறினார் முனைவர் V விஜய் ஆனந்த் ஸ்ரீ ராம்


No comments:

Post a Comment