Wednesday 22 July 2015

KALAM will excite you with surprises – says director Robert S Raj





 ரசிகர்களுக்கு  புது அனுபவத்தை தரும் ' களம்' - ராபர்ட் S ராஜ்
அருள் மூவீஸ் பி. கே . சந்திரன்  தயாரிப்பில் வெண்ணிலா கபடி குழுஸ்ரீநிவாசன், 'சுட்ட கதை'  நாயகி லக்ஷ்மி பிரியா, 'கோலி சோடாமதுசூதனன், SS Music பூஜா,ஹம்ஜத், கனி குஷ்ருதி மற்றும் பேபி ஹியா நடித்திருக்கும் படம் ‘களம்’. ஜீவா சங்கரின் உதவியாளர் ராபர்ட்.S. ராஜ் இயக்குனராக  அறிமுகமாகிறார்.
படத்தை பற்றி இயக்குனர் ராபர்ட்.S. ராஜ் கூறியதாவது “ ‘களம்’ சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணி திரைப்படம். படம் பார்க்கும்பொழுது ஆடியன்ஸ் எதிர்பார்பதை மட்டுமின்றி எதிர் பாராததையும்  ஆச்சர்யம் ஊட்டும் வகையில்  ஒரு கதை நடையை கொண்ட திரைப்படம் ‘களம்’. வழக்கமான ஒரு திரைக்கதைகளிலிருந்து வித்தியாசமாக  இருக்கும். சூபீஷ் சந்திரன் கதை,திரைக்கதை மற்றும் வசனத்தில் இப்படம் கண்டிப்பாக ரசிகர்களை மகிழ்விக்கும்",  எனக் கூறினார் ராபர்ட்.”
“தொழில்நுட்பத்திலும், கதையம்சத்திலும் சர்வதேச தரத்தினுடையதாய் அமைய திறன் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களை உள்ளடக்கியுள்ளது ‘களம்’ திரைப்படம். வெளி வர இருக்கும் 'ஆந்திரா மெஸ்' படத்தின் டீசெர் மூலம் திரை உலகினர் இடையே பெரும்பெயர் எடுத்த முகேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
‘ரௌத்திரம்’ புகழ் பிரகாஷ் நிக்கி இசைஅமைக்க ,பிரபாகர் படத்தொகுப்பு செய்கிறார். ‘எந்திரன்’ திரைப்படத்தில் பணிபுரிந்த கிராபிக்ஸ் வல்லுனர்கள் ‘களம்’ படத்தில் CG பணிகளை மேற்கொண்டுள்ளார்கள் .என்பது குறிப்பிடத்தக்கது.
“ படத்தின் பெரும்பகுதி ஒரு வீட்டினுள் அமைந்திருக்கிறது. அந்த வீடுதான் படத்தின் ஜீவ நாடி என்பதால் அந்த தேடுதலே எங்கள் உழைப்பில் பல நாட்களை விழுங்கியது.அந்த தேடுதலின் பலன், நாங்கள் தேடிய மாதிரியே ஒரு ஜமீன் வீடு கிடைத்தது.அந்த வீடுதான் செந்தூர பூவே படத்தில் வந்த வீடு என்றதும் எங்களுக்கு ரொம்ப பெருமைதான். படத்திலும் அது ஒரு ஜமீன் வீடாகவே படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கதை மற்றும் தொழில்நுட்ப சிறப்புகளையும் எண்ணத்தில் கொண்டு எங்கள் குழு முழு திறத்தில் வேலை செய்துள்ளோம். ‘களம்’ அனைத்து விதமான ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாய் அமையும்.” எனக் கூறினார் அறிமுக இயக்குனர் ராபர்ட் S ராஜ்.


KALAM will excite you with surprises – says director Robert S Raj

 Arul Movies P.K Chandran presents the movie ‘Kalam’ starring Shrinivasan N.L of 'Vennila kabadi Kuzhu', Lakshmi Priya of 'suttakathai', 'Goli soda' fame Madhusudhanan Rao, SS Music Pooja, Hamzad and Kani Kusruthi, Baby Hiya playing the main characters in the film.Debutant director Robert S Raj , who had associated with Director Jeeva Shankar is directing the film ‘Kalam’. 
“’Kalam’ is a suspense thriller with very unique pattern of screenplay written to give away the audience the pleasure of getting what they expected and excitement of the surprises throughout the movie. Subish.K. Chandran has written the story, screenplay and dialogues. Audience are very much attracted towards the presentation quality of the film nowadays. To match the international level of standards We have got the best of best onboard namely Mukesh as the Cinematographer, Prakash Nikki of Rowthiram Fame Music Composer and Prabhakar handling the editing. The CG team which worked in the film ‘Endhiran’ is been roped in for ‘Kalam’. “ says Robert S Raj
“The challenging part of the script was to have a house with some artistic architecture. After a vast search, We narrowed down to a Zamin House coincidentally the house mentioned in the script was also a Zamin house. The film will surely be a visual treat for the audience. This was the same house we saw in ‘Senthoora Poove’ two decade ago. “
“Having the competitive quality of script wise and technicalities in mind the whole crew worked day and night. This film will definitely be a different experience for the audience.” Signed off the Debutant director Robert S Raj.

No comments:

Post a Comment