Monday 25 April 2016

என்னுள் ஆயிரம்


புட் சட்னி நிறுவனத்தாரின் அடுத்த வீடியோ -கதைகள் ஆயிரம். டெல்லி கணேஷின் தயாரிப்பில் அவரது மகன் மகா நடிக்கும் என்னுள் ஆயிரம் திரைப்படத்தின் விளம்பர வீடியோ.

சமீபமாக தமிழ் திரைப்படங்கள் இணைய தளத்தில் வெளி வரும் வீடியோ மூலம் ரசிகர்கள் இடையே வெகு வேகமாக பிரபலமாகி வருகிறது.அந்த வகையில் புட் சட்னி நிறுவனம் அத்தகைய வீடியோ படங்களை தயாரித்து வெளியிடும் நிறுவனங்களில் முன்னோடியாக இருக்கிறது.ஜில் ஜங் ஜக் , மிருதன் ஆகிய படங்களுக்கு இந்த நிறுவனம் தயாரித்த வீடியோ படங்கள் ரசிகர்களிடம் வேகமாக சென்று அடைந்தது.இதன் மூலம் அந்த படங்களுக்கும் சிறப்பான விளம்பரமும் , வரவேற்ப்பும் கிடைத்தது. சமீபமாக , அநேகமாக எல்லா நிறுவனமும் புட் சட்னி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விழைகிறது எனலாம்.
மூத்த நடிகர் டெல்லி கணேஷ் தனது மகன் மகா கதாநாயகனாக நடிக்க 'என்னுள் ஆயிரம் ' என்றத் தலைப்பில் ஒருப் படம் எடுத்து அந்தப் படமும் வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்துக்கான வீடியோ ஒன்றையும் புட் சட்னி நிறுவனம் தயாரித்து உள்ளது
.'ஒரு தயாரிப்பாளராக டெல்லி கணேஷ் கதை கேட்ட சம்பவங்களை கோர்வையாக வெகு விமரிசையாக, நகைசுவை மிளிர எடுக்கப் பட்டு உள்ளது இந்த வீடியோ'.
இந்த வீடியோ ரசிகர்கள் இடையே புட் சட்னி நிறுவனத்தாரின் முந்தைய வீடியோ போலவே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படத்தும் என நம்பிக்கை தெரிவித்தார் டெல்லி கணேஷ்.

No comments:

Post a Comment